குழந்தைக்கு மந்தம் தட்டினால் குணப்படுத்தும் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை!!

By Gnaana
Subscribe to Boldsky

நுணாமரம் என்று அறியப்படும் சிறுமரம், தமிழகமெங்கும் வயலோரங்களில், பரவலாகக் காணப்படுகிறது, எங்கும் வளரும் இயல்புடைய நுணா மரத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்பதால், வயல்வெளிகளில் பயிர்களைக் காக்க அமைக்கும் வேலிகளின் இடையே நுணா மரங்களை நட்டு வளர்ப்பர்.

வித்தியாசமான முடிச்சுகள் போன்ற வடிவமைப்பில் காய்களைக் கொண்ட நுனா மரத்தின் மலர்கள் முல்லை மலர்களைப் போல நல்ல வாசனை மிகுந்து காணப்படும். நுணா மரத்தின் இலைகள், பூ, காய் மற்றும் வேர்ப்பட்டை போன்ற, அனைத்து பாகங்களும் மருத்துவ குண நலன்கள் மிக்கவை. நுணா மரத்தின் உட்புறம் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால், மஞ்சணத்தி என்றும் நுணா மரம் அழைக்கப்படுகிறது.

Nuna leaves to cure infants stomach problems due to indigestion

Image Source

சங்ககால மகளிரின் விளையாட்டு வாழ்வில் இடம்பெற்ற மலர்களில் ஒன்றாக நுணா மலர்கள் விளங்கின என்பதன் மூலம், சங்ககாலம் தொட்டு இன்று வரை, உயிர்ப்புடன் உள்ள நுணா மரத்தின் பெருமைகளை உணரலாம். கிராமங்களில் சிறுவர்கள் நுணாக்காய்கள், ஈர்க்குச்சிகள் கொண்டு விளையாட்டு தேர் செய்து, விளையாடி மகிழ்வர்.

நுணா குழந்தைகளின் மாந்தம் எனும் வயிற்று வியாதிகளைக் குணமாக்கும், நாள்பட்ட ஜுரத்தை ஆற்றும், இரத்த அழுத்தத்தை சரி செய்யும், உடலில் கைகால்களில் உள்ள மூட்டு வலிகளைப் போக்கும், உடலில் வியாதி எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, வைரம் கிருமி பாதிப்புகளை ஒழிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுப் போக்கிற்கு :

வயிற்றுப் போக்கிற்கு :

தாய்ப்பால் பருகும் குழந்தைகளின் மாந்தம் எனும் செரிமானக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணமாக விளங்குவது, நுணா இலைகள். சிறிது நுணா இலைகளை நீரில் கொதிக்கவைத்து, அந்தக் கொதி நீரை தினமும், இருவேளை குழந்தைகளுக்கு புகட்டி வர, மாந்தம், வயிற்றுப் போக்கு குணமாகும்.

குழந்தைகளுக்கு செரிமான பாதிப்பால் ஏற்படும் ஜுரம் குணமாக :

குழந்தைகளுக்கு செரிமான பாதிப்பால் ஏற்படும் ஜுரம் குணமாக :

சிறிது நுணா இலைகள், சிறிது கொழுந்து வேப்பிலைகள், சிறிது சுக்கு, மிளகு, ஓமம் இவற்றை எடுத்துக்கொண்டு, ஒரு வாணலியில் நுணா இலைகள், வேப்பங்கொழுந்து இவற்றை இளஞ்சூட்டில் வதக்கி, பிறகு மூன்று டம்ளர் தண்ணீருடன் சுக்கு, மிளகு ஓமப்பொடி இவற்றை சேர்த்து, நன்கு கொதித்த வைத்து, கிட்டத்தட்ட முக்கால் டம்ளர் அளவுக்கு தண்ணீர் சுண்டிய பின், அந்த நீரை, தினமும் இருவேளை ஜுரம் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து வர, செரிமானமின்மையால் ஏற்பட்ட ஜுர பாதிப்புகள் விலகி, குழந்தைகள் நலமடைவர்.

வயிற்று உப்புசம் தடுக்க :

வயிற்று உப்புசம் தடுக்க :

சிறிது நுணா இலைகள், சிறிது கொழுந்து வேப்பிலைகளை வாணலியில் இட்டு அத்துடன் ஜீரகம், ஓமம், பெருங்காயம் இவற்றை சேர்த்து சற்று சூடாக்கி, பிறகு மூன்று டம்ளர் தண்ணீரை விட்டு காய்ச்சி, நன்கு கொதித்தபின் இந்த நீரை, தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வர, குழந்தைகளின் வயிற்றில் உள்ள காற்று நீங்கி, வயிற்று உப்புசம் என்ற பாதிப்பு குணமாகும்.

