For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் லோ பிபி - ஹை பிபி இரண்டில் எது குழந்தைக்கு ஆபத்தாக முடியும்?

கர்ப்ப காலத்தில் உண்டாகும் குறைந்த ரத்த அழுத்தம் உண்டாவது பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

|

ஒரு பெண் கர்பமாக இருக்கும்போது, தலை சுற்றுவது சிறு சிறு விஷயங்களை நினைத்து கவலை தோன்றும். உண்மை என்னவென்றால், ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் ஆனால் எப்போதும் வருத்தப்பட வேண்டியதில்லை.

Low Blood Pressure during Pregnancy

கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதிக இரத்த அழுத்தத்தை போன்று குறைந்த இரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் தாயையோ குழந்தையையோ அதிகமாக பாதிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

குறைந்த அளவில் நீராகாரம் உண்பது, நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அப்படி கர்ப்ப காலத்தில் குறைந்த ரத்த அழுத்தம் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

எப்போது பார்த்தாலும் படுத்துக்கொள்வது, அல்லது உட்காருவது, நிற்பது போன்றவற்றைத் தொடர்ந்து அதிக நேரம் செய்வது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். மகப்பேறு காலத்தில், குழந்தைக்கு ஊட்டச்சத்து அதிகம் கிடைப்பதற்காக கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.

வெயிலிலும், ஈரப்பதமான நேரத்திலும், வெளியில் செல்வது, குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு அடிக்கடி மயக்கம் வரும். ஆனால் கர்ப்ப காலத்தில் வரும் சாதாரண மயக்கத்துக்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எப்படி வேறுபாட்டை கண்டுபிடிக்கலாம். அதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

குமட்டல்

பார்வை பிரச்சனைகள்

தலை சுற்றல்

ஆகியவைகள் தான் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

சிகிச்சை

சிகிச்சை

குறைந்த இரத்த அழுத்தத்திற்கு எந்த மருத்துவ உதவியும் அவசியமில்லை ஏனென்றால் பின்வரும் எளிய வழிமுறைகளைக் கொண்டு அதை சரி செய்யலாம்:

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது என்றால், ட்ரிப்புடன் மருத்துவரின் அறிவுரையின் பேரில் நிறைய நீராகாரம் எடுத்துக்கொள்ளவும்.

சில சாதாரண உடற்பயிற்சிகளை மருத்துவரின் அறிவுரையின் பேரில் செய்யலாம்

திடீரென உடலை அசைப்பதை, கட்டிலில் இருந்து திடீரென எழுந்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வழக்கத்தை விட எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவை சிறிது அதிகப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Low Blood Pressure during Pregnancy

the blood pressure that gives a person the symptoms described below and not by a standard measurement.
Desktop Bottom Promotion