அக்காவுக்காக கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொடுத்த தங்கை!

Posted By:
Subscribe to Boldsky

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இது இரத்த பந்தத்தின் பாசத்தை குறிக்கும் ஒரு பழமொழி. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார்கள் எமி - ஷைனா சகோதரிகள்.

Young Wife Can't Get Pregnant. Then Her Sister Calls And Says, 'Let's Have A Baby'

Image Source

தன் அக்காவால் கருத்தரிக்க முடியவில்லை. அவரது கருப்பை வலுவற்று இருக்கிறது என அறிந்து, தன் அக்காவின் ஆசைக்காக தானே பத்து மாதம் சுமந்து பிள்ளை பெற்றுக் கொடுத்துள்ளார் பாசமிகு தங்கை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமி மொரிஸ்பி!

எமி மொரிஸ்பி!

எமி மொரிஸ்பி என்பவர் ஐந்தாண்டுகளாக கருத்தரிக்க முயன்று கருத்தரிக்க முடியாமல் போன பெண். குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அக்காவுக்காக ஷைனா எனும் அவரது தங்கை தானாக முன்வந்து அவரது கருவை தான் வளர்த்து பெற்று தருவதாக கூறி, பிள்ளையும் பெற்று தந்துள்ளார்.

Image Source

ஷைனா!

ஷைனா!

ஷைனா ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இந்த முறை தனது அக்கா - மற்றும் அவரது கணவரின் நீண்டநாள் ஆசைக்காக கருவை சுமந்து குழந்தை பெற்று தந்துள்ளார்.

Image Source

ஐவிஎஃப்!

ஐவிஎஃப்!

ஐவிஎஃப் (In Vitro Fertilization) என்பது செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை முறையாகும். மொரிஸ்பிக்கு கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பிறகு பரிசோதனை செய்து பார்த்ததில் மொரிஸ்பியின் கருப்பை காயமடைந்து திசுவுடன் வலுவற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Image Source

ஷைனா!

ஷைனா!

மொரிஸ்பியின் கருவை எடுத்து, தங்கை ஷைனா வின் கருப்பையில் வைத்து ஐவிஎஃப் சிகிச்சைகள் அளித்து கரு வளர்க்கப்பட்டது. ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு தாய் - தந்தையர் மிக அக்கறை எடுத்துக் கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.

Image Source

தேவதை!

தேவதை!

அனைவரின் அன்பு மற்றும் மருத்துவர்களின் உதவியால் ஷைனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த தேவதைக்கு பிரான்செஸ்கா லூயிஸ் மொரிஸ்பி என பெயரிட்டனர்.

குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், கொள்ளையழகுடனும் இருக்கிறார்.

Image Source

காணொளிப்பதிவு!

அக்காவுக்காக கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொடுத்த தங்கை - காணொளிப்பதிவு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Young Wife Can't Get Pregnant. Then Her Sister Calls And Says, 'Let's Have A Baby'

Young Wife Can't Get Pregnant. Then Her Sister Calls And Says, 'Let's Have A Baby'
Please Wait while comments are loading...
Subscribe Newsletter