For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

தேன் என்பது ஒரு மருத்துவ உணவப்பொருள்; தேனினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூடாதா, குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்த தகவல்கள் பற்றி இங்கு படிக்கலாம்.!

|

குழந்தைகளை பத்து மாதம் தாய் வயிற்றில் சுமக்கிறாள் என்றால், தந்தை மனைவியையும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் நெஞ்சில் சுமக்கிறார். இப்படி தாயும் தந்தையும் தங்கள் ஒட்டுமொத்த அன்பை கருவில் வளரும் போதே, ஏன் கரு கரு உருவான உடனேயே தங்கள் குழந்தை மேல் காட்ட தொடங்கி விடுகின்றனர்.

can i give honey for my baby

அப்படி உருவாகும் பொழுதே காட்டிய பாசம், குழந்தை பிறந்த பின் அது வளரும் ஒவ்வொரு நாட்களிலும் வளர்ந்து கொண்டே தான் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மையென கருதி செய்யும் தீமை!

நன்மையென கருதி செய்யும் தீமை!

அப்படி ஆசை ஆசையாய் பெற்று, பாசம் காட்டி வளர்க்கும் குழந்தைக்கு மிகச்சரியான நல்ல விஷயங்களை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். ஆனால், பல பெற்றோர்கள் நன்மை என்று கருதி குழந்தையின் உயிருக்கு உலை வைக்கும் ஒரு விஷயத்தை பல பெற்றோர்கள் உண்மை நிலை அறியாமல் செய்து வருகின்றனர். அதைக் குறித்து தான் நாம் இன்றைய பதிப்பில் பார்க்க இருக்கிறோம்.

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு நல்ல மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளான தேனை அளிக்கலாமா வேண்டாமா, குழந்தைகளுக்கு தேனை அளிப்பதால் ஆபத்து ஏற்படுமா போன்ற தகவல்கள் குறித்து படித்து அறிய இருக்கிறோம், வாருங்கள் பதிப்பிற்குள் செல்லலாம்!

குழந்தைகளுக்கு தேன் அளிக்கலாமா!?

குழந்தைகளுக்கு தேன் அளிக்கலாமா!?

குழந்தைகளுக்கு தேனினை அளிக்கலாம்; ஆனால் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு வயதினை பூர்த்தி செய்த பின்னர், மருத்துவர் தேன் அளிக்கலாம் என்ற உறுதி கொடுத்த பின்னர் மட்டுமே அளிக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறந்த உடன் அவர்களின் உடல் உறுப்புகள் முழு வளர்ச்சியை மற்றும் முழு சக்தியை பெற்று இருக்காது.

எனவே குழந்தைகளுக்கு சரியான காலகட்டத்தில் தேன் அளிக்காமல், ஒரு வயது பூர்த்தி அடையும் முன்பே அளிப்பது அவர்களின் உயிரை கொல்வதற்கு வாய்ப்பு உண்டு!

குழந்தைகளுக்கு ஆபத்தா?

குழந்தைகளுக்கு ஆபத்தா?

தேனில் கொலஸ்டிரியம் பொட்டுலினம் எனும் பாக்டீரியா உள்ளது; இது பொதுவாக மணலிலும் தேனிலும் காணப்படும் பாக்டீரியா வகை! குழந்தைகள் முழுமையான உடல் மற்றும் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை பெற்று இருக்காத நிலையில், அதாவது குழந்தைகளுக்கு ஒரு வயது கூட பூர்த்தி ஆகாத நிலையில் அவர்களுக்கு தேனினை உண்ண அளிப்பது, கண்டிப்பாக குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

முக்கிய பாதிப்பு!

முக்கிய பாதிப்பு!

குழந்தைகள் சரியான வளர்ச்சியை எட்டும் முன்னர் அவர்களுக்கு தேன் அளிக்கப்பட்டால், குழந்தைகளுக்கு என்ன விதமான முக்கிய பாதிப்பு ஏற்படும் என்று இங்கு பார்க்கலாம். குழந்தைகளின் பற்கள் சரியாக முளைக்கும் முன் தேன் அளித்தால், மேற்கொண்டு பற்களின் வளர்ச்சி நடைபெறாமல் தடைபடும்; உருவான பற்களும் சரியாக வளர்ச்சி பெறாது.

குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் அளிப்பது அவர்களின் உயிரை கொல்லும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவு பற்கள் சரியாக முளைக்காத பொழுது தேன் அளிப்பது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி ஆக்கி விடும் என்பதும் ஒத்துக்கொள்ள வேண்டிய, உணர வேண்டிய உண்மை!

வேறு என்னென்ன பாதிப்புகள்!

வேறு என்னென்ன பாதிப்புகள்!

குழந்தைகளுக்கு உயிர் அபாயம் மற்றும் பல் முளைத்தல் தவிர டையேரியா, நோய் எதிப்பு சக்தி பாதிக்கப்படுதல், பக்கவாதம், உணவு விஷம் அதாவது புட் பாய்சன், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பாதிப்புகள் அனைத்தையும் உருவாக்கி குழந்தையை கொல்ல முயல்வது தேனில் இருக்கும் கொலஸ்டிரியம் பாக்டீரியா தான். இது மணலில் இருப்பதால்,தேன் அல்லாமல் வேறு உணவுகள் மூலம் கூட குழந்தைகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.

சரியான சமயம்!

சரியான சமயம்!

இப்படிப்பட்ட பாதிப்புகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை அலல்து குழந்தை முழு வளர்ச்சி பெறும் வரையில் மட்டுமே ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகள் முழுமையான வளர்ச்சி பெற்ற பின் தேன் அளிப்பது அவர்களின் உடல் நலத்திற்கு நன்மையை மட்டுமே பயக்கும். ஆகையால் குழந்தைகளுக்கு தேன் அளிக்க சரியான சமயம் எது என்று பார்த்து அளிப்பது நல்லது!

எப்பொழுது கொடுக்கலாம்?

எப்பொழுது கொடுக்கலாம்?

குழந்தைகள் ஓரிரு ஆண்டுகளை பூர்த்தி செய்த பின், குழந்தையின் பல் முழுமையான வளர்ச்சி பெற்ற பின், குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையான வளர்ச்சிஅடைந்த பின், குழந்தையின் உடல் உறுப்புகள் முழுமையான வளர்ச்சி அடைந்த பின்னர் மட்டுமே குழந்தைக்கு தேனினை உண்ண அளிக்கலாம்.

மேலும் இந்த வளர்ச்சி மாற்றங்கள் முழுமை அடைந்து விட்டதை ஒரு மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவரிடம் ஆலோசனை செய்து விட்டு பின் குழந்தைகளுக்கு தேனை கொடுக்க தொடங்குங்கள்!

தேனினால் என்னென்ன நன்மைகள்!

தேனினால் என்னென்ன நன்மைகள்!

தேனினை சரியான கால கட்டத்தில் கொடுக்கும் பொழுது அது குழந்தைகளின் உடலை பலப்படுத்த உதவுகிறது; காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்த் தொற்றுகளை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி, நோய் எதிர்ப்பு மண்டலம் போன்றவை பலப்பட உதவுகிறது.

குழந்தைகளின் உடலுக்கு தேவையான சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் போன்றவை குழந்தைக்கு போதுமான வு கிடைக்க உதவுகிறது.

எப்படி அளிக்கலாம்?

எப்படி அளிக்கலாம்?

குழந்தைகள் சரியான வயதை எட்டிய பின்னரும் சிறிது சிறிதாக, மருந்து கொடுப்பது போலத்தான் தேனையும் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கூழ், கஞ்சி, உணவு வகைகள், பால், திரவ உணவுகள் போன்றவற்றில் ஓரிரு துளிகள் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான உடல் அமைப்பு கொண்டவர்கள்; ஆகையால் உங்கள் குழந்தைக்கு எப்பொழுது தேன் அளிக்கலாம், எந்த அளவு அளிக்கலாம், எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து, பெற்றோர்கள் செயல்படுவது நன்று!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Can Babies Eat Honey Risks, Benefits, and Tips

When Can Babies Eat Honey? Risks, Benefits, and Tips
Story first published: Tuesday, September 4, 2018, 13:16 [IST]
Desktop Bottom Promotion