ஆண் குழந்தை பெற்றெடுக்க பண்டையக் காலத்தில் என்னென்ன செய்தார்கள் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆண் குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தனது வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக ஆண் குழந்தைகளை பார்க்கின்றனர். ஆனால், ஒரு வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக கருதப்படும் ஆண் குழந்தையை ஈன்றெடுக்கு பெண்ணால் தான் முடியும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

ஏனோ, அன்று முதல் இன்று வரை இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் போல தம்பதி மத்தியில் ஆண் குழந்தை மோகமும் சற்றும் குறையவில்லை. ஒருவேளை அதிகரிக்கும் கற்பழிப்பு குற்றங்களினால் அச்சம் கொண்டு கூட பெண் பிள்ளை பெற்றுக் கொள்ள தம்பதிகள் மறுக்கிறார்களோ?

சரி, மேட்டருக்கு வருவோம்... அது என்ன பண்டைய காலத்து முறை என்கிறீர்களா? ஆம், இளங்கலை ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்களின் பாட புத்தகத்தில் இப்படி ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. வாங்க அதை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுஷ் அமைச்சகம்!

ஆயுஷ் அமைச்சகம்!

ஆயுர்வேத யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி போன்றவற்றை அடங்கியது தான் ஆயுத் (AYUSH) ஆகும்.

இதில் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் (BAMS) படிக்கும் மாணவர்களின் மூன்றாம் ஆண்டு பாட புத்தகத்தில் தான் ஆண் குழந்தை பெற உதவும் ரெசிபிக்கள் பற்றி கற்றுத் தருகிறார்கள்.

ரெசிபி 1!

ரெசிபி 1!

உளுத்தம்பருப்பு, கடுகு எடுத்துக் கொண்டு அதை, தயிருடன் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். ஆண் கரு உண்டாகும் உதவும் இந்த செயல்திறனுக்கு புஷன்வன் என பெயரிட்டிருக்கிறார்கள்.

ஆண் குழந்தை விரும்பும் கருத்தரித்த பெண்கள், இந்த சடங்கை செய்து வந்தால், அவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என இதில் கூறப்பட்டுள்ளது.

ரெசிபி 2!

ரெசிபி 2!

தங்கம், வெள்ளை கொண்டு சிறிய ஆண் சிலை செய்து, அதை உலையில் இட வேண்டும். அது உருகிய பிறகு அதை பால், தயிர் அல்லது நீரில் கலந்து புஷ்ப நக்ஷத்திரதில் பருக வேண்டுமாம்.

ரெசிபி 3!

ரெசிபி 3!

அரிசி மாவை நீரில் கலந்து சமைக்க வேண்டும், சமைக்கும் போது வெளிவரும் அந்த ஆவியை பெண்கள் மூச்சு மூலம் உள்ளிழுக்க வேண்டும்.

பஞ்சு உருண்டை!

பஞ்சு உருண்டை!

பிறகு சமைத்த அரிசு மாவுடன் தண்ணீர் சேர்த்து அதில் பஞ்சு உருண்டையை நனைத்து எடுத்து கொள்ள வேண்டும். கதவு நிலை இடத்தில் தலை நிலத்தில் படும் நிலையில் படுத்து, அந்த நனைத்த பஞ்சு உருண்டையை நீரை சில துளிகள் நாசி வழியே ஊற்றி, வாய் வழியே துப்ப வேண்டும். பிறகு அந்த பஞ்சு உருண்டையை விழுங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களை (Dangal) மிஞ்சும் ஸ்க்ரீன் ப்ளே!

தங்களை (Dangal) மிஞ்சும் ஸ்க்ரீன் ப்ளே!

தங்கள் படத்தில் அமீர் கானுக்கு ஆண் குழந்தை வேண்டும் என என்னென்னமோ செய்வார்கள். ஆனால், ஆண் குழந்தையே பிறக்காது. அவற்றை எல்லாம் மீறி, மிஞ்சி நிற்கிறது இந்த பாடப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகள்!

அறிவியல்!

அறிவியல்!

அறிவியல் ஆராய்ச்சியில் வெகு தூரம் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கும் போது, அப்படிப்பட்ட பாடங்களை சேர்ப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? பண்டையக் காலத்தில் கூறப்பட்டவை என்பதற்காக, என்ன? ஏது? இதனால் என்ன பயன் விளையும், அதன் தாக்கங்கள் எப்படி இருக்கும் என தெரியாமல் கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்றுவது சரியானது அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The ancient secret from the Charak Samhita to conceiving a baby boy

The ancient secret from the Charak Samhita to conceiving a baby boy
Story first published: Friday, May 12, 2017, 15:10 [IST]
Subscribe Newsletter