Latest Updates
-
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல
கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் என்ன தெரியுமா?
வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது அவசியமற்றதாக இருந்தாலும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாகும்.
குழந்தை வரம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும், ஏனெனில் ஒரு தம்பதிகளின் அன்பின் அடையாளத்தின் சாட்சி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைதான். அதுவரை தம்பதிகளாக இருந்தவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் அங்கீகாரம் கொடுப்பது குழந்தைகள்தான். எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களை அரவணைத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது அவசியமற்றதாக இருந்தாலும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாகும். கடந்த காலங்களில் குழந்தையின் பாலினத்தை கருவில் இருக்கும்போதே அறிய பல விசித்திரமான வழிகள் பின்பற்றப்பட்டது. இதில் சில சரியானவையாகவும், பல மூடத்தனமாகவும் இருந்தது. குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிய சில விசித்திரமான வழிகளை நமது முன்னோர்களும், அறிவியலும் பரிந்துரைத்துள்ளது.அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதயத்துடிப்பின் வேகம்
அந்த காலத்து நம்பிக்கைகளில் கூறியுள்ளபடி கருவில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 துடிப்புகளுக்கு மேல் இருந்தால், நீங்கள் ஒரு பெண்ணைச் சுமக்கிறீர்கள் என்று அர்த்தம். 140-க்கு குறைவான இதய துடிப்பு என்பது உங்களுக்கு ஒரு பையன் என்று பொருள். இது மிகவும் எளிமையான சோதனையாகும், மேலும் பிஞ்சு குழந்தையின் இதயத்துடிப்பை எப்போதும் கேட்க வைக்கும். ஆனால் இதன் முடிவுகள் அவ்வளவு துல்லியமானதாக இருக்காது.

மனநிலை மாற்றங்கள்
கர்ப்பகாலத்தில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் கர்ப்பகாலத்தில் மிகவும் இறுக்கமாக இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருக்கலாம். அதேசமயம் நிதானமாகவும், குழப்பமாகவும் இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தையாகும்.

மண்டை ஓடு
இந்த கோட்பாட்டை ஆதரிக்க விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் மண்டை ஓட்டின் வடிவத்தைப் ஆராய்வதன் மூலம் ஆரம்ப அல்ட்ராசவுண்டின் அடிப்படையில் பாலினத்தை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் மிகவும் வட்டமான நெற்றியைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் ஆண் சிறுவர்கள் மிகவும் தட்டையான அல்லது சற்று சாய்வாக பின்னோக்கிப் பார்ப்பார்கள்.

கண்களில் நரம்புகள்
உங்கள் கீழ் கண் இமைகளை கீழே இழுத்து, கடிகாரம் போல இருக்கு உங்கள் கருவிழியில் இரண்டு முக்கிய சிவப்பு நரம்புகளைத் தோராயமாக ஐந்து மணி மற்றும் ஏழு மணியில் தேடுங்கள். இடது கண்களில் ந்த நரம்புகள் இருந்தால் ஆண் குழந்தை, வலது கண்ணில் இருந்தால் பெண் குழந்தை என்றும் நம்பப்படுகிறது.

இனிப்பு மற்றும் புளிப்பு
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு கட்டத்தில் கூடுதல் பசியை அனுபவிக்கிறார்கள். இந்த பசி ஒரு குறிப்பிட்ட வகை உணவு அல்லது அசாதாரண உணவுக்காக இருக்கலாம் என்றாலும், அவை பொதுவாக இனிப்பு, உப்பு, காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கான விருப்பத்தை குறிக்கின்றன. பெண்கள் இனிப்பான பொருளுக்காக ஏங்கினால் கருவில் இருப்பது பெண் என்றும், உப்பு மற்றும் புளிப்பான பொருளுக்காக ஏங்கினால் கருவில் இருப்பது ஆண் என்றும் கூறப்படுகிறது.

மாயன்களின் பாலின கணிப்பு
மாயன்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினைத்தை அறிய தங்களுக்கென ஒரு வழியை வைத்திருந்தனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும், பெண்கள் கருத்தரித்த ஆண்டு மற்றும் தாயின் வயதை கணக்கிடுங்கள். இரண்டு எண்களும் சமமாகவோ அல்லது ஒற்றைப்படையாகவோ இருந்தால் அது ஒரு பெண். அதேபோல எண் இரட்டைப்படையாக இருந்தால் அது ஆணாகும்.

முடி வளர்ச்சி
ஒரு ஆண் கரு தாயின் கால்களில் முடி வேகமாக வளர வைக்கும், அதே சமயம் ஒரு பெண் கரு வளராது. உண்மையில், கரு இந்த வழியில் தாயின் முடி வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு ஹார்மோன்களை உருவாக்குவதில்லை.

தூங்கும் விதம்
பெண்கள் பளபளப்பான, ஆரோக்கியமான, வேகமாக வளரும் முடி மற்றும் நகங்கள் கொண்டிருந்தால் கருவில் இருப்பது ஆணாகும். மேலும் கருவில் ஆண் இருந்தால் பெண்கள் ஒளிரும் சருமத்தைக் கொண்டிருப்பார்கள். அதேசமயம் தலைமுடி மந்தமாகவும், பதின்ம வயதினரை போல சருமத்தில் வெடிப்புகள் இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருக்கலாம்.

உள்ளங்கை
உங்கள் குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது உங்கள் கைகளைப் பார்ப்பது போல் எளிமையானது என்று சிலர் கூறுகிறார்கள். உலர்ந்த, விரிசல் கைகள் ஆண் குழந்தையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் மென்மையான கைகள் பெண் குழந்தையைக் குறிக்கிறது.

உப்பு சோதனை
ஒரு பெண் ஒரு குழந்தையைச் சுமக்கும்போது கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள விரும்பினால், அவர் தூங்கும்போது அவருக்கே தெரியாமல் அவரின் தலையில் உப்பு தெளிக்க வேண்டும். எழுந்ததும் அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்கள் என்று பாருங்கள், ஆணின் பெயரை சொன்னால் கருவில் இருப்பது ஆண் குழந்தை எனவும், பெண் பெயரைக் கூறினால் கருவில் இருப்பது பெண் குழந்தை எனவும் கூறப்படுகிறது.

சோர்வு
முதல் பன்னிரண்டு வாரங்களில் குமட்டல் மற்றும் சோர்வால் அவதிப்பட்டால் கருவில் இருப்பது பெண் குழந்தையாகும். ஆனால் இந்த சோதனையான காலம் சிறிது தாமதமாக தொடங்கினால் கருவில் இருப்பது நிச்சயம் ஆண் குழந்தையாகும்.



Click it and Unblock the Notifications
