For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து "கக்கா" போகச் சொல்லித் தரனும்?

பச்சிளம் குழந்தைகளுக்கு டயாப்பர் போடாமல் தவிர்க்க சில யோசனைகள்

|

குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படக்கூடியதும் அதே நேரத்தில் பெற்றோருக்கு அதிக வேலையை கொடுப்பதும் டாய்லெட் விஷயம் தான்.

நம் வேலையை குறைத்துக் கொள்கிறோம் என்று நினைத்து குழந்தைக்கு டயாப்பர் வாங்கிப் போடுவதை பழக்கமாக்கி கொண்டோமே தவிர டயாப்பரை தவிர்க்க முடியுமா என்று ஒரு போதும் யோசித்ததில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாய்லெட் ட்ரைனிங் :

டாய்லெட் ட்ரைனிங் :

குழந்தைகள் பசித்தால் அழுவது போல தனக்கு இடைஞ்சல் என்றால் அழுது அசௌகர்யத்தை காட்டுவது போல டாய்லெட் போக வேண்டும் என்று குழந்தை சொல்ல அல்லது வெளிப்படுத்த பழக்கப்படுத்த வேண்டும்.

நமக்கு வேலை மிச்சம் என டயாப்பர் மாட்டிவிடும் குழந்தைகள். எப்போது வேண்டுமானாலும் டாய்லெட் செல்லலாம் என்று பழக்கப்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு வளர்ந்த பின் டாய்லெட் ட்ரையினிங் கொடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

ஏன் டாய்லெட் ட்ரைனிங் :

ஏன் டாய்லெட் ட்ரைனிங் :

பெற்றோருக்கு பணமும் மிச்சம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுக்கலாம் அதே நேரத்தில் டயாப்பர் போட்டேயிருப்பதால் வரும் பிற பாதிப்புகளிலிருந்தும் காக்கலாம். இது குழந்தை மற்றும் பெற்றோர் இடையிலான அன்னியோன்னியத்தை அதிகரிக்கும். புரிதலை மேம்படுத்தும். வளர்ந்ததும் சொல்லித்தருவதை குழந்தையாக இருக்கும் போதிருந்தே டாய்லெட் ட்ரைனிங் கொடுப்பது பெற்றோருக்கு எளிதாக இருக்கும்.

எப்போது ஆரம்பிக்கலாம் :

எப்போது ஆரம்பிக்கலாம் :

டாய்லெட் ட்ரைனிங் குழந்தை உட்கார ஆரம்பித்ததிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆறு மாதங்களில் துவங்கும் இந்தப் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் போது மட்டுமே குழந்தை அதனை அன்றாட பழக்கங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்ளும். இரவு நேரங்களில் குழந்தை தூங்கும் நேரங்களில் மட்டும் டயாப்பர் அணிவித்துவிடலாம்.

பழக்கம் :

பழக்கம் :

குழந்தை காலையில் எழுந்தவுடனேயே டாய்லெட் செல்ல வேண்டும் என்று பழக்கப்படுத்தும் விதமாக டாய்லெட்டுக்கு அழைத்துச் சென்று கால்களில் தண்ணீர் ஊற்றினால் தானாகவே குழந்தை டாய்லெட் சென்றிடும். ஆறு மாதக் குழந்தை எனும் போது, குழந்தைபிடித்துக் கொண்டு பாத்ரூமில் நிற்கலாம்.

டாய்லெட் அறிகுறிகள் :

டாய்லெட் அறிகுறிகள் :

ஒவ்வொரு குழந்தையும் தான் டாய்லெட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ஏதேனும் அறிகுறிகளை காண்பிப்பர். அல்லது பெற்றோர் ஏதேனும் சமிக்ஞைகளை குழந்தைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறை டாய்லெட் செல்லும் போதும், சமிக்ஞையைச் சொல்லி டாய்லெட் செல்கிறாய் டாய்லெட் செல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்ல வேண்டும் என்று குழந்தைக்கு நினைவுபடுத்துங்கள்.

பாராட்டுங்கள் :

பாராட்டுங்கள் :

டாய்லெட் செல்லவேண்டும் என்று சரியாக உங்களிடம் வெளிப்படுத்தினாலோ அல்லது, நீங்கள் சொன்னவுடன் புரிந்து செயல்பட்டாலோ உடனேயே பாராட்டுங்கள். அம்மாவின் ஓரு முத்தம் குழந்தைக்கு மிகச்சிறந்த பரிசு என்பதை மறந்துவிட வேண்டாம்.

அலட்சியம் :

அலட்சியம் :

குழந்தைக்கு டாய்லெட் வருவது போல இருக்கிறதென சொல்லி வரவில்லையென்றால் திட்டாதீர்கள். அலட்சியம் செய்யாதீர்கள். உங்களின் அலட்சியத்தால் பயப்படும் குழந்தை தனக்கு இப்போது டாய்லெட் வருகிறதா இல்லையா என்பதை உணராமல் உங்கள் வேலையை இரட்டிப்பாக்கும்.

தவறினால் கவலை வேண்டாம் :

தவறினால் கவலை வேண்டாம் :

உங்களிடம் வெளிப்படுத்த தாமதாமாகி வெளியில் எல்லாம் டாய்லெட் பட்டுவிட்டால் குழந்தையை கடிந்து கொள்ள வேண்டாம். குழந்தையை படுக்க வைக்கும் போதே மேட் போட்டு தூங்க வையுங்கள்.

பயிற்சி தொடரட்டும் :

பயிற்சி தொடரட்டும் :

இதில் மிக முக்கியமானது தொடர் பயிற்சி தான். இரண்டு நாட்கள் சொல்லிக்கொடுத்து பின்னர் டயாப்பர் மாட்டினால் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது.

எத்தனை வாரமானாலும், மாதமானாலும் டாய்லெட் ட்ரைனிங் தொடர்ந்தால் மட்டுமே குழந்தையின் பழக்கமாக அது மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: babies
English summary

toilet training for babies

Babies dont need nappies.Here some of the tips to potty training for your toddler
Story first published: Tuesday, August 1, 2017, 17:56 [IST]
Desktop Bottom Promotion