பெயர்கள்
குளோராம்பினிகோல் சாம்பல் அறிகுறி, குளோராம்பினிகோல்ல் நச்சுத்தன்மை, நியூ பார்ன் குளோராம்பினிகோல்ல் சின்ட்ரோம் போன்ற பல பெயர்கள் இதற்கு உள்ளன. இரு பாலினரையும் தாக்கக் கூடிய ஒரு நோய். பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த நோயின் தாக்குதலால் தீவிர பாதிப்பை பெறுகின்றனர்.
அறிகுறிகள்
இந்த மருந்தின் நச்சுத்தன்மையால் குழந்தைகளிடம் 2-9 நாட்களில் இந்த அறிகுறிகளை காணலாம். சாம்பல் நிற சருமம், வலுவிழந்த உடல், நீல நிற உதடு, நீல நிற சருமம், குறைந்த இரத்த அழுத்தம், ஹைப்போதெர்மியா, வயிறு வீக்கம், வாந்தி, பச்சை நிற மலம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கா விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்டறிதல்
இந்த நோயின் அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டதும் அவர்களை 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்து குழந்தையின் முன்னேற்றத்தை மெதுவாக கவனித்து வருவார்கள். நீங்கள் குளோராம்பினிகோல்ல் மருந்தை எடுத்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இரத்த பரிமாற்றம்
இந்த முறையில் குழந்தையின் உடலிருக்கும் நச்சுத்தன்மை கலந்த இரத்தத்தை எடுத்து விட்டு சுத்தமான இரத்தத்தை ஏற்றுவார்கள்.
ஹீமோடயாலிசிஸ்
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டயாலிசிஸ் இயந்திரம் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை சமநிலையாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து சிகச்சை அளிக்கின்றனர்.
ஆக்ஸிஜன் தெரபி
இதில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்கின்றனர்.
ஹீமோபெர்புயூசன் (இரத்தத்தை வடிகட்டுதல்)
இதில் குழந்தையின் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுதல் முறை மூலம் நீக்கி தொடர்ந்து கண்காணித்து வருவர்.