For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குழந்தை ஓவரா அழுதா இத மட்டும் செய்ங்க... உடனே அழுகைய நிறுத்திடும்...

  By Manikandan Navaneethan
  |

  "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

  சிறுகை அளாவிய கூழ்"

  தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ்(உணவு), அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது திருவள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும். இதுபோன்ற சமயங்களில் தாயின் நிலைமையை சொல்லி தெரியவேண்டியது இல்லை.

  Home Remedies To Stop Babies Crying

  இயற்கையிலேயே தாயின் எண்ணமும் செயலும் எப்போழுதும் குழந்தையை சுற்றியே இருக்கும் இருப்பினும் முதல் குழந்தை பெற்ற தாய்க்கு உடலாலும் மனதாலும் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக அதிக எடை, வயிற்றில் ஏற்படும் தழும்புகள் முதல் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் முடி உதிர்வு என எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தையின் இடைவிடாத அழுகை தாயின் கவலையை மென்மேலும் அதிகரிக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காரணங்கள்

  காரணங்கள்

  குழந்தையின் அழுகைக்கு ஒரே காரணம் தான் இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள் பல காரணங்கள் உள்ளன. எனவே முதலில் என்ன காரணத்திற்குகாக அழுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாதி வெற்றி தான். ஆனால் அது சுலபமல்ல. இருப்பினும் கீழே பொதுவான காரணங்கள் சிலவற்றை கொடுத்துள்ளோம்.

  • பசி ஏற்பட்டால்

  • தூக்கம் வந்தால்

  • ஈரமான டயபர்

  • வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்

  • சோர்வு

  • அதிகமான வெப்பம் அல்லது குளிர்

  • இறுக்கமான உடைகள்

  • வலி ஏற்படும் போது

  • தூண்டுதல் காரணமாக

  • கையில் வைத்திருக்க வேண்டும் என்ற வேளைகளில்

  எவ்வாறு நிறுத்தலாம்?

  எவ்வாறு நிறுத்தலாம்?

  ஒரு சில குழந்தைகள் எப்போதும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இருப்பதை கொண்டு விளையாடும் குறைவாகவே அழும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அப்படி இருப்பதில்லை, எப்பொழுதும் கைகளில் வைத்திருக்க சொல்லும் தாயின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டும் என்று என்னும். எப்போதவது அப்படி என்றால் சமாளித்து விடலாம் எல்லா நேரமும் கைகளில் வைத்திருப்பது இயலாத காரியம் பின்னர் மற்ற வேலைகளை கவனிக்க நேரம் இல்லாமல் பொய் விடும் அது மட்டும் இல்லாமல் குழந்தையின் வழக்கமான தூக்கம் மற்றும் உணவு நேரங்களில் பாதிப்பு ஏற்படும். இது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் அழுகையை எவ்வாறு நிறுத்த வேண்டும் என அறிந்திருத்தல் அவசியம்.

  சோதனைகள் - பசி

  சோதனைகள் - பசி

  அதிகப்படியான நேரங்களில் குழந்தை பசியினால் அழலாம் எனவே பாலூட்ட முயற்சி செய்யுங்கள்; ஒருவேளை குழந்தை குடிக்க மறுத்தால், பசியின் காரணமாக ஆழவில்லை என்பதை உறுதி செய்யலாம். குழந்தை பசியினால் அழவில்லை என்றால் இரண்டாவது முக்கிய காரணம் ஈரமான டயபர். ஈரமான டயப்பரை மாற்றிவிடுங்கள் குழந்தையின் அழுகை நின்று விடும். அடுத்ததாக எறும்புகள் அல்லது மற்ற பூச்சிகள் கடித்தால் குழந்தை அழலாம். எனவே குலத்தாயி கை, கால் மற்றும் உடலில் சிவந்த தடுப்புகள் உள்ளனவா என சோதிக்கவும். இறுக்கமான ஆடை கூட காரணமாக இருக்கலாம், அப்படியெனில் குழந்தையின் துணிகளை மாற்றுங்கள். குழந்தையின் உடல் வெப்பநிலையை சரிபார்க்கவும் அதிக குளிர்ச்சி அல்லது அதிக வெப்பம் இரண்டும் உடல் நல குறைவின் அறிகுறிகள் எனவே உடனே மருத்துவரை அணுகவும்.

