For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பண்ற இந்த ஒரு தவறால... குழந்தைங்க எதிர்காலமே கேள்விக்குறி ஆயிடுது... மாத்திக்கிங்க ப்ளீஸ்!

நீங்க பண்ற இந்த ஒரு தவறால... குழந்தைங்க எதிர்காலமே கேள்விக்குறி ஆயிடுது... மாத்திக்கிங்க ப்ளீஸ்!

|

நம்ம நாட்டுல இன்னும் மாறாத விஷயங்கள் நிறையவே இருக்கு குழந்தைகள வெச்சு ட்ராபிக் சிக்னல்ல பிச்சை எடுக்குறதுல இருந்து... ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகள மார்க் எடு, மார்க் எடுன்னு பிச்சு எடுக்குறது வரைக்கும். காலங்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும், மழை பெய்யாமல் வெயில் நூறு டிகிரியை தாண்டினாலும் கூட... இப்படியான சில விஷயங்கள்ல இருந்து நாம மாற வாய்ப்பே இல்ல.

நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் முடியல, நான் என்ஜினியராக ஆசைப்பட்டேன் முடியல... நான் கிரிக்கெட்டர் ஆகல, நான் பைலட் ஆகல... நான் சயிண்டிஸ்ட் ஆகலன்னு... பெத்த ஒரே கடமைக்காக நம்ம பிள்ளைங்க மனசுல என்ன விதை இருக்குன்னே தெரியாம அத மாடிஃபைடு பண்ணி அவங்க நேச்சர அழிச்சுட்டு அப்பறம் மார்க் எடுக்கல, மார்க் எடுக்கலன்னு திட்டுவோம்.

Do Not Pressurize Your Children. They Are Not a Cooker To Result in Quick Time.

என்ன சார் இது... டிவிகுள்ள இருக்க பிக்சர் டியூப பிடிங்கிட்டு எங்க படமே ஓடலன்னு புலம்புன்னா எப்படி ஓடும். பிள்ளைங்க மனசுக்குள்ள இருக்க ஆசைய உடைச்சுட்டு அவங்க ஜெயிக்கலன்னு புலம்புன்னா எப்படி சார் முடியும். நம்ம அப்பா நம்ம மேல விதைச்ச அதே விஷத்த... நாம நம்ம பிள்ளைங்க மேல விதைக்கனுமா? ஆட்சியில மட்டுமே மாற்றத்த காண விரும்புற நீங்க முதல்ல கொஞ்சம் வீட்டுலையும் கொண்டு வாங்க. இந்த நாடு தன்னப் போல முன்னேறும்.

முன்னாடியாச்சும் அவங்க பிள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு தான் பெத்தவங்களுக்கு தெரியல... ஆனா இப்போ எல்லாம் அவங்க பிள்ளைங்க என்ன பன்றாங்கன்னே பெத்தவங்களுக்கு தெரியல. ஆளாளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் வெச்சுக்கிட்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை டேட்டா ரீசார்ஜ் பண்ணிக்கிட்டு நிம்மதியா சுத்துறோம். டேட்டா ரீசார்ஜ் பண்ணிவிடுறது இல்ல பெற்றோர் கடமை. அந்த டேட்டாவா அவன் எப்படி யூஸ் பண்றான். என்ன டவுன்லோட் பண்றான்னு பாக்குறது தான் பெற்றோர் கடமை.

புள்ளைங்க கனவ அழிக்கிற பெற்றோர் ஒருபுறம்னா... புள்ளைங்க கனவுகளுக்காக வாழ்றோம், உழைக்கிறோம்ன்னு சொல்லிட்டு... பெத்த பிள்ளைங்க என்ன பண்றாங்க, எங்க போறாங்கன்னே தெரியாம அவங்க ஆசைப்பட்டத வாங்கிக் கொடுத்துட்டு, கேட்கும் போதெல்லாம் பணத்த கொடுத்திட்டு இன்னொரு புறம் வேற மாதிரியான பெற்றோர் அவங்க பிள்ளைங்க வாழ்க்கை நாசமாக காரணமாக இருக்காங்க.

பெத்தவங்க ஸ்ட்ரிக்டா இருக்கணுமா, கூடாதான்னு கேட்டா... உப்பு மாதிரி இருக்கணும்னு சொல்லலாம். சுத்தமா உப்பு இல்லாம போயிட்டா ருசியே இருக்காது. அதுவே உப்பு அதிகமா இருந்துட்டா குமட்டிக்கிட்டு வாந்தி தான் வருமே தவிர அது வயித்துல தங்காது.

