For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் அதிகரிக்கும் ஆண்மை பிரச்சனைகள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

வீட்டிலேயே இருப்பதால், கணவன் மனைவிக்குள் பேசுவதற்கும் தாம்பத்திய உறவை வளர்ப்பதற்கும் நல்ல நேரம் கிடைப்பதாக நாம் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால், ஆய்வுகளின் முடிவுகளோ வேறு சொல்கிறது.

|

தலைப்பை படித்ததும் பயந்து விட வேண்டாம். அரசு உத்தரவின் பேரில் இப்பொழுது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நாம் எல்லோரும் இப்பொழுது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். இப்படியே வீட்டிலேயே இருப்பதால், கணவன் மனைவிக்குள் பேசுவதற்கும் தாம்பத்திய உறவை வளர்ப்பதற்கும் நல்ல நேரம் கிடைப்பதாக நாம் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கலாம்.

How Is Lockdown Impacting Male Fertility?

ஆனால், ஆய்வுகளின் முடிவுகளை பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. ஆண்கள் தங்கள் அந்தரங்க சம்பந்தமான பிரச்சனைகளுக்காக மருத்துவர்களை அணுகும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பொது முடக்க நேரத்தில் வீட்டிலிருந்த படி ஹாயாக வேலை செய்வது திருமணமாகாத ஆண்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம், ஆனால் திருமணமான மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஆண்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியதுள்ளது.

ஆண்கள் தங்கள் தினசரி அலுவலக வேலைகளை வீட்டிலிருந்த படியே கவனித்து கொண்டு, குடும்ப சம்பத்தப்பட்ட வேலைகளையும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனால் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாவதால், எப்பொழுதும் இல்லாத அளவில், ஆண்கள் அந்தரங்க பிரச்சனைகளுக்காக மருத்துவரை பார்ப்பது அதிகரித்திருப்பதாக, ஆண்களுக்கான இந்திய சுகாதார மையத்தின் பொது செயலாளரும் மற்றும் தலைமை சிறுநீரக மருத்துவரான ராமன் தன்வர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தத்தால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை

மன அழுத்தத்தால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை

மன அழுத்தத்தால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும் மற்றும் விந்தணுவின் திறன் குறைவதற்கும், மன அழுத்தம் மிக முக்கிய காரணம். உங்களில் சிலர், இந்த பொது முடக்க நேரத்தில் கரு உருவாக்கம் செய்ய முடிவு செய்திருக்கலாம்.

பொதுவாக ஆண்களின் விந்தணு உருவாவதற்கு 74 நாட்கள் ஆகும். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதை குறுகிய காலத்திலேயே அடைய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதில் தோல்வியுறும் பொழுது, ஆன்த்ரோலோஜிஸ்ட் அல்லது ஆண் உறுப்பு நிபுணர்களை அணுக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய ஒரே ஒரு மந்திரம் மருத்துவர்களிடம் இல்லை. ஆனால், அவர்கள் இந்த சூழ்நிலையை சமாளிக்க சில வழிமுறைகளை நமக்கு கூறுகிறார்கள். மன அழுத்தத்திலிருந்து போராடி விடுபடுவதே நீண்ட நாட்களுக்கு ஆண்மையை அளிக்கும் அருமருந்து என்பது அதில் முக்கியமான ஒன்று.

அதிகரிக்கும் ஆண்தன்மை சம்பத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்

அதிகரிக்கும் ஆண்தன்மை சம்பத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்

உங்களுடைய அனைத்து வேலைகளையும் நன்கு திட்டமிட்டு செயல்படுத்துவது மிக முக்கியம். உங்கள் தினசரி வேலைகளை நன்கு திட்டமிட்டு அட்டவணையிட்டு, அந்த அட்டவணைப்படியே நடக்க வேண்டும். உங்கள் மனைவியையும் உதவிக்கு அழைத்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப சம்பத்தப்பட்ட வேலைகளை இவ்வாறு சேர்ந்து செய்யும் பொழுது நேரம் மிச்சப்படுவதுடன் கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

அதுமட்டுமில்லாமல், ஒரு நாளின் முதல் 15 முதல் 20 நிமிடங்களை சற்று ஓய்வாக செலவழித்துவிட்டு, அதற்கடுத்த படியாக மேற்சொன்ன திட்டமிடுதலை செய்வது நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

