Latest Updates
-
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம்
நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!
இப்போது அநேக பேர் நகரங்களின் இரைச்சலை தவிர்க்க கொஞ்சம் ஒதுக்கு புறமாகத்தான் குடியிருக்கின்றனர். ஆத்திர அவசரத்திற்கு மெடிக்கல் ஷாப்புகளும் அருகில் இருப்பது சந்தேகம்தான்.
நாட்கள் தள்ளிப் போய்விட்டது. கர்ப்பமாவதை தெரிந்து கொள்ள உதவும் ஸ்ட்ரிப் வாங்கலாம் என்றால் பக்கத்தில் மெடிக்கல் ஷாப் இல்லை. பின்னே இதை கர்ப்பம் என எவ்வாறு தெரிந்து கொள்வது என நிறைய பேருக்கு புரிபடாமல் போகும்.

அவர்களுக்கு எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே கர்ப்பமா இல்லையா என தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? இதைப் படியுங்கள்.
இதற்கு ஸ்ட்ரிப்போ, டாக்டரிடம் போக வேண்டுமோ என அவசியமில்லை. உங்கள் சமையலறையில் மற்றும் பாத்ரூமில் இருக்கும் பொருட்கள் கொண்டே உறுதி படுத்திக் கொள்ளலாம் .
டூத் பேஸ்ட் :
வெள்ளை நிற டூத் பேஸ்ட் இருக்கிறதா? அதில் கொஞ்சம் எடுத்து அதில் உங்கள் யூரின் சாம்பிளை சேருங்கள். சில நிமிடங்கள் கழித்து, வெள்ளை பேஸ்ட் நீல நிறமாக மாறினால், நீங்கள் கர்ப்பமாவதை உறுதி படுத்துகிறது.
சர்க்கரை :
காலை எழுந்ததும் வரும் முதல் யூரின் சாம்பிள் கொஞ்சம் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரையை போடுங்கள்.
சர்க்கரை முழுவதும் கரைந்திருந்தால் நீங்கள் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். சர்க்கரை கரையாமல் அப்படியே கட்டியாய் தங்கி இருந்தால் நீங்கள் கர்ப்பம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வினிகர் - டூனா ஜூஸ் டெஸ்ட் :
கால் கப் டூனா ஜூஸை ஒரு கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே அளவு வினிகரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு ராத்திரி முழுவது அறை வெப்பத்தில் வைத்திருங்கள்.
பின் அடுத்த நாள் காலை யூரின் சாம்பிளை அதில் சிறிது சேருங்கள். இப்போது அது முழுவதும் அடர் பச்சை நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆரஞ்சு அல்லது மஞ்சளாக மாறினால் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம்.
இந்த கலவையில் செறிவான வாய்வு உருவாவதால், அதன் அருகே மூக்கையோ வாயையோ கொண்டு போகாதீர்கள். திறந்த வெளியில் இந்த சோதனை செய்வது நல்லது.
யூரின் சேம்பிள் மட்டும் போதும் :
கர்ப்பமாவதை உறுதி படுத்த எந்த உபகரணமும் இல்லையா? கவலையை விடுங்கள். உங்களின் யூரின் சாம்பிள் மட்டும் போதும்.
உங்கள் யூரின் சாம்பிளை ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து, நன்றாக மூடி, 4 மணி நேரம் தொடாமல் ஒரு இடத்தில் வைத்திருங்கள். அதன் பிறகு மெதுவாக திறந்து பாருங்கள். யூரின் மேலே வெள்ளை படலம் தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாயிருக்கிறீர்கள் என்பது உறுதி. இது மிக மிக எளிமையான சோதனை.
இவை எல்லாம் உடனடியாக கர்ப்பம் என்பதை தெரிந்து கொள்ளத்தான். கர்ப்பன் என பாஸிட்டிவாய் தெரிந்தால், பிறகு நிதானமாய் ஒரு நல்ல டாக்டரை பார்த்து, தேவையான அறிவுறைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications




