தம்பதியர் புணர்தலுக்கு பின் குளிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன?

Subscribe to Boldsky

இந்து மத தம்பதியர் பல வழிமுறைகளை தங்கள் வாழ்வில் பின்பற்றுகின்றனர்; இந்து சமயத்தில் கூறப்பட்டு உள்ள வேதங்களும், சாஸ்திரங்களும் தம்பதியரின் இல்லற வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டும் என்று சில விதிமுறைகளின் அடிப்படையில் எடுத்துரைக்கின்றன.

Why Should Women Take Head Bath After Intercourse?

இந்த பதிப்பில் தம்பதியர் புணர்தலுக்கு பின் குளிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன மற்றும் முதலிரவுக்கு பின் ஏன் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்பதை பற்றி படித்து அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணும் பெண்ணும்!

ஆணும் பெண்ணும்!

இந்து சமயத்தில் ஆணையும் பெண்ணையும் வாழ்க்கை முழுதும் இணைந்து இருக்கும் வகையில், அவர்களை இணைத்து வைக்கும் ஒரு புனிதமான சடங்கு தான் திருமணம்! திருமணத்தில் பல விதி முறைகள், வாக்குகள், வழிபாடுகள் போன்றவை பின்பற்றப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு ஆணும் பெண்ணும் தம்பதியராக வாழ ஆசிர்வதித்து அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அனுமதியை கடவுள் சாட்சியாக, உற்றார் மற்றும் உறவுகள் சாட்சியாக தம்பதியர் பெறுகின்றனர்.

புனிதம் - திருமணம்!

புனிதம் - திருமணம்!

திருமணம் என்பது கடவுளை அர்ச்சனை செய்து பூஜிப்பது போல், மந்திரங்கள் ஓதப்பட்டு மிகவும் ஆச்சாரமாக நடப்படும் ஒன்று. திருமணத்திற்கு முன்பே மணமக்கள் பல சடங்குகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்; நலங்கு, பந்தக்கால் நடுதல் என பல சடங்குகள் ஒவ்வொருவரின் சமய மரபிற்கு ஏற்ற வகையில் பின்பற்றப்படும். இந்த எல்லா சடங்குகளின் உச்ச கட்ட விஷயமாக தான் திருமணம் நடைபெறுகிறது.

முதலிரவு - மரபு!

முதலிரவு - மரபு!

பல நூற்றாண்டுகளாக, பற்பல தலைமுறைகளாக திருமணம் முடிந்த நாளின் அன்று இரவில், முதலிரவு என்னும் முறை பின்பற்றப்படுகிறது; எப்படி திருமணத்திற்கு நல்ல நாள் மற்றும் நேரம் குறிக்கப் பட்டதோ, அதே போல், முதலிரவிற்கும் பல விஷயங்கள் ஜாதக, ஜோதிட ரீதியில் ஆராய்ந்து அறியப்பட்டு பின்னர் தான் நடத்தப்படும்.

இதில் ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், முதல் இரவை சில நாட்கள், மாதங்கள் என தள்ளியும் வைப்பர்.

முதலிரவுக்கு பின்!

முதலிரவுக்கு பின்!

ஆணும் பெண்ணும் மனத்தால் இணைந்து மணமக்கள் ஆன பின், நடத்தப்படும் முக்கிய சடங்கான முதலிரவில் முதன் முதலாக உடலால் இணைவர். தம்பதியர் உடலால் இணைந்து தங்களது சந்ததியை உருவாக்க போகிறார்கள்; குடும்பத்தின் வாரிசு உருவாக போகிறது என்பதால் பல சம்பிரதாயங்கள் முக்கியமாக பார்க்கப்படும். முதலிரவில் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்தி, புணர்வார்கள்!

மேலும் படிக்க: ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை?

தலைக்கு குளிக்க வேண்டும்!

தலைக்கு குளிக்க வேண்டும்!

முதலிரவு முடிந்து, தம்பதியர் தங்கள் முதன் முறையான புணர்தலை முடித்த பின், பெண்ணை தலைக்கு குளிக்க சொல்வது வழக்கம். இது இந்து சமயத்தில் மட்டும் இன்றி, மற்ற சமயத்தாராலும் கூட மேற்கொள்ளப்படும் ஒரு பழக்கம்! கண்டிப்பாக முதலிரவுக்கு பின் பெண்கள் தலைக்கு தேய்த்து குளித்து விட்டு தான் மற்ற செயல்களை கவனிக்க வேண்டும்; பல இடங்களில் ஆண்களும் தலைக்கு குளிப்பர்.

ஏன் குளிக்க வேண்டும்?

ஏன் குளிக்க வேண்டும்?