ஆண்கள் விந்தணுவின் செயல் திறனை அதிகரிக்க நல்ல புதிய, சுத்தமான பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம், ஓய்வின்மை மற்றும் ஏனைய தொற்றுகளால் வரும் மன அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்த முடியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தற்பொழுது நிறைய உடற்பயற்சி கூடங்கள் மூடிய நிலையில் இருக்கின்றன. எனவே தினசரி வீட்டிலிருந்தபடியே உடற்பயற்சி செய்வது மிக முக்கியமாகும். தொழில் முறை பாடி பில்டர்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் வீட்டிலிருந்தபடியே உடற்பயற்சி செய்வது மட்டுமே இப்பொழுதுள்ள ஒரே தீர்வு.

உடல் எடையையே குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் உடற்பயற்சி செய்வது இந்த நேரத்தில் கரு உருவாக திட்டமிட்டுள்ளவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.

MOST READ: வீட்டிலிருந்து கொண்டே எப்படி உடற்பயற்சி செய்வது எப்படி?

சோயா உணவுகள் வேண்டாம்

சோயா உணவுகள் வேண்டாம்

அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தின் மூலம் விற்பனையாகும் சோயா உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் சோயா ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து ஆண்தன்மையை குறைக்க வல்லது.

மன அழுத்தத்தால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

மன அழுத்தத்தால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

மன அழுத்தத்தால் ஆண்தன்மை குறைவு பிரச்சனை ஏற்படுவதுடன், சீக்கிரமாக விந்து வெளியேறுதல் மற்றும் வெகு தாமதமாக விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் உடலுறவில் பாதிப்பு ஏற்படுவதுடன் தாம்பத்திய உறவிலும் பிரச்சினை உண்டாகிறது. பாதியில் இருக்கும் அலுவலக சம்பத்தப்பட்ட வேலையை பற்றியே எப்பொழுதும் நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உங்களுக்கு விறைப்புத்தன்மை சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உடற்பயற்சி செய்யாமல் இருத்தல், மன அழுத்தம் மற்றும் நல்ல முறையில் இல்லாத உறவு போன்ற மூன்றும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

துணையுடன் சேர்ந்து பேசி திட்டமிடவும்

துணையுடன் சேர்ந்து பேசி திட்டமிடவும்

நீங்கள் தற்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்திருந்தால், முதலில் உங்கள் துணையின் மாதவிடாய் சுழற்சி காலத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் உள்ள மற்ற நாட்களில் உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல் இருக்கலாம், தெடர்ந்து மாத இறுதியில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் உங்கள் துணைவியாரின் உடலில் கருமுட்டை வளராமல் இருக்கலாம். இவ்வாறு முயற்சிப்பது உங்களுடைய செயல்திறனை பாதிக்கும். ஆண்கள் அத்தியாவசிய எண்ணெயை சேர்த்துக் கொள்வதன் முலம், அவர்கள் அந்தரங்க பிரச்சினைக்கு தீர்வு காணலாம். எனினும், உங்கள் துணையுடன் இருக்கும் நேரத்தை நல்ல முறையில் செலவிடுங்கள். முதலில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு நன்கு பேசி திட்டமிட்டு கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் இருவருக்கிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படுவதால், உடலுறவின் பொழுது மன அழுத்தம் குறைந்து நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

சரி, எப்பொழுது மருத்துவரை பார்ப்பது?

சரி, எப்பொழுது மருத்துவரை பார்ப்பது?

நாங்கள் மேலே சொன்ன அனைத்து செயல் முறைகளான அட்டவணையிட்டு பின்பற்றுதல், உணவு பழக்கவழக்க மாறுபாடு மற்றும் உடற்பயற்சி போன்றவற்றை பின்பற்றியும் எந்த ஒரு மன அழுத்தம் இல்லாமலும் இருந்தும், உங்களுக்கு பிரச்சினை இருப்பதாக தென்பட்டால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. முடிந்தவரை மருத்துவமனைக்கு நேராக செல்லாமல், ஆன்லைனில் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Is Lockdown Impacting Male Fertility?

Want to know how is lockdown impacting male fertility? Read on...
Desktop Bottom Promotion