பெண்ணின் இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக பெண்கள் கருத்தரித்துவிட்டால், அப்பெண்ணுக்கும், குடும்பத்தாருக்கும் என்ன குழந்தையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கும். ஆனால் நம் இந்தியாவில் பெண் சிசுக் கொலைகள் நடைபெறுவதால், பாலினத்தை கேட்டு அறிவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நம் முன்னோர்கள் கூறும் சில அறிகுறிகளைக் கொண்டு, பலரும் வயிற்றில் என்ன குழந்தை இருக்கும் என்பதை கணித்துக் கூறுவார்கள்.

சமீபத்தில் ஒரு ஆய்வில் கருத்தரிக்க நினைக்கும் பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கொண்டு, அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை அறியலாம் என கண்டறியப்பட்டுள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அதுவே உண்மை. இப்போது அதுக்குறித்த உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சமீபத்தில் டாக்டர். ரவி ரத்னாகரன் மேற்கொண்ட ஆய்வில், கரித்தரிக்கும் முன் பெண்களது இரத்த அழுத்தத்தைக் கொண்டு, என்ன குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதை அறியலாம் என தெரிய வந்துள்ளது.

உண்மை #2

உண்மை #2

டாக்டர். ரவி ரத்னாகரன் மற்றும் அவரது ஆய்வு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், சுமார் திருமணமாகி கருத்தரிக்க நினைக்கும் 1400 பெண்கள் கலந்து கொண்டனர்.

உண்மை #3

உண்மை #3

ஆய்வு குழுவினர் கருத்தரிப்பற்கு 26 வாரத்திற்கு முன்பே ஒவ்வொரு பெண்ணின் இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்துக் கொண்டனர்.

உண்மை #4

உண்மை #4

இந்த சோதனையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதும், குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்ட பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

உண்மை #5

உண்மை #5

இதுக்குறித்து டாக்டர். ரத்னாகரன் கூறுகையில், ஒரு பெண்ணின் இரத்த அழுத்தம் அப்பெண்ணின் அக உடற்செயலியலைக் குறிப்பதாகவும், இதைக் கொண்டு அப்பெண் எந்த குழந்தையை சுமக்கும் வாய்ப்புள்ளதும் கண்டறியப்படுகிறதாம். உள் உடற்செயலியல் தான் குழந்தையின் பாலினத்தில் முக்கிய பங்கை வகிப்பதாகவும் டாக்டர் ரத்னாகரன் கூறினார்.

உண்மை #6

உண்மை #6

டாக்டர். ரத்னாகரன் பெண்ணின் இரத்த அழுத்தத்திற்கும், குழந்தையின் பாலினத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, மேன்மேலும் ஆய்வு மேற்கொள்ள போவதாகவும் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman's Blood Pressure Before Pregnancy Can Predict Baby's Gender!

Let us see how the blood pressure of the mother before pregnancy can predict the babys gender. Here are a few facts.
Story first published: Tuesday, January 24, 2017, 13:17 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter