மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

Written By:
Subscribe to Boldsky

நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், டூர் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர்.

இன்றும் சிலர் மாதவிடாய் ஏற்படுவதை உடலில் நடக்கும் சாதாரண ஆரோக்கிய நிகழ்வாக கருதுவதில்லை. இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாப்கின்கள்

நாப்கின்கள்

மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன. மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.

பொருந்தாத மாத்திரைகள்

பொருந்தாத மாத்திரைகள்

மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது ஒவ்வாமையை உண்டாக்கும். பெண்களின் கர்ப்பப்பை பூ போல மென்மையானது. அதனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மருத்துவர் ஆலோசனை

மருத்துவர் ஆலோசனை

பெண்கள் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு. கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும்.

எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.

விளைவுகள்

விளைவுகள்

உங்களது ஆரோக்கிய பின்னனி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

வெளிநாடுகளில் தடை

வெளிநாடுகளில் தடை

வெளிநாடுகளில் வலி நிவாரணிகள், ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் மாத்திரைகளை நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளில் வாங்க முடியாது. ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை. நாமே மருந்தின் பெயரை சொல்லி மாத்திரைகளை வாங்கிக்கொள்கிறோம்.

மாத்திரைகள் உண்டாக்கும் பின்விளைவுகளை பற்றி தெரியாமல் அதனோடு விளையாடி, ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறோம் என்பது தான் உண்மை.

அதிகமாகும் உதிரப்போக்கு

அதிகமாகும் உதிரப்போக்கு

நீங்கள் இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால், பின்னாளில் உங்களுக்கு மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is it Right Way to take tablet to stop periods

Is it Right Way to take tablet to stop periods
Story first published: Thursday, July 27, 2017, 14:37 [IST]