பெண்ணின் மலட்டுத்தன்மையைப் போக்கும் சில நாட்டு வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மலட்டுத்தன்மை என்பது எந்த ஒரு பிறப்பு கட்டுப்பாடு மாத்திரையையும் எடுக்காமல், உடலுறவில் ஈடுபட்டும் கருத்தரிக்க முடியாமல் இருப்பதைத் தான் கூறுவார்கள். அதிலும் ஒரு வருடத்திற்கும் அதிகமாக தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டு, கருத்தரிக்க முடியாமல் போனால், அது அந்த மலட்டுத்தன்மை இருப்பதைக் குறிக்கும்.

இத்தகைய மலட்டுத்தன்மை ஆண் அல்லது பெண்ணிற்கு கூட ஏற்படலாம். ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணிகளும் காரணங்களாகும்.

இங்கு பெண் மலட்டுத்தன்மையைத் தடுக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவைகளை பின்பற்றும் முன், மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்கா வேர்

மக்கா வேர்

இது ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். எனவே ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் மக்கா வேர் பொடியை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். ஆனால் இந்த பாலை கர்ப்பமாக இருக்கும் போது பருகக்கூடாது.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை உள்ளது. இத்தகைய பேரிச்சம் பழத்தை தினமும் 5-6 சாப்பிட்டு வந்தால், அது கருவளத்தை மேம்படுத்தி, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

பட்டை

பட்டை

1 டீஸ்பூன் பட்டை துளை ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் கருப்பையின் செயல்பாடு, கருவளம் மேம்படும். ஆனால் ஒரு நாளில் 1 டீஸ்பூனுக்கு மேல் பட்டைத் தூளை உட்கொள்ளக் கூடாது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைத் சரிசெய்யும் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ஆகுவே ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து கலந்து, பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வர வேண்டும். ஆனால் இதைப் பருகும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைவாக இருந்தால், கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும். எனவே தினமும் அதிகாலையில் சூரியக்கதிர்கள் சருமத்தில் படும்படி சிறிது நேரம் வாக்கிங் செல்வதோடு, முட்டை, சீஸ், சால்மன் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு போதிய வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

யோகா

யோகா

தினமும் யோகா செய்வதன் மூலம் மலட்டுத்தன்மை பிரச்சனையைத் தடுக்கலாம். அதிலும் யோக நித்ரா, பட்டாம்பூச்சி நிலை, போன்றவற்றை செய்வதன் மூலம் இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, எளிதில் கருத்தரிக்க உதவும்.

மாதுளை

மாதுளை

மாதுளையை சாப்பிட்டால், அது இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இப்படி இரத்த ஓட்டம் அதிகரித்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறையும். எனவே தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies For Female Infertility

There are some home remedies for female infertility. They may help you up to an extent. Read on to know about some tips for infertility.
Story first published: Tuesday, October 4, 2016, 15:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter