11 வயதிலேயே 3 பேரை கற்பழித்த சிறுவன்: என்ன நடக்குது இந்த உலகத்துல..?

Posted By:
Subscribe to Boldsky

பிரிட்டனை சேர்ந்த 11 வயது சிறுவன் தன்னை விட வயது குறைந்த 9 வயது சிறுவனை 15 முறை கற்பழித்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக செய்துள்ளது. உலகின் பல சர்வதேச ஊடகங்கள் இச்சிறுவனை பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபட்ட உலகின் மிக இளைய நபர் என செய்தி தலைப்புகளில் குறிப்பிட்டு வருகிறது.

ப்ல்யாக்பூல் எனும் பகுதியை சேர்ந்தவர் இந்த சிறுவன். இது மட்டுமின்றி, இந்த சிறுவன் மேலும் இரு சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்ததாக குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த குற்ற செயல்கள் கடந்த ஏப்ரல், 2015 முதல் ஆகஸ்ட், 2016 ஆகிய காலக்கட்டத்தில் நடந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.

வயதும், எதிர்காலமும் கருதி கோர்ட் அந்த சிறுவரின் பெயரை வெளியிட தடை விதித்துள்ளது. 11 வயதில் ஒரு சிறுவன் இது போன்ற செயல்களில் ஈடுபட என்ன காரணம், இது போன்ற எண்ணங்கள் பிஞ்சு நெஞ்சில் உண்டாக எவை தூண்டுகின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மார்ட் உலகம்!

ஸ்மார்ட் உலகம்!

முன்னர் எல்லாம் தவறான பாதையில் செல்வதற்கு கூட சில தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. பார்ன் பார்க்க மாதம் ஒருமுறை பணம் சேர்த்து வைத்து ப்ரௌசிங் செண்டர் சென்ற காலமும் இருந்தது.

ஆனால், இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அனைத்தும் உள்ளங்கையில் அடங்கிவிட்டது. மனதில் இதுப்போன்ற இச்சை எண்ணம் எழுவதற்கும், இது போன்ற செயலிகளில் ஈடுபட தூண்டுவதற்கும் பார்ன் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள்!

கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள்!

அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற பகுதிகளில் தெருக்கள், பூங்கா, பீச் போன்ற இடங்களில் யாரையும் கண்டுக்கொள்ளாமல் பலர் பல செயல்களில் ஈடுபடுவது, கண்ணெதிரே இந்த நிகழ்வுகளை சர்வ சாதாரணமாக பார்ப்பது சிறார் மனதில் தானும் செய்தால் என்ன தவறு என்ற எண்ணத்தை தூண்டுகிறது.

எதற்கெடுத்தாலும் நிர்வாணம்!

எதற்கெடுத்தாலும் நிர்வாணம்!

சமீப காலமாக எதை எடுத்தாலும் மேற்கத்திய நாடுகளில் நிர்வாணமாக செல்லும் நிகழ்வுகள் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. மேலாடை இன்றி சென்றால் என்ன தவறு என ஒரு பெண் கிளம்புகிறார். நிர்வாணமாக ஊரை சுற்றி வந்து புரட்சி செய்கிறேன், விழிப்புணர்வு பரப்புகிறேன் என ஒரு கும்பல் கிளம்புகிறது. இது போன்ற செயல்கள் தேவை தானா?

சட்டத்திட்டங்கள் வலுவில்லையா?

சட்டத்திட்டங்கள் வலுவில்லையா?

பெரிவயர்கள் செய்யும் தவறுகளுக்கே கடுமையான தண்டனைகள் இல்லை என்ற போது. இதை யார் செய்தால் என்ன என்ற எண்ணம் அதிகரித்து வருகிறதா? சட்டத்திட்டம் வலுவாக இருந்தால் இது போன்ற தவறுகள் குறைய வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பெற்றோர் கவனமின்மை!

பெற்றோர் கவனமின்மை!

என்னதான் சமூகத்தை குற்றம் கூறினாலும். அந்த சமூகத்தில் இருப்பவர்கள் நானும், நீங்களும் தானே. பெற்றோரின் வளர்ப்பு மற்றும் கவனமின்மை இதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெற்ற குழந்தை என்ன செய்கிறான், என்ன கற்கிறான், எந்தெந்த செயல்களில் ஈடுபடுகிறான் என பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

எதை தேடி ஓடுகிறோம்...?

எதை தேடி ஓடுகிறோம்...?

பெற்ற பிள்ளையை சரியாக வளர்க்க தவறி நாம் எதை தேடி ஓடுகிறோம். அடுத்த தலைமுறைக்கு தேவையானது பணமோ, ஆடம்பர வாழ்க்கையோ அல்ல. நல்ல பண்பும், கலாச்சாரமும் கொண்ட ஒரு ஆரோக்கியமான சமூகம். அதை கொடுக்க நாம் எப்போது முயல போகிறோம் என்பது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Eleven Years Old Britain Kid Became Youngest Rapist?

Eleven Years Old Britain Kid Becomes Youngest Rapist, take a look on here.