இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?... இருக்கவே இருக்கு சோளமாவு...

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

எந்த ஒரு குழந்தையும் கஷ்டப்படுவதை ஒரு தாயால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பொதுவாக குழந்தைகள் கடந்து வரும் பிரச்சனைகளில் ஒன்று டயப்பர் அணிவதால் உண்டாகும் ராஷஸ் . டயப்பர் ராஷ் என்பது, டயப்பர் அணியும் பகுதியில் தோல் சிவப்பு நிறமாக மாறி ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகும்.

parenting

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவில் மாற்றம், குழந்தைக்கு தடவும் லோஷனில் உள்ள ரசாயனம், குழந்தைக்கு பயன்படுத்தும் வைப்ஸ், சோப் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது நீண்ட நேரம் டயப்பர் மாற்றாமல் இருப்பதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தோல் சிவந்து போகலாம். இந்த ராஷஸ் கிருமி தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே இதனை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இத்தகைய ராஷசை போக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி, இதனை போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினிகர்

வினிகர்

வினிகரில் உள்ள அமிலத்தன்மை டயப்பர் ராஷஸ் குணப்படுத்துகிறது. ராஷசை உண்டாக்கும் கிருமிகள் பொதுவாக காரத்தன்மை உடையதாக இருப்பதால் வினிகரின் அமிலத்தன்மை இதனை போக்குகிறது. துணி டயப்பர் பயன்படுத்துகிறவர்கள், சோப்பிற்கு மாற்றாக, வினிகர் கலந்த நீரில் துணிகளை துவைக்கலாம். அரை பக்கெட் நீரில் 11/2 கப் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.

வாசலின்

வாசலின்

டயப்பர் ராஷிற்கு வாசலின் ஒரு சிறந்த தீர்வாகும். டயப்பரை மாற்றும் ஒவ்வொரு முறையும், ராஷஸ் உள்ள இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி வாருங்கள். ஒவ்வொரு முறை டயப்பர் மாற்றும்போதும், குழந்தையின் அடிப்பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து, பின் ஒரு டவலில் துடைத்து காய்ந்தவுடன், அந்த பகுதியில் வாசலின் தடவவும்.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

டயப்பர் ராஷை போக்க மற்றொரு சிறந்த வழி, பேக்கிங் பவுடர். 3-4 கப் தண்ணீரில் 2-3 டேபிள் ஸ்பூன் பேகிங் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு துணியை இந்த நீரில் முக்கி எடுத்து, குழந்தைக்கு ராஷஸ் இருக்கும் இடத்தில் ஒத்தி எடுக்கவும். பிறகு மற்றொரு காய்ந்த துணியால் அந்த இடத்தை துடைத்து விடவும். பிறகு டயப்பர் கட்டி விடவும்.

டயப்பர் ராஷ் மிகவும் அதிகமான பாதிப்பை குழந்தைக்கு ஏற்படுத்தி இருந்தால், 1-2 டேபில்ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் எப்சம் உப்பு, சிறிதளவு ஓட்ஸ் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, அந்த நீரால் குழந்தையை குளிப்பாட்டவும். இதனால் பூஞ்சை தொற்று குறைக்கப்படும். ஒரு டப் வெதுவெதுப்பான நீரில், 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து குழந்தையை அந்த நீரில் குளிப்பாட்டுங்கள். இதனால் குழந்தைக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். தொப்புள் கோடி விழாத குழந்தைக்கு இதனை முயற்ச்சிக்க வேண்டாம்.

சோளமாவு

சோளமாவு

குழந்தைகளுக்கு ராஷஸ் உண்டான இடத்தில் சிறிதளவு சோளமாவை தடவினால், அழற்சி குறைந்து ராஷஸ் குணமாகும். ஆகவே சிறிதளவு சோளமாவை தண்ணீர் சேர்த்து கலந்து ராஷ் உள்ள இடத்தில் தடவி வரவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை, டயப்பர் ராஷை முற்றிலும் போக்க உதவுகிறது. குழந்தைக்கு டயப்பர் மாற்றும் ஒவ்வொரு முறையும் அந்த பகுதியில் தாரளாமாக தேங்காய் எண்ணெய்யை தடவி பின் சருமம் அதனை உறிஞ்சியவுடன் , டயப்பரை அணிவியுங்கள்.

அதிகமான பாதிப்பு இருக்கும்போது, தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து தடவலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

மிகவும் எளிய முறையில் டயப்பர் ராஷை போக்கை ஒரு வழி ஓட்ஸ். ஒட்சில் புரதச் சத்து அதிகம் உள்ளது. ஆகவே, இது குழந்தையில் உடலின் மென்மையாக்க உதவுகிறது. 3/4 கப் ஓட்ஸை தூளாக அரைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் இதனை கலந்து கொள்ளவும். இந்த நீரில் 10-15 நிமிடங்கள் குழந்தையை ஊறவிடவும். பின்பு சாதாரண வெந்நீரில் குளிப்பாட்டவும்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, பெரும்பாலும் குழந்தைகளுக்கு ராஷஸ் வராது. ஆகவே முடிந்த வரையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தைக்கு ராஷ் உள்ள இடத்தில் சில துளிகள் தாய்ப்பாலை தடவவும். காற்றில் அது தானாக காய்ந்து விடும். பின்பு டயப்பர் அணிவிக்கவும்.

