Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தை அழுவதை நிறுத்த வேண்டுமா? அப்ப இந்த 2 இடத்தில் அழுத்தம் கொடுங்க...
இங்கு எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு குழந்தையைப் பற்றி முழுமையாக தெரியாது. நாளாக ஆக தான் அவர்களால் குழந்தையைப் புரிந்து கொள்வார்கள். முக்கியமாக குழந்தை எந்த காரணத்திற்கு எல்லாம் அழும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள் குறித்து கொடுத்துள்ளது.

அந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தால், குழந்தைக்கு உள்ள பிரச்சனை நீங்கி, குழந்தை அழுவதை நிறுத்திவிடும். சரி, இப்போது எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என காணலாம்.

ரிப்லக்ஸாலஜி
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யும் ஒரு முறை தான் ரிப்லக்ஸாலஜி. இது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு சீன வைத்திய முறை.

குழந்தைகள் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைகள் தன் பெற்றோருடன் அழுகையின் மூலம் தான் தொடர்பு கொள்ளும். அது பசியாகட்டும், அசதியாகட்டும், உடலில் ஏதேனும் பிரச்சனையாகட்டும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். ஆரம்பத்தில் புதிதாக பெற்றொர் ஆனவர்கள், குழந்தை அழுவதைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் போக போகத் தான் அவர்களுக்கே புரியும்.

மிகுதியான அழுகை
சில நேரங்களில் குழந்தைகள் தலைவலி, வயிற்று வலி போன்றவை இருக்கும் போது, நிறுத்தாமல் பல மணிநேரம் அழுவார்கள். இந்நேரத்தில் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய முயல வேண்டும்.

வழி #1
குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தால், குழந்தைக்கு தலைவலி அல்லது வயிற்று வலி இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அப்போது குழந்தையின் ஒவ்வொரு கால் பெருவிரல் பகுதியிலும் சுமார் 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு இருக்கும் தலைவலி சரியாகும்.

வழி #2
ஒரு வேளை குழந்தைக்கு இருக்கும் வயிற்று வலியைப் போக்க வேண்டுமானால், பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குறிப்பு
என்ன செய்தாலும், குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதால், உடனே மருத்துவரை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