  துணியினால் சுற்றுதல் (ஸ்வாடில்):

  துணியினால் சுற்றுதல் (ஸ்வாடில்):

  குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.

   மேலும் கீழும் (ராக்) அசைத்தல்

  மேலும் கீழும் (ராக்) அசைத்தல்

  குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.

  தாலாட்டு பாடல்கள்

  தாலாட்டு பாடல்கள்

  இனிமையான தாலாட்டு பாடல்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்தி மன அமைதியை தரும். இனிமையான பாடலுடன் சேர்த்து மென்மையான அசைவு (ராக்கிங்) மிக விரைவான முடிவுகளை தரும். அதிலும் பழைமையான பாடல்கள் சிறந்த தேர்வு என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பெரும்பாலும் குழந்தைகள் தாய் எப்படி பாடுகிறாள் என்பதை விட தாலாட்டு பாடல்களையே பெரிதும் விரும்புகிறார்கள். எனவே, உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்த தாலாட்டு போன்ற பாடல்களை பாடுங்கள்.

  மசாஜ்

  மசாஜ்

  மசாஜ் கோலிக் சிம்டம்ஸை மேம்படுத்துவதில் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு கோலிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லா குழந்தைகளும் ஒரே சமயத்தில் சுவாசித்தல் மற்றும் சாப்பிடுதல் என அசாதாரண திறனைக் கொண்டுள்ளன. இந்த திறமை பாலூட்டும் பொழுது குழந்தைகள் தொடர்ந்து உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இதனால் குழந்தையின் வாயிற்றில் காற்று பில்டப் ஆவதற்கு வழிவகுக்கிறது. உங்கள் குழந்தைக்கு பாலூட்டிய பின்பு காற்று ஃபார்மேஷனால் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்கு அழுகை பெரும் உதவியாக இருக்கும். இயற்கையிலேயே வயிற்றில் இருந்து தேவையற்ற வாயுவை வெளியேற்ற அழுகை உதவி செய்கிறது. எனவே பாலூட்டிய பின்பு மெதுவாக உங்கள் குழந்தைக்கு நிமிர்ந்த நிலையிலேயே சுமார் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். பின்பு மெதுவாக அதன் பின்புறத்தில் தட்டி கொடுங்கள்.

  கருப்பை ஒலி

  கருப்பை ஒலி

  கருப்பையில் இருக்கும் குழந்தை முற்றிலும் அமைதியான சூழலில் இருப்பதில்லை. குழந்தைகள் தாயின் இரத்த ஓட்டத்தின் ஒலிகளைக் கேட்கிறார்கள், மேலும் அவை தாயின் வயிறு மற்றும் குடல் இயக்கங்களின் ஒலியையும் கேட்கின்றன. இதேபோன்ற ஒலியை உருவாக்குவதன் மூலம், குழந்தையை கர்ப்பபைக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்தலாம். குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு இது ஒரு சிறந்த யோசனை. தந்தை அருகே இருந்தால், உங்களுக்கு தேவையானதெல்லாம் மென்மையான அரவணைப்பு தான். எப்படி என்றால் தந்தையின் மார்போடு நெருக்கமாக (பௌத்த துறவியை போல) குழந்தையை வைத்திருப்பதன் மூலம் இதயத்தின் அதிர்வு உங்கள் குழந்தை அழுவதை நிறுத்தி மிதமான அமைதியை வழங்கும்.

  சைக்கிள் மூவ்

  சைக்கிள் மூவ்

  வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.

  தூண்டல்கள் (ஓவர்-ஸ்டுமுலேசன்)

  தூண்டல்கள் (ஓவர்-ஸ்டுமுலேசன்)

  குழந்தைகள் எதாவது ஒரு காரணத்தினால் தூண்டப்படும் பொழுது அழுகிறார்கள். சத்தமான ஒலி, பெரிய அல்லது திடீர் அசைவுகள் மற்றும் இது போன்ற சூழ்நிலைகளை குழந்தைகளினால் தாங்க முடியாத பொழுது ஆழ தொடங்கி விடும். அதிகமாக பாலூட்டுதல் மற்றும் கையாளும் விதம் கூட தூண்டலுக்கு வழிவகுக்கும். இங்கே ஓவர்-ஸ்டுமுலேசனுக்குரிய அறிகுறிகள் சிலவற்றை கொடுத்துள்ளோம்:

  வேகமாக சுவாசித்தல்

  வேகமாக சுவாசித்தல்

  தோல் நிறத்தில் மாற்றம்

  திடீர் அசைவுகள்

  நீங்கள் குழந்தையுடன் பேசும் போது தலையைத் திருப்புவது

  இது போன்ற நேரங்களில் உங்கள் குழந்தையை அமைதியான இடத்திற்கு எடுத்து செல்லுங்கள், விளக்குகளை மங்கச் செய்து, உங்கள் குழந்தையை ஆறுதல் படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம்.

