For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்புக்கு பின்னர் உடனடியாக கர்ப்பம் தரிக்க முடியுமா?

By Boopathi Lakshmanan
|

ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதால் எந்த அளவிற்கு மகிழ்ச்சியைப் பெற்றிருந்தாலும், தேவையற்ற நேரத்தில் கர்ப்பம் தரிப்பது தம்பதிகள் இருவருக்குமே சிரமத்தைத் தருவதாக இருக்கும். இந்த சூழல்களில், தங்களுடைய குடும்ப வாழ்க்கையை முழுமையாகத் துவங்க தயாராக இல்லாத தம்பதிகளுக்கு, கருக்கலைப்பு செய்வது தான் ஒரே வழியாக உள்ளது.

ஆனால், கருக்கலைப்பு செய்வதால், அடுத்த சில மாதங்களில் கர்ப்பம் தரிக்க முடியாது என்ற பயம் உங்களை ஆட்டுவிக்கிறதா? அப்படியென்றால், இங்கே தரப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருக்கலைப்புக்குப் பின்னர் கர்ப்பம்...

கருக்கலைப்புக்குப் பின்னர் கர்ப்பம்...

ஏதோவொரு காரணத்திற்காக, தன்னுடைய கர்ப்பத்தை கலைத்த பெண், பெரும்பாலும் உடனடியாக கர்ப்பம் தரிக்க முயற்சி செய்ய மாட்டாள். கருக்கலைப்பு செய்வதால் குழந்தை பெறும் திறன் குறைந்து விடாது. எனினும் இளம் தம்பதியினர் சில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண்மணி, ஏதோவொரு விபத்து போல கர்ப்பம் தரித்து விட்டாலும் கூட, அவர் கர்ப்பத்தைத் தொடருவதில் எந்தவித பிரச்சனைகளும் இருப்பதில்லை.

எவ்வளவு காலம் பொறுத்திருக்கலாம்?

எவ்வளவு காலம் பொறுத்திருக்கலாம்?

கருக்கலைப்புக்குப் பின்னர் குறைந்தபட்சம் 3 மாதங்கள் இடைவெளி விட்டு, மீண்டும் கர்ப்பம் தரிக்க முயற்சிப்பது நல்ல யோசனையாகும். இந்நாட்களில் உங்களுடைய பொதுவான உடல் நலம் மேம்படுவதுடன், கர்ப்ப காலத்திற்கு முன்னதாக வரும் ஃபோலிக் அமிலம் மற்றும் தைராய்டு மற்றும் சர்க்கரை அளவுகள் பற்றிய சில தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டால், கர்ப்பம் கலைந்து போவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.

எவ்வளவு காலம் பொறுத்திருக்கலாம்?

எவ்வளவு காலம் பொறுத்திருக்கலாம்?

முறையான தடுப்பு வழிமுறைகளைக் கையாளாகாத போது, கருக்கலைப்பு செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே கூட மீண்டும் கர்ப்பம் தரிக்கலாம். கர்ப்பம் தடைப்பட்ட உடனே பெண்ணானவள் கருமுட்டைகளை வெளியேற்றத் துவங்கி விடுகிறாள். 'உடல் மீண்டும் பழைய நிலைமைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்பதால், குறைந்தபட்சம் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், குரோமோசோம்களின் பிறழ்ச்சியினால் (Chromosomal Aberration) தான் 80 சதவீத கர்ப்பங்கள் கலைந்து விடுகின்றன. 2.5 மாதங்களுக்கொரு முறை தான் உயிரணுக்களில் மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதால், சற்று காலம் பொறுத்திருப்பது நலம்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆபத்துக்கள்

ஆபத்துக்கள்

இரண்டாவது முறையாக கருக்கலைப்பு பாதுகாப்பாக நிகழ்ந்து விட்டாலும் கூட, உங்களுடைய உடலில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும்.

கருக்கலைப்பு செய்த பின்னர், உடனடியாக கர்ப்பம் தரிக்க முடியும் என்றாலும், அது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏற்கனவே உடல் ஏகப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுகளை அனுபவித்துக் கொண்டிருப்பதால், இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர சிறிது காலமாவது உடலுக்குத் தேவைப்படும்.

எப்படி உறுதிப்படுத்த முடியும்?

எப்படி உறுதிப்படுத்த முடியும்?

நீங்கள் கருக்கலைப்பு செய்து கொண்ட பின்னர், ஒரு மாத காலத்திற்குள் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை பிங்க் நிறத்திற்கு மாறிவிடும். இது பெரும்பாலும் கர்ப்பத்திற்கான ஹார்மோன்களை காட்டும் செயலாகும். இந்த சோதனை பல முறை செய்து பாருங்கள், ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது செய்து, நிறம் மாறுவதை கவனியுங்கள். அது மிகவும் கருமையான நிறமாக இருந்தால், ஒரு புதிய உயிருக்கு வரவேற்பு எழுதத் தயாராகுங்கள். அதே நேரம், அந்த நிறமானது, மெலிதாக (லைட்டாக) இருந்தால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் இந்த பரிசோதனைகள் தவறாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can You Get Pregnant Immediately After an Abortion?

Abortion is the go-to for young couples who are not ready to start their families just yet. But, do you think getting an abortion means no fear of pregnancy for the next few months? Well, we unravel some truth behind this notion.
Story first published: Sunday, July 6, 2014, 14:02 [IST]