கருக்கலைப்புக்கு பின் மீண்டும் கருத்தரிக்க உதவும் சில வழிகள்!

இந்த பெண்களின் மனக்குமுறல்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் தான் இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம். கருக்கலைப்பு நிகழ்ந்த பின் மீண்டும் விரைவாக கருத்தரிப்பது எப்படி என்பதை விளக்கும் சில வழிகள் குறித்து இங

கருவுறுதல் என்பது அனைத்து தம்பதியர்களின் வாழ்வின் ஒரு கனவாக, பெரும் ஆசையாக இருக்கும்; ஏனெனில் பிறந்து வளர்ந்து திருமணமான பின், நம் வாழ்க்கைக்கு முழு அர்த்தம் தருவதே நாம் பெற்று எடுக்கப்போகும் குழந்தைகள் தான். அன்பால் அழகாவது வீடு என்றால், அப்படிப்பட்ட அன்பான வீட்டிற்கு முழு அர்த்தம் பெற்று தருவது குழந்தைகளே! இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைகளை கருத்தரித்து பெற்று எடுக்க மாட்டோமா என்பதே பெரும்பாலான பெண்களின் கனவு.

how to improve fertility after a miscarriage

இந்த கனவு நடந்தேறுவது போல் தோன்றி நிறைவேறாமல் போய்விட்டால் அதாவது கரு உருவாகி பின் கலைந்துவிட்டால், பெண்கள், தம்பதியர்கள் அடையும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குழந்தைகளை இழந்த பின் மீண்டும் எப்பொழுது கருத்தரிப்போம், அப்படி உருவாகும் கரு நிலைத்து நின்று வளர்ந்து முழுதாக எவ்வித குறையும் இன்றி வெளிவர வேண்டும் என ஒருமுறை கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்களின் மனம் ஓயாமல் எண்ணிக் கொண்டு இருக்கும்.

இந்த பெண்களின் மனக்குமுறல்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் தான் இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம். கருக்கலைப்பு நிகழ்ந்த பின் மீண்டும் விரைவாக கருத்தரிப்பது எப்படி என்பதை விளக்கும் சில வழிகள் குறித்து இங்கு படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருக்கலைப்பு..!

கருக்கலைப்பு..!

இந்த பதிப்பில் நாம் குறிப்பிடும் கருக்கலைப்பு தம்பதியராக வேண்டுமென்று உண்டான கருவை கலைத்து அழித்து விடுவதல்ல; இங்கு நாம் பார்ப்பது விதி வசத்தால் உண்டான கரு தாயை விட்டு உருவாக மனமில்லாமல் சென்று விடுவது. ஏன் கருக்கலைப்பில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?

வித்தியாசம்!

வித்தியாசம்!

தானாக கரு அழிந்தால், அது மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவும்; நாமாக கலைத்தால் அது எந்தவிதமான பாதிப்புகளையும் அல்லது பயன்களையும் ஏற்படுத்தலாம். நாமாக கலைக்கும் பொழுது நன்கு உருவாகிக் கொண்டிருக்கும் கருவை மருந்துகள் பயன்படுத்தி கொல்கிறோம்; கருவைக் கொல்ல நாம் அச்சமயம் பயன்படுத்தும் மருந்து பின்னாளில் பெண்ணின் உடலில் அல்லது அடுத்தடுத்த கருத்தரிப்பிற்கு பங்கம் விளைவிக்கலாம்.

கருக்கலைப்புக்கு பின்..

கருக்கலைப்புக்கு பின்..

பெண்களின் உடலில் கருக்கலைப்பு நிகழ்ந்த பின், மீண்டும் கருத்தரிக்கும் சத்தியக் கூறுகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கருத்து தெரிவிக்கின்றன. அதாவது ஒருமுறை குழந்தை உருவான போது பெண்ணின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் மாற்றங்கள் பெண்ணின் உடலில் சில மாறுதல்களை கொண்டு வந்திருக்கும். அதன் காரணமாக கருக்கலைப்புக்கு பின் பெண்கள் கருத்தரிப்பதற்கு அதிகமான மற்றும் ஆரோக்கியமான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் அப்படி அதிகரிக்கிறது?

