Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
பிள்ளைகளே! உங்க பெற்றோரின் 'பெரிய இழப்புகளில்'... அவர்களுக்கு நீங்க எப்படி துணை நிற்கணும் தெரியுமா?
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள்தான் உலகம். அதேபோல ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் பெற்றோர்தான் உலகம். எவ்வளவு வளர்ந்தாலும், பெயர் மற்றும் புகழ் சேர்த்தாலும் நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோருக்கு குழந்தைகளே!
வாழ்க்கையில் நெருங்கியவர்களின் இழப்பு என்பது நம்மை அதிக காயப்படுத்தும். அதுவே, நம் பெற்றோர்களாக இருக்கும்போது, அது நம் வாழ்க்கையே முடக்கிபோட்டுவிடும் அளவிற்கு காயப்படுத்தும். சிறிய வயது அல்லது பெரிய வயது என எந்த வயதில் பெற்றோரை இழந்தாலும், அந்த இழப்பு ஒவ்வொருவரையும் கடுமையாக பாதிக்கும். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்.

இது நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். உங்கள் பெற்றோர், உங்களை பொறுத்தவரை பெரியவர்கள். ஆனால், அவர்களின் பெற்றோருக்கு, அவர்கள் இன்னும் குழந்தைகள்தான். வயதாகும்போது அல்லது ஏதோ சில காரணங்களால் உங்கள் தாத்தா, பாட்டி இறப்பை நீங்கள் சந்தித்து இருக்கலாம்.
நீங்கள் அந்த இழப்பை எடுத்துக்கொள்ளும் விதமும், உங்கள் பெற்றோர் எடுத்துக்கொள்ளும் விதமும் நிச்சயம் மாறுபடும். உங்கள் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோரை இழக்கும்போது ஏற்படும் இந்த உணர்ச்சிகரமான வலியை சிறிதாகவோ அரிதாகவே மட்டுமே நாம் கவனிக்கிறோம். இது தவறானது. அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்
உங்கள் பெற்றோர் பல ஆண்டுகளாக அவர்களின் பெற்றோரிடம் இருந்து விலகியிருக்கலாம் அல்லது வழக்கமான தொடர்பு இல்லாதிருக்கலாம். ஆனால், எந்த பேச்சுவார்த்தையும் இல்லமால் இருந்தாலும், பெற்றோரின் மரணம் அனைவரையும் சமமாக பாதிக்கும். உங்கள் பெற்றோரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஆதலால், உங்கள் பெற்றோர், அவர்களின் பெற்றோரைப் பற்றி உங்களிடம் பேச விரும்பலாம். எனவே அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இந்த நெருக்கடியான காலகட்டத்தின்போது அவர்களுக்குத் தேவையானது, நீங்கள் காத்து கொடுத்து கேட்க வேண்டும் என்பது மட்டுமே. எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், ஒருவரிடம் பேசுவது கவலையை பெரிய அளவில் குறைக்க உதவுகிறது.
மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்
உங்கள் பெற்றோர், அவர்களின் பெற்றோருக்கு இன்னும் குழந்தைகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பெற்றோராக இருப்பது அவர்களை குழந்தைகளாக இருந்து தடுக்கவில்லை. அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள் என்ற எண்ணம் உங்களைப் பெரிதும் காயப்படுத்துவது போல, அவர்களின் பெற்றோர் உலகை விட்டுப் பிரியும் போது அவர்களும் அதே அளவு வேதனை அடைகிறார்கள். உங்கள் பெற்றோரின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இழப்பைக் கடந்து செல்ல உதவுங்கள்
பெற்றோரின் மரணத்தால் ஏற்படும் துக்கம், குழந்தைகளின் உணர்ச்சிகளில் அழியாத காயத்தை ஏற்படுத்தும். உங்கள் பெற்றோர்கள் இந்தக் கட்டத்தைக் கடந்து சென்றால், அவர்கள் இதைக் கடந்து செல்ல உதவுங்கள்.
அவர்கள் கேட்க வேண்டிய போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் துயரத்துடன் அவர்களை விட்டுவிடாதீர்கள். அவர்களுடன் சேர்ந்து இருங்கள், அமர்ந்து பேசுங்கள். அவர்களை துக்கத்திலிருந்து மெதுவாகத் திசைதிருப்ப முயற்சி செய்யுங்கள். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும், அவர்களை முன்புபோல இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.
அவர்களை மன்னியுங்கள்
இந்த நேரத்தில், உங்கள் பெற்றோர் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் உங்களிடம் கோபமாக பேசலாம், முரட்டுத்தனமாக நடந்துகொள்ளலாம் அல்லது உங்களை புறக்கணிக்கலாம். இதற்காக அவர்களை மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் யாராலும் பார்க்க முடியாத மனப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.
தங்கள் பெற்றோரை பிரிந்த கவலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாட்கள் நகரும்போது, அவர்களும் அந்த விஷயத்தில் இருந்து வெளியேறுவார்கள்.
நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
மகிழ்ச்சி கவலையைக் கொல்லும். உங்கள் பெற்றோருக்கு இந்த மன அழுத்தத்தை சமாளிக்க உதவ, உங்கள் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோரின் நல்ல நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். குடும்பத் தகராறு போன்ற எதிர்மறையான பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
நல்ல விஷயங்களைப் பேசுங்கள், வேடிக்கையான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பெற்றோர்கள் அதை தங்கள் சொந்த நினைவாக மாற்றி துக்கத்திலிருந்து மீண்டுவருவார்கள்.



Click it and Unblock the Notifications
