உடல் எடை அதிகரிப்பினால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?

Written By:
Subscribe to Boldsky

உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிமான உடல் எடை உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் திறன் குறைகிறதாம். இது பற்றி முழுமையாக இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 1,200க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக குறைந்த விந்தணுக்களின் அளவையும், குறைந்த செயல் திறன் கொண்ட விந்தணுக்களையும் பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

கருவுரும் திறன் குறைவு

கருவுரும் திறன் குறைவு

அதிக உடல் எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களுக்கு பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு வலிமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றின் தரம் மிகக்குறைவாக உள்ளது. இதனால் கருவுறும் தன்மையும் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஆண்களுக்கும் தான்

ஆண்களுக்கும் தான்

முதலில் உடல் எடை அதிகரிப்பு என்பது பெண்களின் கருவுறும் திறனை பாதிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண்களின் கருவளத்தையும் சேர்த்தே பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது.

விந்தணு ஆரோக்கியத்திற்கு

விந்தணு ஆரோக்கியத்திற்கு

எப்படி உடல் எடை அதிகரிப்பு விந்தணுக்களின் திறனை குறைக்குமோ, அதே போல் தான் உடல் எடையை குறைக்கும் போது விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

உணவுக்கட்டுப்பாடு

உணவுக்கட்டுப்பாடு

தேவைக்கு அதிகமாக உண்ணுதல், ஆல்கஹால் பருகுதல் ஆகியவை உங்களுக்கு உடல் எடையை அதிகரித்து, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே வெளியில் சாப்பிடும் துரித உணவுகளை முடிந்த வரை குறைத்துக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

over weight may reduces the Sperm Health

over weight may reduces the Sperm Health
Story first published: Monday, September 25, 2017, 15:52 [IST]