பாப்பா தோலில் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்யணும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரியவர்களுக்கு இருப்பதை விட குழந்தைகளுக்கு மிகவும் சென்சிட்டிவான சருமம் இருக்கும். குழந்தைகளின் சருமத்தில் ஈரப்பதம் இருந்தாலும் ரூம் டெம்ப்பரேச்சரிலேயே அதிக நேரம் இருப்பது, உணவு ஒவ்வாமை , அலர்ஜி, க்ளைமேட் மாற்றங்கள் போன்றவற்றால் குழந்தைகளின் சருமம் வரண்டுவிடும்.

கைக்குழந்தைகளுக்கு சரும பாதிப்பு வந்தால் எப்படி தீர்க்கலாம் என்பதற்கு சில யோசனைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்சரைஸ் :

மாய்சரைஸ் :

குழந்தையை குளிப்பாட்டிய பின்பு ஹைப்போ அலர்ஜினிக் லோஷன் அல்லது ஆயில் கொண்டு லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இது குழந்தைகளின் சருமம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும்.

தாய்ப்பால் :

தாய்ப்பால் :

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அழுதால் மட்டும் கொடுக்காமல் நீங்களாகவே இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கலாம். அதே போல சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு அடிக்கடி ஸ்நாக்ஸ் கொடுக்காமல் தண்ணீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,இளநீர் போன்றவை கொடுக்கலாம்.

ஓட்ஸ் குளியல் :

ஓட்ஸ் குளியல் :

குழந்தையின் சருமம் அதிகம் வரண்டிருந்தால் ஓட்ஸ் குளியல் நல்ல பலன் அளிக்கும். ஒரு கப் ஓட்ஸை டவலில் கொட்டி நன்றாக முடிந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சுடான தண்ணீரில் முக்கி, நன்றாக பிழிந்து குழந்தையின் உடலை துடைத்தெடுக்கலாம்.

அலர்ஜி :

அலர்ஜி :

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் துணிகள் சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இதுவும் குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடும். சருமத்தில் பொரிப்பொரியாக வந்தாலோ அல்லது அலர்ஜி ஏற்ப்பட்டாலோ சுத்தமான தண்ணீரைக் கொண்டு துடைத்தெடுங்கள். பெரும்பாலும் ஆரம்ப மாதங்களில் இப்படியான சருமப் பிரச்சனைகள் வருவது சகஜம் தான் என்பதால் பயப்படத் தேவையில்லை.

டயாப்பர் ரேஷஸ் :

டயாப்பர் ரேஷஸ் :

இன்றைக்கு அனைத்து குழந்தைகளுக்கும் டயாப்பர் பயன்படுத்தப்படுகிறது. நாள் முழுவதும் டயாப்பர் போடப்பட்டிருப்பதால் இப்படியான ரேஷஸ் வரும்.

குழந்தைக்கு ரேஷஸ் வந்தால், ஒன்று டயாப்பர் அவர்கள் அளவிற்கு இல்லாது டைட்டாக இருந்திருக்க வேண்டும்.அல்லது நீங்கள் நீண்ட நேரம் டயாப்பரை போட்டிருப்பீர்கள். அல்லது டயாப்பர் குழந்தைக்கு ஒவ்வாது இருந்திருக்கும்.

குழந்தைக்கு நாள் முழுவதும் டயாப்பர் அணிவித்திருக்காமல் அவசியமான நேரங்களில் மட்டும் டயாப்பர் அணிவிக்கலாம் மேலும் வேறு ப்ராண்ட் மாற்றி பார்க்கலாம்.

பரு :

பரு :

குழந்தைக்கும் அலர்ஜியால் பருக்குள் ஏற்படும். ஆனால் பெரியவர்களுக்கு வருவது போல அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் அல்ல, குழந்தைகளின் சருமத்தில் வருகின்ற ஈஸ்ட் என்ற பூஞ்சைத் தொற்று தான் என்பதால் லோஷன், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

குழந்தையை சுத்தமாக பராமரித்தாலே இரண்டு மூன்று நாட்களில் தானாக குறைந்திடும்.

எக்ஸிமா :

எக்ஸிமா :

எக்ஸிமா எனப்படும் சரும பாதிப்பு பெரும்பாலும் குழந்தையின் முகத்தில் தான் ஏற்படும். உடலில் பல்வேறு இடங்களில் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் திட்டுத் திடாக இருக்கும்.

ஆஸ்துமா அலர்ஜி அல்லது சருமப் பிரச்சனை இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சும் போதும், அதீத வறட்சி ஏற்பட்டாலும் குழந்தைக்கு இப்படியான சரும பாதிப்பு ஏற்படும்.

அதிக வாசமுள்ள சோப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் துணியை அலசுவதற்கான சோப்பையும் அதீத வாசம் கொண்டதாக இருந்தால் தவிர்த்திடுங்கள்.

பவுடர் :

பவுடர் :

குழந்தைகளுக்கு வியர்க்கும் என்று அதிகமாக பேபி பவுடர் போடும் பழக்கம் அனேகமான பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. உண்மையிலேயே குழந்தைகளுக்கு பவுடர் அவசியமில்லை. அப்படி போட்டாலும் லேசாக போட்டாலே போதுமானது. அதிகமாக பவுடர் முகத்தில் அடித்தால் அவற்றை குழந்தை சுவாசித்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

குளித்தல் :

குளித்தல் :

குழந்தையை வாரத்தில் மூன்று நாட்கள் குளிப்பாட்டினாலே போதும். உடலில் தண்ணீர் ஊற்றி குறைந்தது பத்து நிமிடமாவது இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரிலேயே குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.

சோப் :

சோப் :

குழந்தைகளுக்கான சோப் பயன்படுத்தினாலும், இப்படியான சருமப்பிரச்சனைகள் இருக்கும் சமயங்களில் அதிக வாசனை இல்லாத சோப் மாற்றலாம். அதோடு, ஸ்டாண்டர்டு சோப் வாங்குவதற்கு பதிலாக குழந்தைகளுக்கான ஹைப்போ அலர்ஜினிக் சோப் கிடைக்கிறது அதைப் பயன்படுத்தலாம்.

துடைத்தல் :

துடைத்தல் :

குளித்து முடித்ததுமே துடைக்கிறேன் என்று அழுத்தித் துடைத்தால் குழந்தைகளின் சருமத்தை அது பாதிக்கும். சாஃப்ட்டான துணியைக் கொண்டு ஒத்தி எடுத்தாலே போதுமானது.

உடை :

உடை :

முன்னெச்சரிக்கையாக குழந்தையை பாதுகாக்கிறேன் என்று ஸ்வட்டர் குல்லா என நாள் பூராவும் அணிவித்திருக்க கூடாது. தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை கைக்குழந்தைகளால் சொல்ல முடியாது என்பதை உணர்ந்து அசௌகரியமான விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

நீண்ட நேரம் இருக்கமான உடை அணிவித்திருந்தால் வியர்வை வெளியேற வழியின்றி அது சரும பாதிப்பினையே ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Your Baby Skin dry.Tips here

Babies Skin also get dry.Here Some of the tips how can you overcome.
Story first published: Thursday, August 3, 2017, 10:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter