உங்க குழந்தை மிட் நைட்'ல அடிக்கடி அழுகுதா? நல்லா தூங்கனுமா இத செய்யுங்க!

Written By:
Subscribe to Boldsky

குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு தூங்குவதற்கான நேரமே கிடைக்காது. பகலிலும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியது இருக்கும். இரவில் குழந்தை விழிக்கும் போதும் எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டியது இருக்கும். பகல் தூக்கத்தை இழந்தால் கூட பரவாயில்லை.. இரவு தூக்கத்தை இழப்பது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பதாக இருக்கும்.

கைக்குழந்தை இரவில் பாதியில் எழுந்து கொள்ளும் பிரச்சனை இன்று பலருக்கு உள்ளது ஆனால் இதற்கான தீர்வு தான் என்ன? இந்த பகுதியில் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் மற்றும் சில தாய்மார்களின் சொந்த அனுபவங்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பகல் உணவை அதிகரிக்கவும்

பகல் உணவை அதிகரிக்கவும்

உங்களது குழந்தைக்கு ஒரு நாளில் எத்தனை முறை உணவு கொடுக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் முக்கியமாக பகல் நேரங்களில் அதிகமாக பாலூட்டலாம். நீங்கள் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது 2 மணி நேரத்திற்கு ஒரு முறையோ உங்களது குழந்தையின் பசிக்கு ஏற்ப உணவளிக்க பழக்கிவிடுங்கள்..

அதிக வெளிச்சம் வேண்டாம்

அதிக வெளிச்சம் வேண்டாம்

குழந்தைக்கு இரவு நேரத்தில் பால் கொடுக்கிறீர்கள் என்றால் அப்போது, லைட்டுகளை அணைத்து விடுவது அல்லது மிகவும் குறைந்த ஒளியை மட்டுமே தரக்கூடிய விளக்குகளை உபயோக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் விளக்குகளை எரியவிட்டு இருந்தால், அந்த விளக்குகளின் ஒளியில் குழந்தைகள் தூங்க முடியாமல் சிரமப்படும். குறைந்த ஒளியை உமிழக்கூடிய விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் குழந்தை பால் குடித்துக் கொண்டே தூங்கிவிடும்.

அட்டவணை

அட்டவணை

உங்களது குழந்தைகளின் சாப்பிடும் நேரம் மற்றும் தூங்கும் நேரம் போன்றவற்றை அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சில குழந்தைகள் பகல் நேரத்தில் 4 முறை சாப்பிடும் மேலும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தூங்கும்.

சற்று அதிக உணவு

சற்று அதிக உணவு

குழந்தைகளுக்கு சற்று அதிக உணவு கொடுப்பது குழந்தைகளின் தூக்கத்தை இடையில் தொல்லை செய்யாது என்று அனுபவப்பட்ட தாய்மார்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதை செய்யாதீர்கள்

இதை செய்யாதீர்கள்

இரவு நேரங்களில் குழந்தைகளின் கண்களை பார்த்து பேசிக் கொண்டே இருப்பது, விளையாட்டு காட்டுவது போன்றவை வேண்டாம். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இதனால் தூங்க வைப்பது கடினமாகிறது.

பகல் தூக்கம்

பகல் தூக்கம்

பகல் நேரங்களில் குழந்தைகளை அதிகமாக தூங்கவிடாதீர்கள்.. குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவது போன்றவை குழந்தைகளின் பகல் நேர தூக்கத்தினை குறைக்க உதவுகிறது. இதனால் இரவில் இடையில் விழித்துக் கொள்ளாமல் நன்றாக தூங்கும்.

கதகதப்பு

கதகதப்பு

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் குழந்தைகளை படுக்க வைத்தால், அவர்கள் தங்களது போர்வையின் மூலமாக குழந்தைக்கு ஒரு வெதுவெதுப்பை உணர வைப்பார்கள். இது போன்று நீங்களும் செய்தால் வெதுவெதுப்பான சூழ்நிலையில் உங்களது குழந்தை நன்றாக உறங்கும். வெதுவெதுப்பு என்பது குழந்தைக்கு அசௌகரியமானதாகவோ, மூச்சுவிட சிரமமானதாகவோ அல்லது வியர்வை வரும் அளவிலோ இருக்க கூடாது என்பது முக்கியம்.

டயப்பர்

டயப்பர்

நீங்கள் குழந்தைக்கு இரவில் அணிந்து விடும் டயப்பர் நீண்ட நேரம் தாங்க கூடியதாகவோ அல்லது 12 மணிநேரம் அல்லது நைட் டயப்பராகவோ இருப்பது நல்லது. இதனால் டயப்பர் பிரச்சனையின்றி குழந்தை நிம்மதியாக இரவு முழுவதும் தூங்கும்.

தாயின் அரவணைப்பு

தாயின் அரவணைப்பு

தாயின் அரவணைப்பில் குழந்தைகளை வைத்திருந்தால் எப்படிப்பட்ட ரகளை செய்யும் குழந்தைகளாக இருந்தாலும், அது எளிதில் தூங்கிவிடும். அதே சமயத்தில் குழந்தைகள் தூங்கும் இடம் சௌகரியமானதாகவும், கொசுக்கள் போன்றவற்றின் தொல்லைகள் இல்லாதவாறும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தாலாட்டு

தாலாட்டு

மென்மையான தாலட்டு பாட்டு ஒன்றை பாடுங்கள். உங்களது குழந்தைகளின் தலையை மென்மையான முறையில் கோதி விடுங்கள் அதன் சுகத்தில் குழந்தை நிம்மதியாக தூங்கிவிடும்.

ஆடைகள்

ஆடைகள்

உங்களது குழந்தைகளின் ஆடைகள் ஈரப்பதம் இல்லாமலும், இறுக்கமானதாகவும், குத்தும் தன்மை உள்ளதாகவும் இல்லாமல் இருப்பது நலம். மேலும் கால் கொழுசுகள் கழுத்து, இடுப்பு, கைகளில் உள்ள ஆபரணங்கள் குத்தும் தன்மை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

கழுத்து சுளுக்கு

கழுத்து சுளுக்கு

ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Can You Get Baby to sleep Longer Stretches

How Can You Get Baby to sleep Longer Stretches
Story first published: Saturday, January 6, 2018, 13:00 [IST]