பக்கத்து வீட்டு பொண்ணு என்ஜினீயரிங் படிக்கிறா... அதோ அவன் கிராபிக் டிசைனிங் படிக்கிறான்... சொந்தக் கார பையன் மெரைன் படிச்சு கப்பல்ல வேலையாம், கைநிறைய சம்பாதிக்கிறான்னு சொல்லிக்கிட்டு... பிள்ளைங்க மனசுக்குள்ள இருக்க கனவு, குறிக்கோள் பத்தி தெரிஞ்சுக்காமா... எது படிச்சா... என்ன வேலைக்கு போனா கைநிறைய சம்பாதிக்கலாம்னு பெத்தவங்க எல்லாம் பிள்ளைங்கள ஒரு முதலீடா பார்க்கிறதுனால தான் சில சமயத்துல பிள்ளைங்க பெத்தவங்கள வங்கிக் கடனா பார்த்து... கடன் முடிஞ்சதும் குளோஸ் பண்ணிட்டு போயிடுறாங்க.

பெத்தவங்க, பெத்தவங்களா இருந்தா தான்... பிள்ளைங்க பிள்ளைங்களா இருப்பாங்க. பத்து மாசம் பெத்தெடுத்த அம்மாவ விட, இருபது வருஷம் வளர்த்த அப்பாவவிட வேற யாருக்குங்க அந்த பிள்ளைய பத்தி முழுசா தெரிஞ்சுட வாய்ப்பு இருக்கு? என்ன சாப்பிட பிடிக்ககும்ன்னு தெரிஞ்சுகுறதோட அம்மாவோட கடமை முடிஞ்சிடுமா.. என்ன ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தா மகன் விரும்புவான்னு தெரிஞ்சிக்குறதோட அப்பா கடமை முடிஞ்சிடுமா?

எப்படியோ ரிசல்ட் வந்தாச்சு. அடுத்த காலேஜ். தயவு செஞ்சு என்ஜினியர் படிச்சா தான் வாழ்க்கைன்னு சொல்லி தள்ளி விட்டுடாத்தீங்க. ஏற்கனவே கடந்த மூணு, நாலு வருஷமா வேலைக் கிடைக்காம ஆயிரக்கணக்கான பேர் அலைஞ்சுட்டு இருக்காங்க. என்ஜினீரிங்கும் ஒரு கலை தாங்க. பாடுறதுக்கும், ஆடுறதுக்கும் எப்படி ஆர்வமும், ஆசையும் வேணுமோ. அதே மாதிரி தான் என்ஜினீரிங் படிக்கிறதுக்கும், டாக்டர் படிக்கிறதுக்கும் ஆர்வமும் ஆசையும் வேணும்.

எந்த வேலையா இருந்தாலும் சரி, படிப்பா இருந்தாலும் சரி ஆர்வம் இல்லாம பண்ண முடியாது. ஆர்வம் இருந்தா மட்டும் தான் அது பிரஃபஷனா இருக்கும். ஆர்வம் இல்லாம பண்ற எந்த வேலையா இருந்தாலும் சரி, எத்தன லட்சம் சம்பாதிச்சாலும் சரி... அது கூலி வேலைக்கு போறது மாதிரி தான் இருக்கும்.

ரிசல்ட் வந்தவுடனே அந்த காலேஜ்ல சீட் முடிஞ்சுடும். இந்த காலேஜ்ல இடம் கிடைக்காம போயிடும்ன்னு அவசரப்படுத்தாம... உங்க பிள்ளைங்க மனசுல இருக்க ஆசை என்ன? அத நிறைவேற்ற எங்க படிக்க வெச்சா நல்லா வருவான், வளருவான்னு தெரிஞ்சுட்டு... கொஞ்சம் ஆராஞ்சு பார்த்துட்டு... அப்பறம் சேர்த்துவிடுங்க. காலேஜ் படிக்கிற மூணு, நாலு வருஷம் இன்வெஸ்ட்மென்ட் இல்லைங்க... அவங்க எதிர்காலம்.

இனிமேலும், குழந்தைங்கள பிரெஷர் குக்கர் ஆக்காதிங்க!

English summary

Do Not Pressurize Your Children. They Are Not a Cooker To Result in Quick Time.

Do Not Pressurize Your Children. They Are Not a Cooker To Result in Quick Time. And Even Cooker Itseld Do not Result you What You Ask. It Will Give You Just What it Has in it.
Story first published: Wednesday, May 16, 2018, 17:17 [IST]
Desktop Bottom Promotion