For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்ணுணர்வு நோய் என்றால் என்ன?குழந்தைகளுக்கு வந்தால் எப்படி காப்பது?

By Bala Karthik
|

சில சமயங்களில், உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உங்கள் உடம்பில் இருக்கும் ஆரோக்கியமான திசுக்களை கண்டுகொள்ளாமல் போகலாம். அதனால், அந்த திசுக்களை உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் , கிருமி அல்லது எதிரி என நினைத்து அதனோடு போராடி விரட்டியடிக்கும். இந்த காரணத்தினால் தான் ஆட்டோ இம்யூன் நோய்கள் நமக்கு ஏற்படுகிறது.

ஆட்டோ இம்யூன் நோய்கள் இரண்டு வகைப்படும். அவை சிஸ்டமிக் மற்றும் லோக்கலைஸுடு எனப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிஸ்டமிக் ஆட்டோ இம்யூன் நோய்:

சிஸ்டமிக் ஆட்டோ இம்யூன் நோய்:

உங்கள் சருமத்தில் பல்வேறு உறுப்புகளுக்கு பரவி இறுதியில் சிறுநீரகத்தையும், அதே சமயத்தில் இதயத்தையும் பாதிக்கிறது.

லோக்கலைஸுடு ஆட்டோ இம்யூன் நோய்:

லோக்கலைஸுடு ஆட்டோ இம்யூன் நோய்:

இது உடம்பில் குறிப்பிட்ட உறுப்புகளான தைராய்டு, கல்லீரல் அல்லது அட்ரீனல் சுரப்பிகளை பாதிக்ககூடியதாக இருக்கிறது.இந்த ஆட்டோ இம்யூன் நோய்களின் தாக்கத்தால் உடம்பில் எந்த ஒரு உறுப்பையும் பாதிக்க கூடும் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உங்கள் மூட்டுகள், இரத்த குழாய்கள், சிவப்பு இரத்த அணுக்கள், இணைப்பு திசுக்கள், தசைகள், அல்லது அது தாக்ககூடிய ஒரு பகுதி, உங்கள் நாளமில்லா சுரப்பிகளாக (கணையம் அல்லது தைராய்டு) கூட இருக்கலாம். குழந்தைகளையும் கூட இந்த ஆட்டோ இம்யூன் நோய் தாக்குகிறது.

குழந்தைகளுக்கு காணப்படும் பொதுவான ஆட்டோ இம்யூன் நோய்களாக கல்லீரல் நோய், செலியாக் நோய், அடிசன் நோய், AT (ஆட்டோ இம்யூன் தைராய்டிட்டிஸ்) JA (இளமை வாதம்), ஜூவெனில் சிக்லரோடெர்மா, வகை 1 நீரிழிவு, கவாசகி நோய், MAS (மல்டிபிள் ஆட்டோ இம்யூன் சின்ட்ரோம்), பெடியாட்ரிக் லூபஸ் (SLE) என பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

தலைசுற்றுதல் , சிறிய காய்ச்சல் , களைப்பு, வாய் வரண்டு காணப்படுதல் (அ) கண்கள் வரண்டு காணப்படுதல், எடை இழப்பு , மூட்டு வலி, தோல் தடித்து போகுதல்

இந்த குறிப்பிட்ட அறிகுறிகள், உங்கள் உடம்பின் உறுப்புகளில் தோன்றுவதனை கொண்டு இந்த நோயால் பாதிக்கப்படுவதை நீங்கள் உணரலாம்.

இந்த பொது அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு இருக்குமெனில் அவர்களுடைய உடல் நிலை மோசமடைய தொடங்குகிறது என்று அர்த்தம். களைப்பு மற்றும் தடித்து போவதன் மூலம், குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்... வயது நிரம்பியோரும் இந்த நோயால் பாதிக்கப்படுவதை நாம்

ஆட்டோ இம்யூன் நோயை குணப்படுத்துவது எப்படி?

ஆட்டோ இம்யூன் நோயை குணப்படுத்துவது எப்படி?

முதலில்... தோன்றும் அறிகுறிகளை போக்குவதே, இந்த நோயிற்கான முதன்மை சிகிச்சையாக இருக்கிறது. இந்த நோயால் ஏற்படும் விளைவுகளை கட்டுபடுத்த இந்த முதன்மை சிகிச்சை உதவ, நோய்களை எதிர்த்து போராடி குழந்தைகளை பழைய நிலைக்கு கொண்டு வர இது பெரிதும் உதவுகிறது.

இந்த ஆட்டோ இம்யூன் நோயிலிருந்து உங்களை காத்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டிய சில சிகிச்சைகளை இப்பொழுது பார்க்கலாம்.

இரத்தமாற்றம்:

இரத்தமாற்றம்:

உங்கள் குழந்தைக்கு சிறு நீரகம் மற்றும் கல்லீரலினால் பிரச்சனைகள் ஏற்படுமாயின், இந்த இரத்த மாற்றம் மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால், இந்த நோயால் பாதிக்கப்படும் ஆரம்ப நிலையில் போதுமான இரத்தம் உங்கள் உடம்பில் சேர்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

இணைப்பொருட்கள்:

இணைப்பொருட்கள்:

மேலும் உங்களுடைய மருத்துவர், இன்சூலின், ஹார்மோன்கள் (தைராய்டு போன்றவை), (அ) வைட்டமின்கள் ஆகியவற்றிற்கு பதிலாக சில இணைபொருட்களை உங்கள் குழந்தை உடம்பில் செலுத்தவும் பரிந்துரை செய்கின்றனர்.

பிஸிகல் தெரபி:

பிஸிகல் தெரபி:

உங்கள் குழந்தைக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருந்தால், அது உங்கள் குழந்தையின் மூட்டு, தசைகள், அல்லது எலும்புகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி கொள்கிறது. அதனால் உங்கள் குழந்தைகளின் தசைகளை வலுப்படுத்த பிஸிகல் தெரபி அவசியமாகிறது. இந்த பிஸிகல் தெரபியின் மூலமாக, உங்கள் குழந்தைகளின் உடல் உறுப்புகளை ஈசியாக இயக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Autoimmune Diseases In Children – Symptoms & Treatment

Autoimmune Diseases In Children – Symptoms & Treatment
Story first published: Tuesday, May 30, 2017, 17:13 [IST]
Desktop Bottom Promotion