வயது ஏற ஏற ஏன் குழந்தை பாக்கியம் குறைகிறது என்று தெரியுமா?

By: viswa
Subscribe to Boldsky

இன்றைய இயந்திரத் தனமான உலகில் நாம் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பணத்தின் மோகத்தினாலும், ஆடம்பர வாழ்க்கையின் ஆசையினாலும், அந்தந்த வயதில் நாம் செய்ய வேண்டியதை மறந்துவிடுகிறோம். ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது. வயதும், காலமும் கடந்துவிட்டால், எத்தனை கோவில் குளங்கள் ஏறி இறங்கினாலும், மருத்துவரிடம் சென்றாலும், குழந்தை பெறும் பாக்கியம் எளிதில் கிடைத்துவிடாது.

நம் முன்னோர்கள் அதைத் தான், அந்தந்த காலத்தில் நடக்க வேண்டியதை அந்தந்த காலத்தில் நடந்திட வேண்டும், இல்லையே சிரமம் என கூறியிருக்கின்றனர். குழந்தைப் பேறு என்பது காலம் கடந்துவிட்டால் தன்மான பிரச்சனை ஆகிவிடும். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருத்தரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இனியும் காலம் கடத்தாதீர்கள், காலம் தாமதிப்பதால், தள்ளி போகும் குழந்தை பாக்கியம் பற்றி தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருபதுகளின் ஆரம்ப வயதில்

இருபதுகளின் ஆரம்ப வயதில்

இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும் 1௦௦ சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மட்டும் மன தகுதியோடு இருகின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு பத்து லட்சத்தில் இருந்து இருபது இலட்சம் வரை முட்டைகள் கருவில் உருவாகின்றன. இதில், ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் முட்டைகள் கருத்தரிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். அதேப்போல தான் ஆணிற்கும் விந்தில் அதிக சக்தியும், வேகமும் இருக்கும். இவை தான் கருத்தரிக்க உதவும். கருத்தரிக்க இந்த வயது தான் ஏற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருபதுகளின் கடைசி வயதில்

இருபதுகளின் கடைசி வயதில்

இருபதுகளின் கடைசிகளில் பெண்களுக்கு கருத்தரிக்க வேண்டிய உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க 75 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை என்பதே ஆகும்.

முப்பதுகளின் ஆரம்ப வயதில்

முப்பதுகளின் ஆரம்ப வயதில்

முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறையத் தொடங்கும். இது தான் பெண்களுக்கு முப்பது வயதுகளில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம்.

முப்பதுகளின் கடைசி வயதுகளில்

முப்பதுகளின் கடைசி வயதுகளில்

முப்பதுகளின் கடைசி தருணங்களிலேயே குரோமோசோம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாது, ஆணின் விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும். இதனால், கிட்டத்தட்ட குழந்தைப் பேறுக்கான 5௦ சதவீத வாய்ப்பு இருக்கும் என்பதே சிரமம் தான்.

நாற்பது வயதின் ஆரம்பம்

நாற்பது வயதின் ஆரம்பம்

இயல்பாகவே நாற்பதில் இருந்து நாற்பத்தி ஐந்து வயதிற்குள் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும் வலிமை குறைவாக தான் இருக்கும். அதே சமயம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைவாக தான் இருக்கும். இதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு பெறுவது என்பது மிகவும் சிரமம் தான்.

நாற்பத்தி ஐந்து வயதிற்கு மேல்

நாற்பத்தி ஐந்து வயதிற்கு மேல்

மிக சில பெண்களுக்கு மட்டுமே இந்த வயதில் குழந்தைப் பேறு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும் கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மற்றும் ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இந்த தருவாயில் குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effects and Barriers In Late Pregnancy

There are problems and barriers that happens due to late pregnancy. Because, pregnancy rate decreases, while your age increases.
Story first published: Tuesday, February 17, 2015, 14:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter