இந்த தினசரி பழக்கங்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கருத்தரிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில், உங்களது அன்றாட பழக்கவழக்கங்களில் கவனமாக இருங்கள். ஏனெனில் அந்த பழக்கங்கள் உங்களது கருவளத்தைப் பாதிக்கலாம். தற்போதைய மோசமான உலகில், கருத்தரிக்க முடியாமல் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர்.

These Daily Habits Can Make You Infertile!

எனவே நீங்கள் எளிதில் கருத்தரிக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இச்செயல்கள் தான் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருப்பது. சரி, இப்போது அப்பழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

நிறைய பேர் என்றாவது ஒரு நாள் புகைப்பிடித்தால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நினைக்கின்றனர். ஆனால் புகைப்பிடிப்பது மட்டுமின்றி, புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும், அது கருவளத்தைப் பாதிக்கும் என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரித்தால், அது கருவளத்தைப் பாதித்து, கருத்தரிப்பதில் இடையூறை ஏற்படுத்தும்.

வெப்பமான யோகா வகுப்புக்கள்

வெப்பமான யோகா வகுப்புக்கள்

தற்போது வெப்பமான இடத்தில் யோகா செய்வது பிரபலமாக உள்ளது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். ஆனால் இம்மாதிரியான வெப்பப் பகுதியில் யோகா செய்தால், அது கருமுட்டையின் உற்பத்தி மற்றும் விந்துவின் உற்பத்தியைப் பாதிக்கும்.

மன இறுக்க மாத்திரைகள்

மன இறுக்க மாத்திரைகள்

மலட்டுத்தன்மைக்கு மன இறுக்க மாத்திரைகளும் காரணமாகும். ஏனெனில் இம்மாத்திரைகள் பாலியல் செயல்பாட்டை பாதிக்கும். குறிப்பாக இது ஆண்களின் விந்தணுவின் தரத்தை பாதிக்கும்.

அதிகமான மது

அதிகமான மது

மதுவை அளவாக பருகினால், நல்லது. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது விந்தணுவைப் பாதிப்பதுடன், முட்டையின் உற்பத்தியையும் பாதிக்கும்.

வைட்டமின் மாத்திரைகள்

வைட்டமின் மாத்திரைகள்

வைட்டமின் மாத்திரைகள் கருவளத்தை அதிகரிக்கலாம். ஆனால் அம்மாத்திரைகளையே மருத்துவர் கூறாமல் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அதுவே கருவளத்தை பாதிக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில் நீர்

பிளாஸ்டிக் பாட்டில் நீர்

ஆம், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தாலும், மலட்டுத்தன்மை ஏற்படும். இதற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள டாக்ஸின்கள், ஹார்மோன்களை பெரிதும் பாதிப்பது தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Daily Habits Can Make You Infertile!

Here are a certain daily habits that can cause infertility, have a look at them here and do avoid these.
Story first published: Saturday, November 5, 2016, 14:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter