மேஷ ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு மேட்ச் ஆகக்கூடிய மாஸான பெயர்கள்!

Subscribe to Boldsky

தம்பதியராய் ஆன இரு உள்ளங்களின் கனவு தங்களுக்கென ஒரு வாரிசினை பெற்றுக்கொள்வதே! அவ்வாறு உருவான வாரிசிற்கு அழகான பெயரை சூட்டி, மகிழ பெற்றோர் உள்ளம் அளவற்ற ஆசை கொள்ளும். அந்த வகையில் பிள்ளையை பெற்ற பின், குழந்தை பிறந்த நேரம், காலம், நட்சத்திரம் இவற்றை கணித்து ஜோதிடர் குழந்தையின் இராசியையும் தீர்மானித்து அதற்கு பெயர் சூட்ட வேண்டிய எழுத்துக்களைக் கூறுவார்.

Mesha rashi baby boy and baby girl names in tamil

இந்த சமயத்தில், தம்பதியர் முன்னதாகவே தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த பெயரை தான் சூட்ட வேண்டும் என்று ஆசை கொண்டால், அது ஜோதிடத்தில் தந்த எழுத்துக்களில் இடம்பெறாது போனால் சற்று வருத்தம் அளிக்கக்கூடியதாய் மாறிவிடும். எனவே, ஒவ்வொரு இராசிக்கும் ஏற்ற எழுத்துக்கள் என்னென்ன என்று அறிந்து கொண்டால், குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் எளிமையாகிவிடும். எனவே, குழந்தைகள் முதல் இராசயன மேஷத்தில் பிறந்தால், என்னென்ன எழுத்துக்களில் எப்படிப்பட்ட பெயர்களை வைக்கலாம் என்று இந்த பதிப்பில் படித்து விவரமறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்னென்ன எழுத்துக்கள்?

என்னென்ன எழுத்துக்கள்?

மேஷ இராசியில் பிறந்த குழந்தைகளுக்கு A, L, E, I, O, Choo, Che, Cho, Laa, Lee, Loo, Le, Lo போன்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்க வேண்டும்; இது ஜோதிட சாஸ்திரங்கள் கொண்டு, நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்ட எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் ஆண் மற்றும் பெண் என இருபாலின குழந்தைகளுக்கும் ஏற்றதே.

எழுத்துக்களை அறிந்து கொண்ட நீங்களே, உங்கள் குழந்தைக்கு வைக்க நினைக்கும் சிறந்த மற்றும் அழகான பெயரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பொருந்தக்கூடிய, இந்த எழுத்துக்களில் தொடங்கக்கூடிய சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, படித்து பெயர் சூட்டவும்.

உங்கள் வீட்டு வாரிசுகளுக்கு பொருந்தக்கூடிய சில பெயர்கள் அதாவது ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அத்ரவ்/அதிரவ் - Athrav

அத்ரவ்/அதிரவ் - Athrav

அதிரவ் எனும் பெயர் அதிரவைப்பவர், ஆச்சரியம் அளிக்கும் அற்புதமானவர், திடமானவர் என்ற பொருளை தருகிறது. இந்த பெயர் கொண்ட குழந்தைகள் கலங்காத உள்ளம் கொண்டு, ஆச்சரியங்கள் புரிந்து மற்றவரை புருவம் உயர்த்த செய்யக்கூடியவராக வாழ்வில் வாழ்ந்து காட்டி, வெற்றி வாகை சூடுவர். உங்கள் குழந்தைகள், பூமியே அதிரும் வண்ணம் அட்டகாசமான வாழ்க்கை வாழ விரும்பினால், இந்த பெயரை சூட்டலாம்.

இஷான் - Ishaan

இஷான் - Ishaan

அந்த ஈசனின் அருள் பெற்ற குழந்தை என்பது இஷான் என்ற பெயரின் பொருள். மேலும் அனைத்து கடவுள்களுக்கும் தலைமை கடவுளாக ஈசன் விளங்குவது போல, இப்பெயர் கொண்ட குழந்தைகள் தாம் எடுத்த செயல்களில் ஜெயம் கொண்டு, முன்னிலை பெற்று தன்னிலை மறவாது திகழ்வர்; அடக்கத்துடன் ஆற்றல் நிறைந்து விளங்குவர். உங்கள் குழந்தைகள் இம்மாதிரியான வாழ்க்கை மேற்கொண்டால், இப்படிப்பட்ட பெயரால் அழைக்கப்பட்டால், நன்றாக இருக்கும் என உங்களுக்கு தோன்றினால், இந்த பெயரை சூட்டுங்கள்.

லித்வின் - Lithwin

லித்வின் - Lithwin

எங்கும் எதிலும் மாஸ் காட்டி வெற்றி பெரும் வெற்றியாளர் எனும் பொருளைத் தருகிறது லித்வின் எனும் நாமம். இப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்களின் வாழ்வு வெற்றியால் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது ஒரு வித்தியாசமான பெயராக விளங்குகிறது; குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்டும் பொழுது, அவர்கள் தன்னிச்சையாக மற்றவர்களின் கவனத்தை பெற்று விடுகிறார்கள்; இவ்வாறு கவனிக்கப்படுவதே அவர்களை முன்னேற தூண்டும் ஏணியாக அமைந்து விடுகிறது.

