Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி?
இல்லறம் என்பது இனிமை நிறைந்த நல்லறமாக தம்பதியர் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி என்று இங்கு படித்து அறியலாம்.
இல்லறம் என்பது இனிமை நிறைந்த நல்லறமாக தம்பதியர் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தம்பதியர் தங்களுக்குள் நம்பிக்கை என்ற விதையை விதைத்து விருட்சம் போல் வளர செய்தால், இல்லறம் என்றென்றும் இனிமையானதாக இருக்கும்.

உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி மற்றும் உங்கள் மனைவியை இம்ப்ரெஸ் செய்து உறவை உற்சாகமாக்குவது எப்படி என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

முதலிரவு - முதல் அடி!
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணமான பின், நடத்தப்படும் முதலிரவு என்னும் நிகழ்வில் தான், ஆண் பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது, அவளின் நம்பிக்கையை ஜெயிப்பது எல்லாம். திருமணம் என்னும் ஒரு விழாவில் மணமகனும் மணமகளும் அதிகம் சோர்வு அடைந்து இருப்பர்; அந்த சோர்வை இன்னும் அதிகரிக்கும் வகையில் முதலிரவில் ஆண், பெண்ணின் உடலை காயப்படுத்தி விடக்கூடாது.

அவளின் விருப்பம்!
கணவர் தன் புது மனைவியிடம் அவள் சோர்வாக இருக்கிறாளா? அவளுக்கு ஓய்வு எடுக்க வேண்டுமா? தான் அவளை தொடலாமா? போன்ற விஷயங்களை கேட்டு, மனைவியின் மறுமொழியை கேட்டு அதற்கேற்ற வகையில் நடந்தால் போதும் அன்றே அந்த நிமிடமே மனைவியின் மனதில் ஒரு நல்ல இடம் கணவருக்கு கிடைத்து விடும்.
காலம் எல்லாம் சேர்ந்து தான் வாழப்போகிறீர்; ஆகையால் ஒரு இரவில் மனைவி விருப்பப்படி உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொல்வதில் தவறு இல்லையே!

உணர்ச்சிக்கு மதிப்பு!
மனைவியின் மனது உடலால் இணைய எந்த ஆட்சேபமும் காட்டவில்லை எனில், அவளும் அதை விரும்புகிறாள் எனில் பிரச்னை இல்லை; உங்களுக்கு பிடித்த வகையில் மட்டுமே உறவு கொள்ளாமல், அவளின் விருப்பு வெறுப்புகளை கேட்டு இருவருக்கும் எது பிடிக்கிறதோ அந்த முறையில் உறவு மேற்கொள்ளுங்கள். இது நீங்கள் அவளின் உணர்வுக்கு மதிப்பளிப்பதை மனைவிக்கு உணர்த்தும்.

மெது மெதுவாக தொடுங்கள்!
அப்படி மனைவிக்கு உறவில் பெரிதாக நாட்டமில்லை, பயம், அருவருப்பு, தயக்கம் போன்ற உணர்வுகள் இருந்தால், கணவன்மார்கள் எதேச்சையாக தொடுவது போல் மனைவியை அவ்வப்போது கண்ட கண்ட இடங்களில் லேசாக தொடுங்கள்; தொட்டு விட்டு கையை எடுத்து விடுங்கள். எல்லை மீற வேண்டாம்; நீங்கள் எல்லை மீறாமல் குறும்பாக தொடுவது போல் உங்களின் தொடுதல் அமைய வேண்டும்.
எல்லோர் முன்னும் மனைவியை சங்கடப்படுத்தும் வண்ணம் தொட வேண்டாம், தனிமையில் தொடுதல் நல்லது.

முத்தம் இடுங்கள்!
நீங்கள் குறும்பாக தொடுவது உங்கள் மனைவியின் மனதில் கண்டிப்பாக ஆசையை முளைக்க செய்யும்; அதோடு அவள் முகத்தில் புன்முறுவல் கூட தோன்றி உங்கள் தொடுதலை ஆமோதிக்கும். ஆனால் நீங்கள் அவளை விட்டு அகன்ற பின்னரே அவள் புன்முறுவல் பூப்பாள்; தொடுதலுக்கு பின் மனைவியை விளையாட்டாக முத்தம் ஐடா முயலுங்கள். அவள் தடுக்கவில்லை எனில், நீங்கள் ஆக வேண்டிய மற்ற வேலைகளை பார்க்கலாம்; இல்லை எனில் அவளுக்கு சற்று நேரம் கொடுங்கள்!