இவ்வாறு ஆணும் பெண்ணும் தலைக்கு குளிக்குமாறு அறிவுறுத்தப்படுவது ஏன் என்று யாரும் அவ்வளவாக வினவியது இல்லை; அப்படி வினவினாலும் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று சப்பை கட்டு கட்டும் பதில்கள் தான் கிடைக்கும். இந்த பதிப்பில், இப்பொழுது ஏன் அவ்வாறு தலைக்கு குளிக்க வேண்டும் என்பதற்கான உண்மையான காரணத்தை அறியலாம்.

இழப்பிற்கான அடையாளமா?

இழப்பிற்கான அடையாளமா?

ஆணும் பெண்ணும் தங்களது கன்னித்தன்மையை இழந்ததற்கான அடையாளம், அதற்கான தலை முழுகல் என்று தான் பலர் எண்ணிக் கொண்டு உள்ளனர்; ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. அது ஒரு காரணமாக இருந்தாலும், முதலிரவு முடிந்த பின்னர் கூட தம்பதியர் இன்னும் பல சடங்குகளை செய்ய வேண்டி இருக்கும்; குல தெய்வ வழிபாடு என கோவில்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.

ஆகையால் கண்டிப்பாக உடலால் உறவு கொண்டால், குளித்து விட்டு தான் பூஜை, புனஸ்காரம் போன்றவற்றை செய்ய வேண்டும் என்பது இந்து சமயத்தின் முக்கிய கொள்கை.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை: ஸ்கேன் படங்கள்!

கலவி தூய்மையற்ற செயலா?

கலவி தூய்மையற்ற செயலா?

ஆணும் பெண்ணும் முதலிரவு மட்டும் அல்ல, எப்பொழுது புணர்தலில் ஈடுபட்டாலும் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்; திருமணம் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும், கலவிக்கு பின் தலை முழுகல் அவசியம் என்று கூறப்படுகிறது. இது இந்து சாஸ்திரப்படி மட்டும் இன்றி, அறிவியல் ரீதியாகவும் கூட அறிவுறுத்தப்படும் ஒரு விஷயம் ஆகும்; கலவிக்கு பின் நன்கு குளிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.!

பகலில் கூடாது!

பகலில் கூடாது!

இந்து சமயத்தின் படி கலவி கொண்ட ஆணும் பெண்ணும் பிரம்மச்சரியத்தை இழந்தவராக கருதப்படுகிறார்; மேலும் பகலில் கலவி கொள்தல் என்பது மிகவும் தவறானது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பகலில் நாம் கோவில்களுக்கு செல்வது உண்டு; வீட்டில் பூஜையறையை புழங்குவது உண்டு; வீட்டிற்கு விருந்தாளிகள் வருவது உண்டு. இத்தகைய நேரமான காலை அல்லது பகல் பொழுதில் புணர்தல் கூடாது; இதனை மறைமுகமாக வலியுறுத்தியே காலங்காலமாக இரவில் உறவு கொள்வது பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

கணவர்களின் வருத்தம்!

கணவர்களின் வருத்தம்!

பல கணவன்மார்கள் இந்து சமயத்தின் இந்த கொள்கைகளால் மனவருத்தம் அடைந்து உள்ளதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மனைவிமார்கள் கலவிக்கு பின் தலைக்கு குளிக்க வேண்டி இருப்பதால், கலவியை தவிர்ப்பதாகவும், அப்படியே மேற்கொண்டாலும் அதன் பின் வெளியே செல்ல வேண்டும் என்றால், பெண்களின் கூந்தல் ஈரம் காய்ந்து அவர்கள் கிளம்ப நேரம் ஆகிறது என்றும் கணவன்மார்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

மறுமுறை அழைத்தால்..!

மறுமுறை அழைத்தால்..!

ஒருமுறை புணர்தல் கொண்ட பின், அடுத்த முறை அழைத்தால் மனைவிமார்கள் முறைத்து, எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த குளியல் முறை தான் என்று குறைப்பட்டு கொள்கிறார்கள் கணவன்மார்கள்! என்ன செய்வது தோழர்களே! சாஸ்திரமும் அறிவியலும் ஒரு விஷயத்தை உறுதி பட பல காலமாக கூறி வருகிறது என்றால், அதில் கண்டிப்பாக உண்மைகள் இருக்கத்தானே செய்யும்.

ஆகையால் காலங்காலமாக கூறி வரும் விதிமுறையை உங்கள் வாழ்விலும் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழுங்கள்! வாழ்க வளமுடன்!

மேலும் படிக்க: சாய்பாபாவுக்கு பிடித்த ஆரஞ்சு கலர் ஆடையை இன்னைக்கு எந்தெந்த ராசிகள் அணிய வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary

  Why Should Women Take Head Bath After Intercourse?

  Why Should Women Take Head Bath After Intercourse?
  Story first published: Thursday, October 4, 2018, 11:40 [IST]
  இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more