எஸ்வின் ராஜ் - Eshwin Raj

எஸ்வின் ராஜ் - Eshwin Raj

ஜெயிக்கப் பிறந்தவர் எனும் பொருளை தரும் இந்த நாமம். இந்த பெயரை குழந்தைக்கு சூட்டி, அதனை ஒவ்வொரு முறையும் அலைக்கும் பொழுதும் அந்தப் பெயருக்குண்டான ஆற்றல் குழந்தைதனில் உருவாக்கி, வளர்ந்து, அது செயலாக வெளிப்பட்டு வெற்றியாக குழந்தையை வந்தடையும். ராஜ் என்ற முடியும் பெயர் கொண்ட உங்கள் வாரிசு 'ராஜு பாய்' போன்று மாஸாக வாழ வாழ்த்துக்கள்.

ஒஜஸ்வத் - Ojasvath

ஒஜஸ்வத் - Ojasvath

ஒஜஸ்வத் எனும் பெயர் மிகவும் வித்தியாசமானது; இது குழந்தைகள் வாழ்வில் சக்தியுடனும், ஆற்றலுடனும் பலவானாக வாழ வேண்டும் எனும் நோக்கில் அவர்களுக்கு சூட்டப்படுகிறது. இப்பெயர் கொண்ட குழந்தைகள் பெயருக்கேற்ற மாதிரி பலம் பொருந்திய சக்தியாளர்களாக விளங்குவர். எப்பொழுதும் குறையா தன்னம்பிக்கையுடன் ஆற்றல் புரிவர். உங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்ட விரும்பினால், இதை தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் வீட்டு இலட்சுமிகளுக்கான அழகான பெயர்கள் அதாவது பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

லசியா - Lasya

லசியா - Lasya

லசியா எனும் பெயர் ஒளி பொருந்தியவர், அன்னை பார்வதியின் நடனம் என்ற பொருள் தருகிறது. உங்கள் செல்ல மக்கள் நாட்டியத்தில் சிறந்து விளங்க வேண்டும் எனும் ஆசை இருந்தால், நீங்கள் பார்வதி தேவியின் பக்தராக இருந்தால், உங்கள் குழந்தைக்கு சூட்ட சிறந்த பெயர் இது. மேலும் இது வித்தியாசமான ஒரு நாமம் ஆகும். குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை சூட்டும் பொழுது, அப்பெயரின் விளக்கம் கேட்கும் ஆவலே, அனைவரையும் குழந்தையிடம் பேச வைத்து, அன்பு காட்ட வைத்துவிடும்.

ஒஜஸ்னி - Ojashni

ஒஜஸ்னி - Ojashni

இந்த பெயர் ஒளி கொண்டவர், சக்தி பெற்றவர் எனும் பொருளை தருகிறது. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டும் பொழுது குழந்தை எதையும் எதிர்க்கும் அதாவது எந்த இன்ப துன்பத்தையும் ஆற்றல் கொண்டு திகழ்கிறது. இது ஒரு வித்தியாசமான புதிய பெயர்; உங்கள் குழந்தை தனித்துவம் பெற்று திகழ விரும்பினால், இப்பெயரை சூட்டி மகிழலாம்.

ஏக்தா - Ekthaa

ஏக்தா - Ekthaa

ஒற்றுமை காப்பவர், மிகவும் அழகானவர் என்பது இந்தப் பெயர் தரும் பொருளாகும். இது மறுபடியும் சற்று வித்தியசமான, வடமாநிலங்களில் பிரபலமான பெயரே! இதை உங்கள் குழந்தைக்கு சூட்ட விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இது குழந்தையை வாழ்வில் அனைவருடனும் பிணைத்திருந்து, ஒற்றுமையாக மக்கள் வளத்துடன் வாழ உதவும். குழந்தை மட்டுமல்லாது குழந்தையின் வாழ்வும் இப்பெயரால் அழகாகும்.

ஐலா - Iyla

ஐலா - Iyla

ஐலா எனும் பெயர் நிலவொளி எனும் அர்த்தத்தை தரும். இது கொண்ட குழந்தைகள் அந்த மதியின் பெயரை கொண்ட முழுமதியாக வாழ்வில் ஜொலிப்பர். இதுவும் ஒரு வித்தியாசமான பெயரே! உங்கள் குழந்தைகள் நிலவாக ஜொலிக்க விரும்பினால் இப்பெயரை குழந்தைக்கு சூட்டலாம்.

அதியா/அத்யா - Adhya

அதியா/அத்யா - Adhya

இந்த பெயர் புது தொடக்கம், நல்ல தொடக்கம், ஈடு இணையில்லாதவர் எனும் பொருள்களை தருகிறது. உங்கள் குழந்தை ஒரு புது அத்தியாயத்தின் நாயகியாக இருக்க விரும்பினால், உங்கள் குழந்தையின் வாழ்வு அத்தியாயமாக உலகத்தாரால் அறியப்பட விரும்பினால் இப்பெயரை சூட்டி மகிழுங்கள்!

பெண் குழந்தைகளுக்கு வித்தியாசமான மற்றும் புதுமையான பெயர் சூட்டும் முயற்சியில் இப்பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன; பிடித்தால் குழந்தைக்கு சூட்டவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Mesha rashi baby boy and baby girl names in tamil.

    Mesha rashi baby boy and baby girl names in tamil.
    Story first published: Monday, July 23, 2018, 17:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more