ஒரே குழந்தை போதும்னு நினைக்கறீங்களா? இத படிங்க..

Written By: Lakshmi
Subscribe to Boldsky

திருமணமான சில தினங்களில் அனைவரும் குழந்தையை பற்றி யேசிப்பார்கள். இப்போது பல தம்பதிகள் ஒற்றை குழந்தையை தான் விரும்புகின்றார்களாம். பிறக்கும் ஒரே குழந்தைக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து சீராட்டி பாராட்டி வளர்க்கலாம் என நினைக்கிறார்கள். நீங்கள் ஒரே குழந்தை போதும் என நினைத்தால், அதில் உள்ள நிறைகள் மற்றும் குறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை

ஒரே குழந்தை என்பதால் பெற்றோர்களின் பாசம் மற்றும் அரவணைப்பு முழுமையாக அந்த குழந்தைக்கு சென்று சேரும். மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகமான சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

சிறந்ததே கிடைக்கும்!

சிறந்ததே கிடைக்கும்!

ஒரே குழந்தையாக இருந்தால் உடைகள், பொருட்கள் என அனைத்திலும் சிறந்ததையே அடைவார்கள். மேலும் பெற்றோர்களின் கவனிப்பு முழுவதும் இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

சமாளிக்க தேவையில்லை

சமாளிக்க தேவையில்லை

ஒற்றை குழந்தைகள் தங்களது சகோதரன் அல்லது சகோதரியை சமாளித்து போக வேண்டியது அவசியம் இருக்காது.

ஒப்பிடுதல்

ஒப்பிடுதல்

ஒரே குழந்தைகள் தங்களது சகோதரர் அல்லது சகோதரிகளுடன் ஒப்பிட்டபடுவதில்லை.

ஒரே குழந்தைகள் இருப்பதால் உண்டாகும் குறைகள் என்னவென்று காணலாம்.

தனிமை

தனிமை

ஒரே குழந்தை இருந்தால், தனிமையில் வளர வேண்டியிருக்கும். அவர்களுடன் ஒன்றாக வளர யாரும் இருக்கமாட்டார்கள்.

கடமை அதிகம்

கடமை அதிகம்

ஒற்றை குழந்தைகள் பெற்றோர்களை திருப்திபடுத்த நிறைய கடமைகளை செய்ய வேண்டியிருக்கும். பள்ளி , கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் வாங்குதல், சிறப்பான வேலை என ஒரே குழந்தை என்பதால் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒரே குழந்தை என்பதால் பெற்றோர்கள் அதிக கவனம் எடுத்து அந்த குழந்தையை பார்த்துக்கொள்வார்கள். ஒரு அளவிற்கு பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் அதுவே அதிகரித்தால் குழந்தைகளுக்கு கட்டுப்பாடாக இருக்கும்.

போர் அடிக்கும்

போர் அடிக்கும்

ஒரே குழந்தைகள் என்பதால் அவர்கள் அதிக நேரத்தை தனிமையில் கழிக்க வேண்டியிருக்கும், எனவே அது அவர்களுக்கு போர் அடிக்கும்.

சமூகத்தில் பழகுதல்

சமூகத்தில் பழகுதல்

ஒற்றை குழந்தைகள் எளிதாக சமூகத்தில் இணக்கமாக மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களுடன் பழக அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள்.

சகோதர சகோதரி பாசம்

சகோதர சகோதரி பாசம்

ஒரே குழந்தையாக இருந்தால், அவர்கள் சகோதர சகோதரி பாசத்தை அனுபவிக்காமலேயே போய்விடக்கூடும்.

ஒருவேளை நீங்கள் இரண்டாவது குழந்தை பெற விரும்பினால், உங்களது நிதி நிலை மற்றும் குடும்பத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குழந்தைக்கு முயற்ச்சியுங்கள். இல்லையென்றால், இருக்கும் ஒரு குழந்தையை சீரும் சிறப்புமாய் வழப்பது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pros and Cons of Having Single Child

Pros and Cons of Having Single Child
Story first published: Saturday, June 17, 2017, 12:15 [IST]