மீண்டும் பயன்படுத்த கூடிய துணி நாப்கின்களை பயன்படுத்துவது சரிதானா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.

மாதவிடாய் பிரச்சனையா? இப்படி இருந்தால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை சந்திக்கவும்!

ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16,800 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் தான் இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன.

Why You Should Switch to Reusable Napkins

ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. காயங்கள் இல்லை!

1. காயங்கள் இல்லை!

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்து நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது. இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.

ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

2. கெமிக்கல் அதிகம்

2. கெமிக்கல் அதிகம்

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.

3. பணம் மிச்சம்

3. பணம் மிச்சம்

துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். இதனால் உங்களுக்கு செலவு மிச்சமாகிறது.

4. சுற்றுசூழல் பாதுகாப்பு

4. சுற்றுசூழல் பாதுகாப்பு

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு நாப்கின்களை தூக்கி எரிந்துவிடுகிறோம். ஆனால் இது நீர் ஆதாரங்கள் மற்றும் மண்ணை அசுத்தப்படுத்துகிறது. இதனை எரிக்க வட அமெரிக்கா 20 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறதாம்.

இதனை தயாரிப்பதால் கூட நீர், காற்று, மிருங்கங்கள் ஆகியவை பாதிப்படைகிறது. ஆனால் பலமுறை உபயோகிக்கும் நாப்கின்களை பயன்படுத்தினால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

5. சிறிய நிறுவனங்களுக்கு உதவலாம்

5. சிறிய நிறுவனங்களுக்கு உதவலாம்

பல முகம் தெரியாத பெரிய பெரிய கார்பரேட் நிறுவங்களை வளர்ச்சியடைய செய்வதற்கு பதிலாக, நமது நாட்டில் உள்ள சிறிய நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்வதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும்.

6. வெளியில் கசியாது, சுத்தமானது

6. வெளியில் கசியாது, சுத்தமானது

பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான். ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல.

நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.

7. பிடித்த அளவு, நிறம்

7. பிடித்த அளவு, நிறம்

இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Should Switch to Reusable Napkins

Why You Should Switch to Reusable Napkins
Story first published: Thursday, July 20, 2017, 15:46 [IST]