கிருமிகளை தடுக்கமூலிகை ஸ்பிரே!

கிருமிகளை தடுக்கமூலிகை ஸ்பிரே!

அக்காலங்களில் சீதோஷ்ண மாற்ற நிலைகளில் ஏற்படும் தொற்று வியாதிகளைத் தடுக்க, நுணாப்பட்டை, வேப்பிலை, மஞ்சள், உப்பு இவற்றை காய்ச்சி, வீடுகளைச் சுற்றி தெளித்து வருவர். இதன் மூலம், டைபாய்டு, காலரா, வைரஸ் ஜுரம் போன்றவை, தங்களை அணுகாமல் பார்த்துக் கொண்டார்கள்,

கொடிய உயிர்கொல்லி வைரஸ் நச்சுக்கு, நுணாவே சிறந்த தீர்வு என்று அக்காலத்தில் முன்னோர் கண்டறிந்து, நுனாவின் துணை கொண்டே, கொடிய வியாதிகளை போக்கினார்கள்.

சர்பத் :

சர்பத் :

"நோனி" எனும் நுணாவில் இருந்து உருவாக்கப்படும் சர்பத், உலக பிரசித்தம் என்பதும், அது இதய வியாதி போன்ற பல்வேறு வியாதிகளுக்கு தீர்வளிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். தற்கால ஆய்வுகளில், நுணா, புற்று வியாதிகளையும் போக்க வல்லது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 உடல் காயங்கள் ஆற :

உடல் காயங்கள் ஆற :

உடலில் ஏற்பட்ட காயங்கள், சிரங்குகள் ஆற, நுணா இலைச்சாற்றை அவற்றின் மேல் தடவி வரலாம். மேலும், நுணா இலைகளில் இருந்து உண்டாக்கப்படும் உப்பு, நாள்பட்ட காயங்களை ஆற்றும் இயல்புடையது.

மூட்டு வலிகள் குணமாக.

மூட்டு வலிகள் குணமாக.

நுணா இலைகளை தண்ணீரில் கொதிக் கவைத்து, அந்த நீரை இளஞ்சூட்டில், வலியுள்ள கைகால் மூட்டுக்களில், மெதுவாக ஊற்றி, இலேசாக மசாஜ் செய்து வர, வலிகள் விலகும். மேலும், துணியில் நனைத்து, ஒத்தடம் கொடுத்து வரலாம். நுணா மரப்பட்டைகளைக் கொண்டு உருவாக்கப்படும் தைலம், மூட்டுவலி நிவாரண தைலங்களில், அற்புத செயல் ஆற்றலால், முதலிடம் பெறுகிறது.

பல் வியாதிகள் குணமாக.

பல் வியாதிகள் குணமாக.

சிலருக்கு பற்களில் சொத்தை உண்டாகி, பற்களில் வலி அதிகரிக்கும்போது, நுணாக்காய்களை உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி, நெருப்பில் இட்டு கரியான தூளை எடுத்து, தினமும் பல் துலக்கி வர, பல் சொத்தை போன்ற பல் வியாதிகள் விலகி விடும்.

வயிற்றை சுத்தம் செய்ய :

வயிற்றை சுத்தம் செய்ய :

வயிற்றை சுத்தம் செய்ய, நுணா வேரை மூன்று டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டியபின், பருகி வர, உடனே வயிற்றுப்போக்கு ஏற்படும்.. மேலும், இரத்த அழுத்த பாதிப்புகள் நீங்கவும், இந்த நீரையே பருகி வரலாம்.

சுவாச பாதிப்புகள் அகல.

சுவாச பாதிப்புகள் அகல.

நுணாக்காய்களின் சாறெடுத்து அந்தச் சாற்றை, தொண்டைப்பகுதிகளில் தடவி வர, சுவாச பாதிப்பினால் ஏற்பட்ட குரல் அடைப்பு, தொண்டை கட்டுதல் போன்ற தொண்டை வியாதிகள் அகலும்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

பச்சை நிறத்தில் காணப்படும் நுணா காய்கள், பழுத்த பின், கருமை நிறத்தை அடையும், இந்த நுணா கனிகளை நீரில் இட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் சேர்த்து பருகக் கொடுக்க, ஆஸ்துமா போன்ற சளி பாதிப்புகள், உடல் சூட்டினால் உண்டான வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Nuna leaves to cure infants stomach problems due to indigestion

    Nuna leaves to cure infants stomach problems due to indigestion
    Story first published: Tuesday, October 17, 2017, 15:43 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more