ஏன் அப்படி அதிகரிக்கிறது?

கருக்கலைப்புக்கு பின் மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா, அது ஏனென்றால் முதல் கரு உருவான பொழுது பெண்ணின் உடலில் புரோஜெஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து இருக்கும்; அது கரு கலைந்த பின்னும் ஒரு மாத காலம் வரை நிலைத்து நின்று, பின்பு தான் இயல்பு நிலைக்கு திரும்பும். அதாவது இந்த ஹார்மோன் 3 முதல் 6 வாரங்கள் வரை பெண்ணின் உடலில் இருக்கும்.

மீண்டும் எப்பொழுது முயற்சிக்கலாம்?

மீண்டும் எப்பொழுது முயற்சிக்கலாம்?

ஆனால், தம்பதியர் கருக்கலைப்பு நிகழ்ந்த பின் மீண்டும் கருத்தரிக்க 2 அல்லது 3 மாதங்கள் வரை முயற்சிக்காமல், பெண்ணின் உடல் இழந்த வலிமையை பெற காத்திருக்க வேண்டும். கரு கலைந்ததனால் ஏற்பட்ட உடல் வலியும் மனவலியும் பெண்ணை விட்டு நீங்கும் வரை காத்திருந்து பின்னரே கருத்தரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நாங்கள் காத்திருந்தால், புரோஜெஸ்டிரான் போய்விடுமே மீண்டும் எப்படி கருத்தரிப்பது எப்படி என்ற சந்தேகம் ஏற்படுகிறதா? புரோஜெஸ்டிரான் அளவு அதிகம் என்ற நிலையில் இருந்து சராசரியான சாதாரண நிலைக்கே திரும்புகிறது, எனவே நீங்கள் மீண்டும் கருத்தரிப்பதில் எந்தவித பிரச்சனையும் நேராது.

கருத்தரிக்க உதவும் வழிகள்!

கருத்தரிக்க உதவும் வழிகள்!

கருக்கலைப்பு ஏற்பட்ட பின், மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனை பெற்று உங்களின் உடல் நிலையை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கண்காணித்து வந்து, மருத்துவரிடம் வெளிப்படையாக மீண்டும் எப்பொழுது கருத்தரிக்க முயலலாம் என்று கேட்டு அறிந்து அதற்கேற்ப செயல்படலாம். மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளை பின்பற்றும் அதே சமயத்தில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பழக்க வழக்கங்களை குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

முக்கிய பழக்க வழக்கங்கள்!

முக்கிய பழக்க வழக்கங்கள்!

கருத்தரிக்க மற்றும் கருப்பையை பலமாக்க உதவும் உணவு வகைகளை சரியாக பார்த்து அறிந்து உண்டு வருதல் வேண்டும். உடலின் பலத்தை அதிகரிக்க, கருப்பையின் பலத்தை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கருக்கலைப்பு உண்டான கருப்பையை இதமாக்க மசாஜ் செய்து வருதல் நல்லது. மேலும் கருத்தரிப்பை குறைக்கும் சக்தி கொண்ட பொருட்களான மது, புகை பிடித்தல், காபின் போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மனக்கசப்புகள்!

மனக்கசப்புகள்!

மனஅழுத்தம் மற்றும் கருக்கலைப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட சோர்வு மற்றும் வருத்தம் இவற்றை அதிக நாட்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல், விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி அடுத்த கருவை கருத்தரித்து, உங்களின் வாழ்க்கைக் கனவான உங்களுள் உருவாகப்போகும் உயிரை உணர மற்றும் உருக்கொடுக்க தயாராகுங்கள் தோழியரே! பதிப்பு பயனுள்ளதாய் தோன்றினால் மற்ற பெண்களுக்கு உதவ பதிப்பை பரப்புவீராக!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, August 23, 2018, 10:10 [IST]
Desktop Bottom Promotion