பிரசவ வலி குறையவும், ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கவும் உதவும் குங்குமப்பூ!

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது தாய் அல்லது கணவன் கொடுக்கும் பரிசு குங்குமப்பூவாக தான் இருக்கும். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு விஷயம். இப்படி சொன்னால் தான் கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை சாப்பிடுவார்கள் என எண்ணி கூட இவ்வாறு கூறி இருக்கலாம்.

இந்த பகுதியில் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுகப்பிரசவம்:

1. சுகப்பிரசவம்:

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக குங்குமப்பூவை சாப்பிடலாம். ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

2. பிரசவ வலி குறைய..

2. பிரசவ வலி குறைய..

அதுமட்டுமின்றி கர்ப்பமாக உள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை கலந்து பருகி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவம் வலி இன்றியும் நடக்கும்.

3. மாதவிலக்கு பிரச்சனை:

3. மாதவிலக்கு பிரச்சனை:

அதுமட்டுமின்றி, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் தன்மையும் குங்குமப்பூவிற்கு உள்ளது. எனவே இதனை கர்ப்பமாக இல்லாத பெண்களும் சாப்பிடலாம்.

4. விந்தணு அதிகரிக்க

4. விந்தணு அதிகரிக்க

குங்குமப்பூவை சாப்பிடுவதால் பெண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சில நன்மைகள் ஏற்படும். அதாவது ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் இந்த குங்குமப்பூ ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.

5. எப்போது சாப்பிடலாம்?

5. எப்போது சாப்பிடலாம்?

கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் கூட இதை சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். பசியை அதிகரிக்கும்.

6. அளவாக சாப்பிட்டால் அமிர்தம்

6. அளவாக சாப்பிட்டால் அமிர்தம்

எந்த ஒரு மருந்தையும் மட்டுமல்ல உணவுகளை கூட அளவாக சாப்பிட்டால் அமிர்தமாகும். இது குங்குமப்பூவிற்கும் பொருந்தும். குங்குமப்பூவை மிக குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

7. போலிகளை கண்டு பிடிப்பது எப்படி?

7. போலிகளை கண்டு பிடிப்பது எப்படி?

சூடான தண்ணீரில் சிறிதளவு குங்குமப்பூவை போட்டால் அது மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நல்ல மணம் வீசும்! நாள் முழுவதும் பூவிலிருந்து நிறம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இது உண்மையான குங்குமப்பூ..!

சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும். இது போலியான குங்குமப்பூ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

saffron health benefits

saffron health benefits
Story first published: Tuesday, July 25, 2017, 15:19 [IST]