ஆடைகளை களையுங்கள்!
மனைவியை அவள் கொண்டு வாழும் கூட்டை விட்டு வெளியே கொண்டு வர, அவள் முன் நீங்கள் உடை மாற்றுவது என்று ஏதேனும் செய்து அவளை உசுப்பேற்றுங்கள்; மனைவியுடன் தனிமையில் நேரம் கிடைத்தால் அவளின் அந்தரங்களை அடைய அவளின் ஆடைகளை களைந்து முயற்சி மேற்கொள்ளுங்கள். மனைவி உங்களை தடுத்தால், இது அவளுடன் பேசி, மனைவியின் மனதை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் என்று உணருங்கள்.
மனைவியுடன் பேசி அவளின் ஆசைகளை, விருப்பங்களை தெரிந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள்.

காட்டுமிராண்டி தனம்!
மனைவி உறவுக்கு ஒப்பு கொண்ட பின், அவளை காட்டு மிராண்டி தனமாக அணுகாமல், ஒரு பூவை கையாளுவது போல கையாளுங்கள்; வேகமாக நடக்க விரும்பினால், அவளின் அனுமதி பெற்ற பின் செய்யுங்கள். எப்பொழுது உறவு கொள்ள நினைத்தாலும் மனைவியின் அனுமதி மற்றும் அவளின் இஷ்டம் அறிந்து அதன் பின் உறவில் ஈடுபடுங்கள்.

பாதை மாறலாம்..!
பெண்கள் உடலால் கொல்லப்படும் உறவில் வலி, வேதனையை பெரிதாக எண்ணத் தொடங்கினாள், பிற்காலத்தில் அவர்களை உறவுக்கு சம்மதிக்க வைப்பது கடினம்! மேலும் கணவன்மார்கள் தொடர்ந்து தங்களின் இஷ்டப்படி நடந்து, மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் உறவிலும் சரி வாழ்க்கையிலும் சரி நடந்து வந்தால், அது மனைவியரை பாதையை மாற்றி போக செய்யலாம். ஆகையால் கவனமாக கையாளுங்கள்!

குழந்தை பெற்றால் கூட!
தம்பதியருக்கு குழந்தை என்று வந்த பின்னும் கூட, ஒரு குழந்தை அல்ல 10 குழந்தை பெற்றால் கூட, கணவன்மார்கள் உற்சாகமான மனநிலையில், மனைவியின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், உங்களுக்காக எந்த வயதிலும் என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருப்பாள் மனைவி. மனைவி உங்களுக்காக எத்தனை பிரசவத்தையும் சந்தித்து மறு ஜென்மம் எடுக்க தயாராக இருப்பாள்.

வெளிச்சம் காட்டி கொடுக்கும்!
நிஜமாகவே உங்கள் மனைவி உங்களை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருக்கிறாள் என்பதனை நீங்கள் உறவு கொள்ளும் முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். உங்கள் மீது அதிக நம்பிக்கை இருந்தால், பாசம் மற்றும் காதல் இருந்தால், மனைவி உங்களுடன் வெளிச்சம் இருக்கும் நிலையில் உறவு கொள்ள விரும்புவாள்; அல்லது பாசம் குன்றி இருந்தால் இருட்டையே விரும்புவாள்.

என்றென்றும்..!
பெண்கள் உறவுக்கு இருட்டை தேர்ந்து எடுக்க உடல் உறவு மீது இருக்கும் அருவருப்பு அல்லது பயம் கூட காரணமாக இருக்கலாம். அப்படி பட்ட நிலையில் மனைவியிடம் பேசி அவளின் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள். கணவன்மார்கள் கொஞ்சம் மனைவிக்கு மதிப்பு அளித்தால், மனைவியர் என்றென்றும் உங்கள் சொல்படி கட்டிலில் நடந்து கொள்வர்.
இந்த விஷயங்களை சரியாக கடைபிடிக்கும் ஆண்மகனுக்கு நிச்சயம் இனிமையான இல்லறம் மற்றும் தாம்பத்தியம் கிடைக்கும்..! வாழ்வு வசந்தமாக இருக்கும்..!



Click it and Unblock the Notifications











