For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள்!!!

By Maha
|

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் அத்தகைய அறிகுறிகளை சில பெண்கள் சாதாரணமாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணமாக, பெண்களுக்கு அடி வயிற்றில் வலி அடிக்கடி வரும். இப்படி வலி வந்தால், அதனை வாய்வு தொல்லை அல்லது அசிடிட்டி என்று நினைத்து சாதாரணமாக விடுவார்கள்.

ஏனெனில் கர்ப்பமாக இருந்தால், மாதவிடாய் சுழற்சி நிற்கும் என்பதால் தான். இருப்பினும் சிலருக்கு கர்ப்பமாக இருந்தாலும், லேசாகவோ அல்லது அதிகமாகவோ இரத்தப்போக்கு இருக்கும். மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள்
ஒவ்வொருவருக்கும் அறிகுறிகளானது வேறுபடும். இங்கு பெண்கள் கர்ப்பமாக இருந்தால், ஆரம்பத்தில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்று கொடுத்துள்ளோம்.

கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

அந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், மருத்துவரிடம் சென்று கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். சரி, இப்போது அந்த அறிகுறிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீரென்று எடை அதிகரிப்பது

திடீரென்று எடை அதிகரிப்பது

சரியாக சாப்பிடாமல், உடல் எடையானது திடீரென்று அதிகரித்தால், அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

வாந்தி

வாந்தி

சில நேரங்களில் பெண்களுக்கு உணவை நன்கு சாப்பிட்ட பின்னர் வாந்தி வருவது போல் இருக்கும். இத்தகைய நிலை ஒவ்வொரு நாளும் ஏற்பட்டால், அதற்கு கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கடுமையான தலைவலி

கடுமையான தலைவலி

அடிக்கடி விட்டு விட்டு தலைவலி வந்தால், அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

இன்றைய காலத்தில் சரியான நிலையில் உட்காராத காரணத்தினாலும், போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் பலருக்கு முதுகு மற்றும் அடிவயிற்றில் வலி

ஏற்படும். சில நேரங்களில் வயிற்று பிடிப்புக்கள் கூட ஏற்படும். எனவே அடிவயிற்று வலி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது மருத்துவரை அணுக வேண்டும்.

காய்ச்சல்

காய்ச்சல்

சில பெண்களுக்கு ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடலின் வெப்பநிலையானது திடீரென்று அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆகவே நீங்கள் குழந்தை பெற்று கொள்ள முயற்சித்து கொண்டிருக்கும் போது, திடீரென்று காய்ச்சல் வந்தால், உடனே

மருத்துவரை அணுகுங்கள். இதுவும் கர்ப்பத்தின் அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மயக்கம்

மயக்கம்

இரத்த அழுத்தமானது திடீரென்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறதா? அதாவது மயக்கமாக உள்ளதா? அதிலும் கர்ப்பமாக முயற்சிக்கும் போது அடிக்கடி மயக்கம் வந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

மாதவிடாய் தவறுதல்

மாதவிடாய் தவறுதல்

பல பெண்களுக்கு கர்ப்பத்தின் அறிகுறியாக மாதவிடாய் சுழற்சியானது தவற ஆரம்பிக்கும். அப்படி எப்போதும் சீரான மாதவிடாய் சுழற்சி இருந்து, திடீரென்று தவறினால் அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Symptoms You Should Never Ignore

pregnancy symptoms can differ from women to women, these are the general signs which can be faced by any women during the very early stages of pregnancy. If you are suffering from either of these symptoms, then consult a doctor immediately.
Story first published: Thursday, March 27, 2014, 16:20 [IST]
Desktop Bottom Promotion