பெண்களின் கருவளத்தை மேம்படுத்தும் அற்புத ஜூஸ்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பல பெண்கள் கருத்தரிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கெமிக்கல் மற்றும் பூச்சிக் கொல்லிகள் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். இதனால் சில பெண்களின் கருவளம் குறைந்து, கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

A Smoothie To Boost Female Fertility!

ஆனால் கருவளத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் ஜூஸ்களை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் குடித்து வந்தால், கருவளம் மேம்பட்டு, கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இங்கு பெண்களின் கருவளத்தை மேம்படுத்தும் ஓர் சுவையான ஸ்மூத்தி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மூத்தியைக் குடிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் இந்த பானம் குறித்து ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

முதலில் ஃபோலிக் அமிலம் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை நீரில் நன்கு கழுவி, ஒரு கப் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

உங்கள் மருத்துவர் வே புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால், சிறிது வே புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின் ஒரு கப் இளநீர் அல்லது தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பின்பு ஒரு கையளவு ஆளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால், ஒரு சிறிய துண்டு அவகேடோ பழத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

பிறகு ஒரு கையளவு பெர்ரிப் பழங்களான செர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரியை எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் #6

ஸ்டெப் #6

இறுதியில் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு, வேண்டுமானால் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டால், குடிப்பதற்கு பானம் தயார்.

ஸ்டெப் #7

ஸ்டெப் #7

இந்த பானத்தைக் குடித்த பின், 5 நிமிடம் கழித்து ஒரு கப் எலுமிச்சை ஜூஸைக் குடிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த பானத்தை பெண்கள் குடித்தால், கருவளம் மேம்பட்டு, விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Smoothie To Boost Female Fertility!

Are you wondering how to make fertility smoothie? Well, here is one such fertility smoothie recipe...
Subscribe Newsletter