உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகளின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் மீது அலாதியான பிரியம் இருக்கும். சில தம்பதிகள் இரட்டைக் குழந்தைகள் வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். மேலும் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள முனைவார்கள்.

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

அந்த வகையில் நீங்களும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளதை கொஞ்சம் படித்துப் பாருங்கள். இவை உங்களுக்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவியாக இருக்கும்.

இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

வயது

வயது

இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம்

இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிகம் இருக்கும்.

உயரத்திற்கு ஏற்ற எடை

உயரத்திற்கு ஏற்ற எடை

சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே பெண்களே இதை மனதில் கொள்ளுங்கள்.

ஜிங்க் உணவுகள்

ஜிங்க் உணவுகள்

இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

முதல் குழந்தைக்கு பின் முயற்சிக்கவும்

முதல் குழந்தைக்கு பின் முயற்சிக்கவும்

ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

பரம்பரை

பரம்பரை

முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெண்களின் உயரம்

பெண்களின் உயரம்

குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Could These Eight Steps Help You To Get Pregnant With Twins?

Would you love to give birth to twin babies? These 8 simple tips could help you to conceive more than one baby…
Please Wait while comments are loading...
Subscribe Newsletter