For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டும் பெண்ணா? கவலை வேண்டாம்!

By Mayura Akilan
|

Baby Girl
மனமகிழ விளையாட மழலைச் செல்வம் இல்லையே என்று ஏங்குவோர் பலர் இருக்கின்றனர். ஆனால் பிறக்கும் பிள்ளை பெண்ணாக பிறந்துவிட்டாலே இல்லாத சோகமெல்லாம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் வேண்டும் என்று வேண்டினாலும் காலச் சூழ்நிலையால் இரண்டுமே பெண்ணாகி விட்டால் என்ன செய்வது?

கவலைப்பட வேண்டாம் என்கிறது ஒரு ஆய்வு. இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு ஒன்று. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

தொல்லை இல்லா பிள்ளைகள்

ஒரு வீட்டில் இரண்டு பெண்குழந்தைகள் இருந்தால் அங்கே சண்டை சச்சரவு எழ வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது. அந்த குழந்தைகள் சமர்த்தாக விளையாடுமாம். வீட்டு வேலைகளிலும் உதவியாக இருக்குமாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள்.

குழந்தைகளின் ஒத்துழைப்பு

ஆண்குழந்தைகளைப் போல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படவும் வாய்ப்பில்லை. அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அவசர நேரத்தில் அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழமாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. இதனால் அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு.

புத்திசாலி ஆண் குழந்தைகள்

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்புடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இரண்டும் ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, அந்த ஆய்வு முடிவு.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த தர வரிசை...

இரண்டு பெண் குழந்தைகள்.
ஒரு ஆண், ஒரு பெண்.
இரண்டு ஆண்.
மூன்று பெண்.
மூன்று ஆண்
நான்கு ஆண்
இரண்டு பெண் ஒரு ஆண்
இரண்டு ஆண் ஒரு பெண்
மூன்று ஆண் ஒரு பெண்
மூன்று பெண் ஒரு ஆண்
இரண்டு ஆண் இரண்டு பெண்
நான்கு பெண்

English summary

Happiest families have Two Girls | ஆனந்தம் விளையாடும் வீடு!

Two girls make for the happiest families. Apparently, two girls play relatively well together, make less noise and are generally nicer to be around. But if You have 4 girls in the house, then there will be no limit for noise, the study says.
Story first published: Wednesday, August 10, 2011, 11:53 [IST]
Desktop Bottom Promotion