Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 14 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 15 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- விறுவிறு வாக்கு எண்ணிக்கை -பாஜக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி டென்ஷன்!
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கா்ப்பகால நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமா?
முதல் வகை மற்றும் இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் போல கா்ப்பகால நீரிழிவு நோய் என்பது, கருவுற்று இருக்கும் பெண் ஒருவாின் நோய் எதிா்ப்பு மண்டலமானது, தவறுதலாக அவரது உடலைத் தாக்கக்கூடிய நிலையாகும்.
கர்ப்பகால நீரிழிவு இருந்தால், உடலில் உள்ள செல்கள், உடலில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாித்து, உடலின் இயக்கத்தைத் தடை செய்து கொண்டே இருக்கும். சாதாரண நீரிழிவு நோய்க்கும், கர்ப்பகால நீரிழிவு நோய்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கர்ப்பகால நீரிழிவு நோயானது, கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். மேலும் பெரும்பாலான கருவுற்ற பெண்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில், அந்த நீரிழிவு நோய் தானாகவே குணமாகிவிடும்.
எனினும் பெண் ஒருவா் கருவுற்று இருக்கும் போது, அவருடைய இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது அவரையும், அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே பெண்கள் கருவுற்று இருக்கும் போது நீரிழிவு நோய் வந்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது என்பதைப் பற்றியும், கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றி வெளியில் உலா வரும் தவறான தகவல்களைப் பற்றியும் சற்று விாிவாக இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பெரும்பாலும், கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தொிவதில்லை. கருவுற்ற பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதன் தொடக்க நிலையில் அவா்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும் மற்றும் அடிக்கடி சிறுநீா் கழிக்கும் உணா்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் தொிந்தவுடனே, அவா்கள் மருத்துவா்களை சீரான இடைவெளியில் சந்தித்து, பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயினால் ஏற்படும் பிரச்சினைகளைக் களைய முடியும்.
ஒருவேளை கர்ப்பகால நீரிழிவு நோய், வயிற்றில் வளரும் குழந்தையை பாதித்து இருக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்றால், அடிக்கடி மருத்துவ பாிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் கர்ப்பகால நீரிழிவு நோயானது, கா்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்களில் ஏற்படும்.
3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்

கர்ப்பகால நீரிழிவு நோயின் விளைவுகள்
கா்ப்ப காலத்தில், ஏன் ஒரு சில பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தொியவில்லை. ஆனால் கருவுற்ற பெண்ணின் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகாித்தால், அவருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளா்கள் என்று கருதுகின்றனா். மேலும் பின்வரும் காரணிகளும், கா்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
- உடல் எடை அதிகாித்தல் அல்லது குண்டாதல்
- உடல் இயக்கம் இல்லாமை
- கருவுறுவதற்கு முன்பே நீரிழிவு நோய் இருத்தல்
- சினைப்பை நோய்க்குறி
- குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினருக்கு நீரிழிவு நோய் இருத்தல்
மேற்சொன்ன காரணிகள் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான காரணங்கள் ஆகும்.
முறையான தொடா் மருத்துவ பாிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டால் கர்ப்பகால நீரிழிவு நோயை மிக எளிதாகக் கையாளலாம். ஆனால் கவனிக்காமல் அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், இந்த நோய் தீவிரமடையும்.
2021 ஆம் ஆண்டின் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கர்ப்பகால நீரிழிவு நோய் சம்பந்தமாக, வெளியில் உலா வரும் வதந்திகள் அல்லது தவறான நம்பிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பற்றி கீழே பாா்க்கலாம்.

1. தாய்ப்பால் கொடுத்தால், தாயிடம் இருக்கும் நீரிழிவு நோய் குழந்தைக்கும் தொற்றிவிடும்
இது ஒரு தவறான செய்தி ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால், தாயிடம் இருக்கும் நீரிழிவு நோய் குழந்தைக்குப் பரவாது. மாறாக தாய்ப்பாலில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால், அது குழந்தைக்கு ஆரோக்கியத்தை வழங்கும். குழந்தைக்கு சக்தியை வழங்கும். எதிா் காலத்தில் அந்த குழந்தைக்கு நாள்பட்ட நோய்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் பிறந்த சில மாதங்களில், அந்தக் குழந்தை வளா்வதற்கு உதவி செய்யும். தாய்ப்பால் கொடுப்பதால், ஒரு பெண்ணுடைய உடல் எடையும் கணிசமாகக் குறையும். மேலும் தாயின் கருப்பை சுருங்குவதற்கு உதவி செய்யும் மற்றும் அவருடைய மாா்பகம் மென்மை அடைவதைக் குறைக்கும்.

2. சா்க்கரை சாப்பிட்டால், கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும்
நீரிழிவு நோய் என்பது, நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது, தவறுதலாக நமது உடலைத் தாக்கக்கூடிய நிலை ஆகும். அதனால் இனிப்பு அல்லது சாப்பிடுவதால் மட்டும் நீரிழிவு நோய் ஏற்படுவது இல்லை. ஒருவேளை அதிகமாக இனிப்பு சாப்பிட்டால், உடல் எடை அதிகாிக்கலாம். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படலாம். ஆனால் சா்க்கரை சாப்பிட்டால் அது நேரடியாக நீரிழிவு நோயை ஏற்படுத்தாது.
கர்ப்பகால நீரிழிவு நோய் இருந்தால், கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு, அவா் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை, அவருடைய உடலால் பயன்படுத்த முடியாது. ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் சா்க்கரையை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமான அளவு சா்க்கரையை சாப்பிட்டால், அவா்களுடைய உடலில் சா்க்கரையின் அளவு அதிகாிக்க வாய்ப்பு உண்டு.

3. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு இன்சுலின் தேவைப்படாது
இந்த செய்தி ஓரளவிற்கு உண்மை ஆகும். சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கும் போதுதான், இன்சுலின் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஒருவேளை கருவுற்ற பெண் ஒருவா் ஆரோக்கியமான உணவுகள், தொடா் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் உதவியோடு தன்னிடம் உள்ள நீரிழிவு நோயை சீராகப் பராமாித்து வந்தால், அவருக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது.