பெற்றோர்கள் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நீங்கள் அதிகமான நேரம் ஸ்மார்ட் போனில் செலவழிக்கிறீர்களா. உங்களது உணவு நேரத்தில், விளையாடும் நேரத்தில் மற்றும் தினசரி செயல்பாடுகளில் அல்லது உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறீர்களா ஜாக்கிரதை இந்த பழக்கம் உங்கள் குழந்தைகளிடம் கெட்ட பழக்கத்தை கொண்டு வருகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஒரு புதிய தகவல் என்னவென்றால் குறைவாக அல்லது சாதாரண அளவு டெக்னாலஜி குறுக்கீடு இருந்தாலும் உங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை பாதிக்கிறது. அதிக சென்ஸ்டிவ், அதிகமான கோபம், அதிகப்படியான செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவைகள் குழந்தைகளிடம் ஏற்படுகின்றனர்.

Your Smartphone Obsession May Up Bad Behaviour In Kids

நாங்கள் செய்த ஆராய்ச்சியிலிருந்து கண்டறிந்தது என்னவென்றால் நாம் பயன்படுத்தும் அதிகப்படியான டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்துடன் கூடிய பிரிவுகளை உண்டு பண்ணுகின்றனர் என்று யு. எஸ்ஸிலுள்ள இலினோயிஸ் ஸ்டேட் பல்கலைக் கழக துணை விரிவுரையாளர் ' பிராண்டன். டி. மேக்டேனியல்' கூறுகிறார்.

பெற்றோர்கள் மெபைல் டெக்னாலஜியை பயன்படுத்துவதால் அவர்களது பதிலளிக்கும் தன்மை குறைவதால் குழந்தைகளிடம் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மொபைல் இருவரிடமான கலந்துரையாடலை குறைக்கிறது.

Your Smartphone Obsession May Up Bad Behaviour In Kids

இந்த பிரச்சினையை சமாளிப்பது கடினமாக இருந்தாலும், நிறைய பயனுள்ள சோஷியல் தகவல்கள் உங்களுக்கு மொபைலில் கிடைத்தாலும் அதே நேரத்தில் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் நமது குழந்தைகள் இவை இரண்டையையுமே நாம் கவனிக்க வேண்டும் என்று குழந்தை மன நல மற்றும் உடல் நல மருத்துவர் ஜென்னி ரேட்ஸ்கி என்பவர் கூறுகிறார்.

சைல்ட் டெவலப்மென்ட் என்ற நாளிதழ் சொல்லும் தகவல் என்னவென்றால் அம்மா அப்பா இவர்கள் இருவரையும் தனித்தனியாக பிரித்து வீட்டில் வைத்தனர். இதற்கு 170 பேர் இரண்டு டீம்களிலும் வைக்கப்பட்டனர்.

இதில் 48 % பெற்றோர்கள் டெக்னாலஜி குறுக்கீடு ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறையும், 17% ஒரு முறையும் 24% இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், 11% பெற்றோர்கள் மட்டுமே எந்த வித டெக்னாலஜி குறுக்கீடும் வரவில்லை என்றனர்.

Your Smartphone Obsession May Up Bad Behaviour In Kids

இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் உங்கள் டெக்னாலஜி பயன்பாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள். மாடர்ன் வாழ்க்கையில் மற்ற நேரங்களில் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள் இது உங்கள் குடும்ப டென்ஷனை குறைத்து விடும்.

உங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாடு அல்லது மற்ற டெக்னாலஜி பயன்பாட்டுக்கு தனியாக வரைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அழகான நேரங்களை குழந்தைகளுடன் செலவழிக்கும் போது இதன் குறுக்கீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேக் டேனியல் சொல்கிறார்.

English summary

Your Smartphone Obsession May Up Bad Behaviour In Kids

Your Smartphone Obsession May Up Bad Behaviour In Kids
Story first published: Friday, July 7, 2017, 8:00 [IST]