For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 வயதில் காணப்படும் 'மதி இறுக்கம்' என்னும் ஆட்டிசத்தின் குணாதிசயங்கள்!!!

By Ashok CR
|

மதி இறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்பது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்ட சீர்குலைவாகும். அதற்கான அறிகுறிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக மிக முக்கியமானதாக இருக்கும். தங்களின் பிஞ்சு குழந்தைக்கு ஏதோ குறைபாடு இருக்கிறது என்பதை எந்த ஒரு பெற்றோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு இரண்டு வயதாகும் போதே, மதி இறுக்கத்திற்கான குணாதிசயங்களை கண்டறிய முற்பட வேண்டும். இதனால் இதனை வேகமாக குணப்படுத்தி, அவர்கள் வயதுடைய பிற குழந்தைகளை போல் அவர்களும் இயல்பாக மாறலாம். பொதுவாக இந்த வயதில் தான் பேச்சு, விளையாட்டு மற்றும் பிறரை கையாள பழுகுவதன் அடிப்படையில் குழந்தையின் வளர்ச்சி இருக்கும்.

இந்த வயதில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து, பிற குழந்தைகள் போல் அவர்களும் இயல்பாக இருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும். குழந்தைகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பதால், மதி இறுக்கத்தை விரைவிலேயே குணப்படுத்தலாம். பொதுவாக இந்த வயதில் தான் வளர்ச்சிக்கான பல உயர்படி நிலைகளை குழந்தைகள் சந்திப்பதால், இந்த குறையால் கண்டுபிடிப்பதற்கு இது சரியான வயதாகும்.

மதி இறுக்கத்தின் குணாதிசயங்கள் தங்களின் குழந்தைகளிடம் உள்ளதா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தது முதலே இதனை தொடங்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சி பற்றி, அந்தந்த வயதில் குழந்தை செய்ய வேண்டியது மற்றும் நடந்து கொள்ளும் விதம் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வயதில் காணப்படும் கீழ்கூறிய மதி இறுக்க குணாதிசயங்களை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்ப கட்ட அறிகுறிகள்

ஆரம்ப கட்ட அறிகுறிகள்

கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள், அவர்களை பார்த்து சிரிக்கும் போது பதிலுக்கு சிறுக்க மாட்டார்கள், பொருட்களை சரியாக பின்பற்ற மாட்டார்கள், கவனத்தை ஈர்க்க சத்தம் எழுப்ப மாட்டார்கள், கொஞ்சும் போது எந்த வித உணர்வையும் வெளிக்காட மாட்டார்கள், மழலையில் பேச மாட்டார்கள், தங்களை தூக்கி கொள்ள உங்களிடம் வர மாட்டார்கள்.

சமூக தடுமாற்றங்கள்

சமூக தடுமாற்றங்கள்

சமூக சூழ்நிலையிலும் தங்களின் 2 வயது குழந்தையிடம் மதி இறுக்கத்தின் குணாதிசயங்களை பெற்றோர்கள் சோதிக்க வேண்டும். மதி இறுக்கத்துடன் இருக்கும் குழந்தைகளுக்கு தங்களின் சுற்றியுள்ளவர்கள் பற்றி அக்கறை இருக்காது அல்லது கவனம் இருக்காது. தங்களுக்கு புது நண்பர்களை உருவாக்கி கொள்ள மாட்டார்கள். தங்களை கொஞ்சுவதையும் விரும்ப மாட்டார்கள். அடிப்படையில் தனியாக மற்றவர்களிடம் இருந்து பிரிந்தே இருப்பார்கள்.

பேச்சு மற்றும் மொழி பிரச்சனைகள்

பேச்சு மற்றும் மொழி பிரச்சனைகள்

அவர்கள் பொதுவாகவே தாமதமாக பேச தொடங்குவார்கள். ஒரே மாதிரியான வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசுவார்கள். தங்கள் தேவைகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த சிரமப்படுவார்கள். அதே போல் மொழியை தப்பாக பயன்படுத்துவார்கள். இயல்பற்ற தோரணையில் விந்தையான ஸ்ருதியில் பேசுவார்கள். மதி இறுக்கம் உள்ள குழந்தைகளிடம் காணப்படும் சில அறிகுறிகளில் இவைகளும் சில.

வாய்மொழியற்ற தொடர்பில் கஷ்டங்கள்

வாய்மொழியற்ற தொடர்பில் கஷ்டங்கள்

இரண்டு வயது குழந்தைக்கு உள்ள மதி இறுக்கத்தின் குணாதிசயங்களில் வாய்மொழியற்ற தொடர்பு மிகவும் முக்கியமானதாகும். கண்களை பார்ப்பதை தவிர்ப்பார்கள். அதே போல் அவர்களின் முக பாவம் தாங்கள் என்ன சொலல் வருகிறார்கள் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். நம் குரல் அல்லது செய்கைக்கு அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். வாசனைக்கும், சத்தங்களுக்கும் இயல்பற்ற முறையில் எதிர் செயலாற்றுவார்கள். இரண்டு வயது குழந்தைக்கு உள்ள மதி இறுக்க குணாதிசயங்களில் இவைகளும் சில.

இணங்கு தன்மை இல்லாமல் போதல்

இணங்கு தன்மை இல்லாமல் போதல்

புதிய அட்டவணைக்கு ஒத்துப்போக சிரமப்படுவார்கள், விளங்காத பொருட்களின் மீது இயல்பற்ற பாசத்தை வைத்திருப்பார்கள், பொருட்களை ஒரு விதத்தில் அடுக்குவதில் பிடிவாதம் கொண்டிருப்பார்கள். ஒரே செயலை அல்லது அசைவை மீண்டும் மீண்டும் செய்வார்கள். குறுகிய விஷயங்களின் மீதே ஆர்வம் காட்டுவார்கள்.

மேற்கூறியவைகளே குழந்தைகளிடம் காணப்படும் மதி இறுக்க குணாதிசயங்களாகும். ஒவ்வொரு குழந்தையும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் வேறுபடுவார்கள்; இது இயல்பே. அதற்காக செய்ய வேண்டிய வயதில் உங்கள் குழந்தை அந்தந்த செயல்களை செய்யவில்லை என்றால், பொறுந்திருந்து பார்ப்போம் என காத்திருக்காதீர்கள். அது மதி இறுக்கமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Characteristics Of Autism In 2 Year Olds

The following are a few characteristics of autism in 2 year old that parents need to be aware of.
Desktop Bottom Promotion