ஆண்களின் விறைப்பு பற்றி ஆண்களுக்கே தெரியாத 7 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் தங்களிடம் அதிகம் இருக்க வேண்டும் என விரும்பும் விஷயங்களில் இரண்டு வீராப்பும், விறைப்பும். ஒன்று மனதளவில் பாதிக்கும், மற்றொன்று உடலளவில் பாதிக்கும்.

விறைப்பு குறைபாடு என்பது ஒருசிலரிடம் மட்டுமே தென்படும் விஷயம் அல்ல. ஆணாக பிறக்கும் எல்லாரிடமும் விறைப்பு குறைபாடு இருக்கும். ஒருசிலருக்கு மிகையாக இருக்கும். அவர்கள் பரிசோதனை, சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

விறைப்பு குறித்து ஆண்கள் மத்தியில் பல சந்தேகங்கள், தவறான புரிதல்கள் இருக்கின்றன. அதில் ஆண்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டிய 7 உண்மைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# வகைகள்!

# வகைகள்!

விறைப்பு அடைவதில் மூன்று வகைகள் இருக்கின்றன. அவை ரிஃப்லோகோஜெனிக், சைகோஜெனிக் மற்றும் இரவு நேர விறைப்பு.

1. ரிஃப்லோகோஜெனிக் விறைப்பு - உடல் ரீதியான தொடர்பு ஏற்படும் போது உண்டாகும் விறைப்பு.

2. சைகோஜெனிக் விறைப்பு - படம், ஒலி போன்றவை காண்பது, கேட்பது மூலம் ஏற்படும் விறைப்பு.

3. இரவு நேர விறைப்பு - இது சாதாரணமாக ஆண்களுக்கு இரவு நேரம் அல்லது அதிகாலை தூங்கி எழும் போது உண்டாகும் விறைப்பு.

# உடையுமா?

# உடையுமா?

ஆண்குறியில் எலும்பு இல்லை. ஆனால், ஆண்குறி உடையுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. விறைப்பு ஏற்படும் போது ஆண்குறியில் இது போன்ற தாக்கம் ஏற்படலாம். இது மிகவும் வலி மிகுந்தது.

முக்கியமாக, ஆண் கீழேயும், பெண் மேலேயும் இருக்கும் நிலைகளில் உறவில் ஈடுபடும் போது ஆண்குறி உடைய வாய்ப்புகள் உண்டு.

# ஆரோக்கியம்!

# ஆரோக்கியம்!

இதய நோய்கள், அதிக கொலஸ்ட்ரால், விழி வெண்படலம், பார்கின்சன் மற்றும் இதர நோய் பாதிப்புகள் இருந்தாலும் விறைப்பு தன்மை கோளாறு ஏற்படலாம்.

விறைப்பு தன்மை கோளாறு இருந்தால் நீங்கள் ஒரு பொது உடல் ஆரோக்கிய பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. இன்னொரு ஆய்வு தகவல் என்ன கூறுகிறது எனில், வாரத்தில் ஒரு நாள் உடலுறவில் ஈடுபட்டால் இந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்புகள் குறையுமாம்.

மருந்துகள்!

மருந்துகள்!

விறைப்பு தன்மைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் முழுமையான பலனை அளிக்காது. மூன்றில் ஒருவர் அல்லது இருவருக்கு தான் அது பலனளிக்கும். இதை அறியாமல் சிலர் அதிகமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

# உச்சம்!

# உச்சம்!

உறவில் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு விறைப்பு அவசியம் இல்லை. விறைப்பு ஏற்படாமல் கூட விந்து வெளியேற வாய்ப்புகள் உண்டு. உச்சம் வரும் போது மட்டும் தான் விந்து வெளியேறும் என்பதும் இல்லை.

# சந்தேகம்!

# சந்தேகம்!

சிலருக்கு மட்டும் தான் விறைப்பு தன்மை குறைபாடு இருக்கும் என்பது இல்லை. எல்லா ஆண்கள் மத்தியிலும் விறைப்பு தன்மை குறைபாடு ஏற்படும். வயதாக, வயதாக எல்லா ஆண்களும் இதை எதிர்க் கொள்வார்கள்.

இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாது. மேலும், சிலருக்கு ஏதேனும் தூண்டுதல் ஏற்பட்டால் தான் விறைப்பு ஏற்படும். இதற்கு தான் ஃபோர் ப்ளேவில் ஈடுபடுதல் வேண்டும் என நிபுணர்கள் அறிவுரைக்கிறார்கள்.

# லாஸ் பட் நாட் லீஸ்ட்!

# லாஸ் பட் நாட் லீஸ்ட்!

எல்லாரும், எப்போதும் கூறுவது தான். தீயப் பழக்கங்கள் உங்கள் விறைப்பு தன்மையை பாதிக்க வாய்ப்புகள் உண்டு.

இது அனைவர் மத்தியிலும் இருக்காது எனினும், அவரவர் செய்யும் வேலை, ஆரோக்கிய டயட், உடற்பயிற்சிகள் சார்ந்து தாக்கங்கள் அதிகம், குறைவாக காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts to Know About Erection!

Facts to Know About Erection!
Subscribe Newsletter