அனைத்து கன்னிப் பெண்களுக்கும் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தம் கசியுமா?

By: Babu
Subscribe to Boldsky

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது.

முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு வந்த பின் பெண்கள் அவ்வளவாக ஓடியாடி விளையாடுவதில்லை. சொல்லப்போனால் அக்கால பெண்கள் 'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்பதற்கேற்றாற் போல் இருந்தனர். ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்கின்றனர். சரி, விளையாட்டிற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது?

நிச்சயம் சம்பந்தம் உள்ளது. இங்கு அதைப் பற்றித் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்னிச்சவ்வு

கன்னிச்சவ்வு

பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற ஓர் கன்னிச்சவ்வுடன் பிறப்பார்கள். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, இரத்தக்கசிவு ஏற்படும்.

கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை

கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை

கன்னிச்சவ்வானது சில பெண்கள் கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது.

விளையாட்டு

விளையாட்டு

கன்னிச்சவ்வு மிகவும் மெல்லிய திசு என்பதால், இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் ஓர் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு கழிந்திருக்கும்.

டேம்பான்/ சுய இன்பம்

டேம்பான்/ சுய இன்பம்

இறுதியாக, ஓர் பெண் சுய இன்பம் கண்டாலோ அல்லது மாதவிடாய் காலத்தில் டேம்பானைப் பயன்படுத்தி இருந்தாலோ, அதன் காரணமாகவும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும்.

வலி ஏற்படுவதற்கான காரணம்

வலி ஏற்படுவதற்கான காரணம்

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது அச்சமடைவார்கள். இப்படி அச்சம் கொள்ளும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do All Virgins Bleed The First Time They Have Physical Intimacy?

Do all virgins bleed the first time they have sex? - Bleeding the first time you have sex is not always the only way to check for a woman's virginity. Find out why..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter