மகப்பேறு மருத்துவர் இதை பற்றி உங்களிடம் பேச தயங்குவார்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை பெறுவதற்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்வது அனைத்து பெண்களுக்குமே ஒரு புது அனுபவமாக தான் இருக்கும். முதலில் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் மகப்பேறு மருத்துவரிடம் செல்வது, அவர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிப்பது போன்றவை சற்று சங்கடமான விஷயமாக தான் இருக்கும். உடலுறவு, வலிகள் போன்றவற்றை பற்றி மருத்துவரிடம் பேச யாருக்காக இருந்தாலும், ஒரு வித கூச்சம் இருப்பது இயல்பு தான்.

அதே போல தான் மருத்துவர்களுக்கும், நம்மிடம் ஒருசில விஷயங்களை பற்றி ஆலோசனை செய்ய முடியாது. அவர்கள் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவர்களால் சில விஷயங்களை பற்றி பேச முடியாது. அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணுறுப்பு நாற்றம்

பெண்ணுறுப்பு நாற்றம்

ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு சில பரிசோதனைகளை பெண்ணுறுப்பில் செய்ய வேண்டியது அவசியம். அப்போது பெண்ணுறுப்பில் ஒரு வித துர்நாற்றம் வீசினால், மருத்துவருக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை பற்றி மருத்துவர், உங்களிடம் சொல்ல நினைத்தாலும், பெரும்பாலும் இதை பற்றி சொல்வது கிடையாது.

சேவ் செய்வது

சேவ் செய்வது

பெண்ணுறுப்பில் முடிகள் இருப்பது இயல்பு தான். ஆனால் இதனை அடிக்கடி நீக்கி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டியது அவசியம். இதனை நீக்காமல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றால், அது மருத்துவருக்கு அசௌகரியத்தை உண்டாக்கும். இருந்தாலும் சில மருத்துவர்கள் இதனை பற்றி உங்களிடம் கூற மாட்டார்கள்.

உடலுறவு

உடலுறவு

நீங்கள் மருத்துவர் கூறிய கால அட்டவணைகளின் படி தான் உடலுறவு கொள்கிறீர்களா, இல்லை அதை மீறி நடக்கிறீர்களா என்பது பற்றி மருத்துவர் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள சற்று அசௌகரியமாக உணரலாம்.

உடலுறவின் போது வலி

உடலுறவின் போது வலி

உடலுறவின் போது வலி ஏற்படுவதும், அசௌகரியங்கள் உண்டாவதும் இயல்பான ஒன்று தான். உங்களது கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது உங்களுக்கு வலி, அசௌகரியம் போன்றவை உண்டானால், நீங்கள் அதனை பற்றி கண்டிப்பாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு, உடலுறவின் போது இரத்த போக்கு கூட உண்டாகலாம். பொதுவாக உடலுறவின் போது இரத்த போக்கு என்பது வறட்சியான பெண்ணுறுப்பு அல்லது வேகமாக செயல்பாடுகளினால் உண்டாகிறது. நீங்கள் கர்ப்ப காலத்தில் இதனை பற்றி எல்லாம் மருத்துவரிடம் மறைக்காமல் கூற வேண்டியது அவசியம்.

இவை வேண்டாம்

இவை வேண்டாம்

பெண்ணுறுப்பிற்கு தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும் தன்மை உண்டு. அதற்காக நீங்கள் கண்ட கண்ட விலை உயர்ந்த அல்லது இராசயனங்களை பயன்படுத்துவது, நறுமணமான சோப்புகளை பயன்படுத்துவதை மருத்துவர் கண்டிப்பாக உங்களிடம் தவிர்க்க கூறுவார். இதனை நீங்கள் பயன்படுத்தினால் உங்களது பெண்ணுறுப்பில் உள்ள தீய பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் அதோடு சேர்த்து பெண்ணுறுப்பிற்கு தீங்கு விளைவிக்கும் தீய பாக்டீரியாக்களும் அழிந்து விடும். இதனால் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இறுக்கமான உள்ளாடைகள்

இறுக்கமான உள்ளாடைகள்

இறுக்கமான உள்ளாடைகளை அணிவது முற்றிலும் தீங்கு விளைவிக்கும் ஒன்று தான். இதனை நீங்கள் செய்தால் உங்களது அந்தரங்க பகுதிகளுக்கு செல்ல வேண்டிய காற்று தடை பட்டு, உங்களுக்கு தொற்றுகள் உண்டாகும். மேலும் ஈரமான உள்ளாடைகளை அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். ஈரமான உள்ளாடைகளால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

மறைக்க வேண்டாம்

மறைக்க வேண்டாம்

சிலர் தங்களுக்கு இருக்கும் பாலியல் சம்பந்தமான தொந்தரவுகள் பற்றி தங்களது குடும்பத்தில் கூறுவதே இல்லை. குறைந்தபட்சம் தனது தாய் அல்லது தந்தையிடம் இதை பற்றி பகிர்ந்து கொள்வதாவது வேண்டும்.

பிரசவத்திற்கு பிறகு

பிரசவத்திற்கு பிறகு

பிரசவமானவுடன் ஏற்படும் உதிரப்போக்கு லோக்கியா என்று பெயர். இது குறைந்த பட்சம் மூன்று வாரங்களுக்கும் அதிக பட்சமாக ஆறு வாரங்களுக்கு கூட இருக்கும். ஆரம்ப நாட்களில் அதிகமான உதிரப்போக்கும், நாளைடைவில் படிப்படியாக குறைந்தும் காணப்படும். இந்த காலகட்டத்தில் உதிரப்போக்கு மிகக் குறைவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மாறாக, உதிரப்போக்கு அதிகமாக இருப்பின் மருத்துவ பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை அவசியம்.

மாதவிடாய் நிற்கும் காலம்

மாதவிடாய் நிற்கும் காலம்

மாதவிடாய் நிற்பதற்கான சராசரி வயது 48 முதல் 55 வயது வரை. இது பொதுவாக மரபு வழி சார்ந்ததே. உங்கள் தாய் அல்லது மூத்த சகோதரிக்கு சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ மாதவிடாய் நின்றிருந்தால் உங்களுக்கும் அது போலவே நிகழ்வதற்கான சாத்தியம் அதிகம்.

கர்ப்ப கால உடற்பயிற்சி

கர்ப்ப கால உடற்பயிற்சி

கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். மற்றபடி அனைத்து கர்ப்பிணி பெண்களும் உடற்பயிற்சி செய்யலாம். நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி போன்றவை செய்யலாம். உங்களுக்கு தகுந்த பயிற்சிகளை மருத்துவர் பரிந்துரைப்பார். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வோர்க்கு முதுகு - தசை சம்பந்தப்பட்ட வலிகள் குறைவாக இருக்கும். மேலும் குழந்தை பிறந்த உடன் உடல் பழைய நிலைக்கு திரும்ப அது உதவி ஆக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

GYNECOLOGIST WILL NOT SAY ABOUT THIS

GYNECOLOGIST WILL NOT SAY ABOUT THIS
Story first published: Friday, October 20, 2017, 14:49 [IST]
Subscribe Newsletter