அழகு குழந்தைகளுக்கான அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள்!

Subscribe to Boldsky

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை தரும் பெயர்களை சூட்ட வேண்டியது அவசியமான விஷயம் மற்றும் இது பெற்றோர்களின் முக்கிய கடமை; அதுவே குழந்தைக்கு சூட்ட போகும் பெயர், தாய் மொழியில் இருந்தால், அது மேலும் நன்று. குழந்தைகளுக்கு மொழிப்பற்றும், மொழியின் மகத்துவமும் சிறு வயதில் இருந்தே புரிந்து வரும்.

tamil baby names for babies

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட உதவும் அழகான, அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள் பற்றி படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழ் பெயர்கள்!

தமிழ் பெயர்கள்!

‘தமிழ் மெல்ல இனிச்சாகும்' என்று முன்னாள் அறிஞர்கள், கவிஞர்கள் மொழிந்து சென்று உள்ளனர்; அதை இன்றைய நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் உணர்ந்து வருகிறோம். இது நம்மால் மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம். நம்மால் முடிந்த அளவு நம் மொழியை காப்பாற்ற முயல வேண்டியது அவசியம்; இதில் நாம் தவறினால், பல ஆயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த பெருமையை அழித்த பழி நம்மையே வந்து சாரும்.

தமிழ் வாழ வழி..!

தமிழ் வாழ வழி..!

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் காலகட்டத்தில் மொழிகளின் நிலையும், மனிதர்களின் நிலையும், வாழ்க்கையின் சூழலும் எப்படி இருக்கும் என்று கூற முடியாது. எனவே, முடிந்த அளவுக்கு குழந்தைகளின் பெயர்களை தமிழில் சூட்டுவதன் மூலமாக பிற்காலத்தில் தமிழ் வார்த்தைகள் குழந்தையின் பெயர்கள் மூலமாகவாவது வாழும் என்ற நம்பிக்கையை பெறலாம்.

இப்பொழுது குழந்தைகளுக்கு சூட்ட தகுதியான சில புதிய தமிழ் பெயர்களை பார்க்கலாம்.

நகிதா - Nahitha

நகிதா - Nahitha

இந்த பெயருக்கு பெருஞ்சிறப்பு, பெருமை, புகழ் போன்ற அர்த்தங்கள் உண்டு; குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் புகழும் பெற்று விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பேராவல் கொண்டு இருந்தால், இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டி ஆசிர்வதிக்கலாம். இது கொஞ்சம் வித்தியாசமான பெயர்; ஆனால் தமிழ் பெயர் தான்.

மேலும் படிக்க: வேகமாக கருத்தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை கலவி கொள்ள வேண்டும்?

மகிழினி - Magilini

மகிழினி - Magilini

மகிழினி என்னும் பெயருக்கு மகிழ்ச்சி, சந்தோசம் போன்ற அர்த்தங்கள் உண்டு; இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால் குழந்தைகள் தனது வாழ்வில் மகிழ்ச்சியோடு இருப்பர்; மற்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படவும் குழந்தைகள் காரணமாக இருப்பார்கள். இது ஒரு மிகச்சிறந்த தமிழ் பெயர்; மிக அழகான பெயர்.

தியாஷினி - Thiyashini

தியாஷினி - Thiyashini

தியாஷினி என்னும் பெயர் கொஞ்சம் மாடர்னான தமிழ் பெயர்; இந்த பெயருக்கு வெளிச்சம், ஒளி போன்ற அர்த்தங்கள் உண்டு. இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வு நிறைவாகவும், அறிவு ஒளி நிறைந்தும் காணப்படும். இது குழந்தைகளுக்கு சூட்ட மிகச்சிறந்த பெயர்; குழந்தைகளுக்கு பெயரின் மூலமே வாழ்க்கை பாதையில் நடைபோட வெளிச்சத்தை காட்டி விடுங்கள் பெற்றோர்களே!

அதீலா - Atheela

அதீலா - Atheela

அதீலா என்னும் பெயருக்கு வேரூண்றிய, ஆழமான வேர் போன்ற அர்த்தங்கள் உண்டு; குழந்தைகள் தங்கள் வாழ்வில், எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான புரிதல், ஆழமான அறிவு கொண்டு வாழ்ந்து வளர வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை கொண்டால் இந்த பெயரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சூட்டலாம். இது ஆழ்ந்த அர்த்தம் கொண்ட தமிழ் பெயர்.

மேலும் படிக்க: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்?

சைத்விகா - Chaithvika

சைத்விகா - Chaithvika

இந்த பெயருக்கு அமைதி குணம் கொண்டவர், ஆழ்ந்த தியான தன்மை கொண்டவர் என்று பொருள். குழந்தைகள் வாழ்வில் நிம்மதியுடன், ஞானத்துடன் திகழ விரும்பினால் இந்த பெயரை பெற்றோர்கள் சூட்டலாம். இந்த பெயர் கொண்ட குழந்தைகள் அமைதியான வாழ்க்கையை அழகாக முன்னேற்றி செல்வர்.

திக்சர்த்தி - Diksharthi

திக்சர்த்தி - Diksharthi

இந்த பெயருக்கு கடவுளின் பரிசு, கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு என்று பொருள்; இந்த பெயரை கடவுள் உங்கள் வாழ்க்கையை அழகாக்க அளித்த பரிசான உங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழலாம். இது ஒரு புதுமையான தமிழ் பெயர் தான்; அழகான பெயரும் கூட. இதனை குழந்தைகளுக்கு சூட்டி அழகு பார்க்கலாம்.

ஹரித்யா - Harithya

ஹரித்யா - Harithya

இந்த பெயருக்கு பசுமை மற்றும் பச்சை என்பது போன்ற அர்த்தங்கள் உள்ளன; இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் பசுமையான வயல் போல, வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று மன நிறைவுடன் வாழ்வர். குழந்தைகளின் வாழ்வு பசுமை பொங்க அமைய, பெற்றோரான உங்களின் பங்களிப்பை பெயர் சூட்டின் மூலம் ஆற்றி விடுங்கள்!

மேலும் படிக்க: மாஜி காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு அபலை கர்ப்பிணியின் கதை!

ஜிக்திஷா - Jikthisha

ஜிக்திஷா - Jikthisha

இந்த பெயருக்கு நெருப்பு, அதிர்ஷ்டம், இசை மற்றும் இசைக்கருவிகளின் மீது நாட்டம் கொண்டவர் போன்ற பல அர்த்தங்கள் உண்டு; குழந்தைகளுக்கு வித்தியாமான மற்றும் பல அர்த்தங்கள் கொண்ட ஒரு பெயரை சூட்ட விரும்பினால், இந்த பெயரை சூட்டி மகிழலாம். இது ஒரு சிறந்த, தனித்துவமான பெயர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Tamil Baby Names For Babies

    Changing Baby Names Often: All You Need To Know
    Story first published: Friday, September 21, 2018, 12:05 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more