நீங்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!

By: Staff
Subscribe to Boldsky

உடலுறவு என்பது அனைவரது வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான ஒன்றாக தான் உள்ளது. ஆனால் எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான்.. அது குறிப்பாக இந்த விஷயத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. உடலுறவின் மீது அதீத ஆவல் வந்தால் பல தீமைகள் உண்டாகும்...

முக்கியமாக சமூகத்தில் நம் மீதான கண்ணோட்டம் மாறும்.. நம்மை நம்பி வந்திருக்கும் உறவுகளுக்கு துரோகம் செய்ய நேரிடும்.. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது.. சமூகத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டியது நிலை நிச்சயம் உருவாகும்.. இது போன்ற பல பிரச்சனைகள் உடலுறவு இச்சைகள் அதிகரிப்பின் காரணமாக உண்டாக கூடும்...

Hypersexual Disorder Warning Signs

மது, புகைப்பழக்கம் என எதுவுமே அளவோடு இருந்தால், அதில் இருந்து எளிதாக மீண்டு வந்து விடலாம்.. அதுவே அதற்கு நாம் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிக மிக கடினமான விஷயமாகும். அதுமட்டுமின்றி அதனால் நமக்கு உண்டாகும் விளைவுகளும் அதி பயங்கரமான விளைவுகளாக இருக்கும்..

அதே போன்று தான் உடலுறவும் கூட, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது நாம் உடலுறவுக்கு அடிமையாகிவிடுவோம்.. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகும்.. சிலருக்கு நாம் இது போன்று உடலுறவுக்கு அடிமையாகிவிட்டோமா என்று அறிவதற்கே பல காலம் எடுத்துக் கொள்ளும்.. ஆனால் இதனை முன் கூட்டியே அறிந்து விட்டால் இதில் இருந்து மீண்டு வருவது என்பது சுலபமான விஷயமாகிவிடும்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீங்கு விளைவிக்கும்!

தீங்கு விளைவிக்கும்!

உடலுறவுக்கு அடிமையாகவது என்பது முதலில் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இல்லாமல் இருந்தாலும் கூட, நாட்கள் செல்ல செல்ல இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமைந்து விடும்..

காரணம் இந்த உடலுறவின் மீது உள்ள அதீத ஈடுபாடானது பிறருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றிற்கு காரணமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 சுய இன்பம்

சுய இன்பம்

சுய இன்பம் காண்பது என்பது அனைவரும் செய்ய கூடிய ஒரு விஷயம் தான்.. ஆனாலும் இது அதிகமாக கூடாது.. இது அதிகரித்து காணப்பட்டால் அவர்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகும். எந்த நேரமும் சுய இன்பம் காண வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பது, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் சுய இன்பம் காண்பது போன்றவைகள் உடலுறவுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை குறிக்கும்.

செக்ஸ் பற்றிய எண்ணங்கள்

செக்ஸ் பற்றிய எண்ணங்கள்

இந்த உடறவுக்கு அடிமையாக உள்ளவர்கள் எப்போதும் செக்ஸ் பற்றியே தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.. அவர்களை பொருத்தவரையில் இந்த உலகில் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ் மட்டும் தான்.. அடுத்து எப்போது உடறவில் ஈடுபடலாம் என்ற எண்ணத்துடனேயே இருப்பார்கள்.. இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர் உடலுறவுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

ஆன்லைன் செக்ஸ்..!

ஆன்லைன் செக்ஸ்..!

இந்த உடலுறவிற்கு அடிமையாக இருப்பவர்கள் அதிக நேரம் ஆன்லைனிலேயே கழிப்பார்கள்.. ஆன்லைனில் பார்ன் படங்களை பார்ப்பது, போன் மூலமான பாலியல் சேவைகளை பயன்படுத்துவது என்று உடலுறவு மட்டும் தான் வாழ்க்கை என்று இதிலேயே மூழ்கி கிடப்பார்கள்.. தொடந்து பாலியல் சார்ந்த விஷயங்கள், தொடர்புடைய படங்கள் போன்றவற்றை பார்ப்பார்கள்.

பல துணைகள்

பல துணைகள்

இது போன்று உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் அவர்களது துணையுடன் மட்டும் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகளுடன் உடலுறவில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த நிலை சிறிது சிறிதாக மாறி விலை மாதுகளிடம் செல்ல கூடிய நிலையிலும் இருப்பார்கள்..

உணர்வு ரீதியாக பிரிந்த நிலை

உணர்வு ரீதியாக பிரிந்த நிலை

இவர்கள் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் துணையுடன் உணர்ச்சி ரீதியாக தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல், கஷ்டங்களை தாங்குதல், அன்பை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் தான் இருப்பார்கள்.. அவர்களது தேவை முடிந்ததும் தன் துணையை கண்டு கொள்ளாத நிலையில் இருப்பார்கள்.

உரையாடல்கள்

உரையாடல்கள்

இவர்கள் எப்போதும் பல எதிர் பாலினத்தவர்களிடம் செக்ஸ் சேட்டில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.. அதிகமாக உடலுறவு சார்ந்த படங்களை பார்க்க கூடிய நபர்களாக இருப்பார்கள்.

பாலியல் கொடுமை

பாலியல் கொடுமை

இவர்கள் நீண்ட நாட்களாக ஒருவரின் மீது அன்புள்ளவர்களை போலவே நடந்து கொள்வார்கள்.. அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசைகள் மட்டுமே மனதில் இருக்கும்.. ஏதேனும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாலின நபர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு விடுவார்கள் இது இரண்டு பேருக்குமே ஆபத்தில் தான் முடியும்.

பண்பாட்டை மீறி நடந்து கொள்வது

பண்பாட்டை மீறி நடந்து கொள்வது

உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் தங்களது பண்பாடுகள் மற்றும் மரபுகள் போன்றவற்றை மீறி நடந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளை வைத்துக் கொள்வது, விலை மாதுக்களிடம் செல்வது, முன் பின் தெரியாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்..

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது அவர்களது சமய மரபுகளுக்கு எதிரானது என்றாலும் கூட தங்களது சுய உடலுறவு தேவைக்காக மரபுகளை மீறி இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவார்கள்.

தேவை தெரியாது

தேவை தெரியாது

உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் இவர்களுக்கு, தங்களின் உடலுறவு தேவை எவ்வளவு என்பதே தெரியாது. இது போன்று இருப்பது தான் இந்த செக்ஸ் தேவை அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக உள்ளது..

6 மாத காலம்

6 மாத காலம்

ஒருவர் தொடந்து 6 மாத காலமாக இதே செயல்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவராக இருந்தால் இவர் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார் எனப்படுகிறது..

என்ன செய்வது?

என்ன செய்வது?

புகைப்பழக்கம், மதுவிற்கு அடிமையாவது போல இதுவும் பாலியலுக்கு அடிமையாதல் தான்.. உங்களுக்கு இது போன்ற அறிகுறிகளுடன் ஒருவரை தெரிந்தால் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று இதற்கான தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இது போன்ற நபருக்கும் உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுகிறது.. இவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் இது அவருக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தை கொடுக்கும்.

மருத்துவ சிகிச்சை அவசியம்

மருத்துவ சிகிச்சை அவசியம்

இது போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது அவசியமாகிறது. இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையான பல படிநிலைகளை கொண்டதாக அமைகிறது.. இதற்கான சிகிச்சையை மன ரீதியாக எடுத்துக் கொள்ளும் போது, ஒரு நபர் இதில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hypersexual Disorder Warning Signs

Hypersexual Disorder Warning Signs
Story first published: Wednesday, January 24, 2018, 16:00 [IST]
Subscribe Newsletter