For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பின் போது உயிரிழந்த 21 வயது மாணவி! கருக்கலைப்பின் போது நடந்தது என்ன?

நிறைவடையாத கருக்கலைப்பினால் இறந்த பெண்

By Lakshmi
|

கருக்கலைப்பு என்பது இன்றைய சூழ்நிலையில், தகாத உறவு மற்றும் பாதுகாப்பற்ற உறவுகளின் காரணத்தால் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனால் உண்டாகும் ஆபத்துக்களை பற்றி இன்றைய சமூதாயம் உணருவதில்லை. அப்படியே என்னென்ன ஆபத்துகள் நிகழும் என்று தெரிந்திருந்தாலும் கூட, அதை உதாசினப்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையே உருகுலைந்து போகிறது. பல உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10 வயது சிறுமி

பொறியியல் மாணவி

பொறியியல் மாணவி

இதே போல் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி கடந்த திங்கள் கிழமை அன்று கூட சரியாக கர்ப்பம் கலைக்கப்படாததால் ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் இறந்தார்.

அதிக இரத்தப்போக்கு :

அதிக இரத்தப்போக்கு :

இந்த பொறியியல் மாணவி தனது சொந்த ஊரை விட்டுவந்து, கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது தூரத்து உறவினர் ஒருவருடன் உடலுறவு கொண்ட காரணத்தினால், கர்ப்பமாகியுள்ளார். இதனை கலைக்க முற்பட்ட போது, உண்டாகிய அதிக இரத்தப்போக்கினால், இவர் மற்றொரு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

5 மாத கருவிற்கு 20,000 ரூபாய்!

5 மாத கருவிற்கு 20,000 ரூபாய்!

5 மாத கர்ப்பத்தை கலைக்க அந்த பெண்ணின் காதலன், மருத்துவர்களுக்கு 20,000 ரூபாய் கொடுத்துள்ளார். காவல் துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கருக்கலைப்பு தோல்வி :

கருக்கலைப்பு தோல்வி :

கரு சரியாக கலைக்கப்படாமல் இருக்கும் நிலையை தான் கருக்கலைப்பு தோல்வி என்கிறார்கள். 2007 ஆம் ஆண்டின் ஆய்வின் படி, கருக்கலைப்பு தோல்வியால் வருடத்திற்கு 66,000 பெண்கள் உலகம் முழுவதும் இறந்து கொண்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆண்டுக்கு 68, 000 பெண்கள் கருக்கலைப்பு தோல்வியால் உயிரிழந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுகள் செல்ல செல்ல உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

விபரீதம்

விபரீதம்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் 13% தாய்கள் இறக்கின்றனர். மேலும் 5 மில்லியன் பெண்களுக்கு இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

student dies of botched abortion

student dies of botched abortion
Story first published: Monday, August 21, 2017, 15:19 [IST]
Desktop Bottom Promotion