கை கழுவுங்கள்

கை கழுவுங்கள்

ஒருமுறை ராஷஸ் உண்டானவுடன் மறுபடியும் அது அதிகரிக்காமல் இருக்க, ஒவ்வொரு முறையும் டயப்பர் அணிவிக்கும்போது, தாய்மார்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். இதனால் கிருமி தொற்று குழந்தையின் மற்ற உடல் பாகங்களில் பரவாமல் இருக்கும்.

குருதி நெல்லி சாறு

குருதி நெல்லி சாறு

குருதி நெல்லி சாறு, கிருமிகளைத் தடுத்து, ராஷை போக்குகின்றன. குழந்தைக்கு தொடர்ந்து இந்த சாற்றை 2-3 அவுன்ஸ் கொடுத்து வாருங்கள்.

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவற்றில் ஒன்று இந்த டயப்பர் ராஷ். 3-4 முட்டைகளை உடைத்து, வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். ராஷஸ் உள்ள இடத்தில் அதனைத் தடவவும். சில நாட்களில் ராஷஸ் காணாமல் போகும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஈரப்பதம், ராஷை போக்கி. சருமத்திற்கு மென்மையான தோற்றத்தைத் தருகிறது. 1 ஸ்பூன் தண்ணீரில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதனை குழந்தைக்கு பாதிப்பு உண்டான இடத்தில் தடவவும்.

மீன் எண்ணெய் மாத்திரை

மீன் எண்ணெய் மாத்திரை

இந்த முறை, பலருக்கு தெரியாத ஒரு முறையாகும். ஆனால் இதன் தீர்வு மிகவும் நல்ல விதத்தில் இருக்கும். மூன்று அல்லது நான்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்து, அதன் முனையை உடைத்து, அதில் இருந்து வெளிவரும் எண்ணெய்யை, ராஷின் மீது தடவுங்கள்.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், ஜோஜோபா எண்ணெய் போன்றவை ராஷஸ் மீது தடவுவதற்கு சிறந்த எண்ணெய்கள் ஆகும் . குழந்தைகள் குளித்து முடித்தவுடன், நன்றாக துடைத்து, உடல் காய்ந்தவுடன் இந்த எண்ணெய்களை தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

கற்றாழை

கற்றாழை

சரும தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் கற்றாழை மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. டயப்பர் ராஷும் இதில் அடங்கும். கற்றாழை ஜெல்லை ராஷின் மீது தடவுவதால் உடனடியாக ராஷ் மறைகிறது.

க்ரேப் ப்ருட் சாறு

க்ரேப் ப்ருட் சாறு

கிரேப் ப்ருட்டில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆகவே இது குழந்தையின் ராஷை விரைவில் குணப்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் தண்ணீரில், கிரேப் ப்ருட் சாறு 3 துளி சேர்த்து கலந்து, பதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். தண்ணீர் சேர்க்காமல் நேரடியாக இந்த சாற்றை தடவ வேண்டாம்.

டீ பேக்

டீ பேக்

டீ பேக்கை ராஷசில் பயன்படுத்துவதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவை காணாமல் போகும். குழந்தைக்கு டையப்பர் அணிவதற்கு முன், டயப்பருக்குள் 3 அல்லது 4 டி பேக்கை வைத்து பின்னர் அதனை அணிவித்து விடுங்கள். டீ பேக்கில் இருக்கும் சில வகை ரசாயனங்கள், சிறுநீருடன் தொடர்பு ஏற்படுத்தி, ராஷசை போக்குகிறது.அல்லது தேநீரை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். அல்லது தேநீரை கொண்டு ராஷ் உள்ள இடத்தை தொடர்ந்து கழுவி வரலாம்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

குழந்தையின் அடிப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். டயப்பர் நனைந்தவுடன் அதனை மாற்றி விடுங்கள். ஒவ்வொரு முறையும் டையப்பரை மாற்றுபோது, அந்த இடத்தை வெந்நீரால் கழவி , காய்ந்த பின், மற்றொரு டயப்பரை அணிவிக்கவும். சந்தையில் கிடைக்கும் வைப்ஸ் பயன்படுத்தி குழந்தையை சுத்தம் செய்வதைவிட, மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.

டால்கம் பவுடரை குழந்தைக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதனை நுகர்வதால் குழந்தையின் நுரையீரால் பாதிக்கப்படுகிறது , இதனால் குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது. குழந்தைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ, க்ரீம், சோப் போன்றவை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளாதபோது இத்தகைய ராஷ் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சில நேரம் சில குறிப்பிட்ட பிராண்ட் டயப்பர் குழந்தைக்கு ஏற்றுக் கொள்ளாமல், ராஷ் உருவாகலாம். குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

நறுமணப்பொருட்கள் சேர்க்கப்பட்ட டயப்பரை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பேன்ட்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இவை நிலைமையை இன்னும் மோசமாக மாற்றும் தன்மை கொண்டவை. மிகவும் டைட்டாக இருக்கும் டயப்பரை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பேன்ட் போல், இவற்றிலும் காற்று உள்ளே நிழைய முடியாமல், குழந்தைகளுக்கு ராஷசை உண்டாக்கும்.

குழந்தைகளின் டயப்பரை துவைப்பதற்கு நறுமணம் மிகுந்த டிடர்ஜென்ட்டை பயன்படுத்த வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

16 Home Remedies to Get Rid of Diaper Rash Quickly

No mother wants her baby to suffer from any problem, but diaper rash is the most common problem among children that mothers have to deal with.
Story first published: Monday, April 16, 2018, 15:20 [IST]