  கவனத்தை திசை திருப்புதல்

  கவனத்தை திசை திருப்புதல்

  குழந்தை பசி, தூக்கம் மற்றும் வயிற்று பிரச்சினைகளால் அழவில்லை என்பதை உறுதி செய்த பின், அழுகையை நிறுத்துவதற்கு குழந்தையின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கவும். உங்கள் குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப சில பயனுள்ள வழிகள்

  ஆடியோவை ஒலிக்க செய்தல்

  அசையும் அல்லது ஒலி எழுப்பும் பொம்மைகளை காட்டுதல்

  வேடிக்கையான குரல் அல்லது முக பாவனையின் மூலம் கவனத்தை திருப்புதல்

  உங்கள் குழந்தையை ஜன்னலின் அருகே கொண்டு சென்று வெளிப்புற உலகத்தை காட்டுதல். அதாவது மரங்களின் கிளைகள் மற்றும் நகரும் வாகனங்கள் அல்லது பறவைகள் ஆகியவற்றை காட்டவும்.

  வெளியில் கொண்டு செல்லுதல்

  வெளியில் கொண்டு செல்லுதல்

  ஜன்னலின் வழியே தெரியும் காட்சி உதவாத நேரங்களில். சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் மரம் மற்றும் காற்று உள்ள வெளி இடங்களுக்கு எடுத்து செல்லவும். கவலை கொண்ட குழந்தைகள் கூட இதை விரும்பும். இயற்கை காட்சிகள் நிறைந்த சூழல் குழந்தையின் கவனத்தை ஈர்த்து அமைதியாக இருக்க செய்யும்.

  சிறிய பயணம்

  சிறிய பயணம்

  உங்கள் குழந்தை அழுவதை நிறுத்த மிகவும் வழக்கமான மற்றும் எளிய வழி, அதே நேரம் குழந்தைகள் விரும்பும் செயல் வாகனத்தில் பயணிப்பது. இது ஒரு மந்திரம் போல வேலை செய்யும். இது வாகனத்தின் மென்மையான சத்தமா அல்லது கார் திருப்பங்களில் திரும்புவதாலா எது என்று இன்று வரை புரியவில்லை என்றாலும், பல சமயங்களில் சிறிய பயணத்திலேயே குழந்தைகள் விரைவாக தூங்கி விழும். உங்கள் குழந்தைக்கு உங்களது காரை பிடித்திருக்கிறது என்றால் மட்டும் போதும், அழும் நேரத்தில் உங்கள் தெருவின் ஒரு பகுதியை சுற்றி ஒரு சுற்று சுற்றினால் போதும். அதுவே உங்கள் குழந்தையை தூங்க செய்து விடும்.

  சரியான உணவு திட்டம்

  சரியான உணவு திட்டம்

  ஒரு தாயாக, உங்கள் குழந்தையின் உணவு முறைகளை கவனித்து கொடுத்தால் அதுவே உங்களின் பாதி பிரச்சினைகளை சரி சேய்து விடும். உங்கள் குழந்தையின் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்த கூடிய உணவுகளை தவிர்த்தல் மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் போன்ற சில உணவுகளை தேவையான அளவு மட்டுமே கொடுத்தல் போன்ற உணவு முறைகளை பின்பற்றுதல் நல்லது. ஒரு தாயாக உங்களின் அன்பு மற்றும் அரவணைப்பு உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுக்கும். மேலும் எங்களின் இந்த தொகுப்பு அதற்கு உதவும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  12 Effective Home Remedies To Stop Babies Crying

  As a nursing mother, it is quite natural that your body, mind, and soul are engaged in a completely different world where every single thought revolves around your child
  Story first published: Friday, April 20, 2018, 13:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more