உங்க குழந்தையின் துணிகளை சரியாக துவைத்தால் இந்த பிரச்சனைகள் வராது!

Written By:
Subscribe to Boldsky

குழந்தைகளின் ஆடைகளை துவைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிலர் பெரியவர்களின் துணிகளை துவைப்பது போலவே குழந்தைகளின் ஆடைகளையும் துவைக்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. அதில் அலர்ஜி ஏற்படாமல் இருக்க மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேபிள்கள்

லேபிள்கள்

குழந்தைகளின் துணிகளில் உள்ள லேபிள்களில் குறிப்பிட்டுள்ள முறைப்படி, ஆடைகளை துவைக்க வேண்டியது அவசியம். இதனால் துணி எவ்வளவு நாள் ஆனாலும் புதியது போலவே இருக்கும். கைகளில் மட்டுமே துவைக்க வேண்டும் என்று ஒரு சில துணிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும்.

நிற வேறுபாடு காண வேண்டும்

நிற வேறுபாடு காண வேண்டும்

துணிகளை ஊற வைக்கும் போது அனைத்தையும் ஒன்றாக ஊற வைத்தால், ஒன்றின் கலர் மற்றொன்றில் பட்டுவிடும். எனவே ஒரே நிறம் உள்ள துணிகளை ஒன்றாகவும். வெள்ளை நிற துணிகளை தனியாகவும் ஊற வைத்து துவைக்கவும்.

கறைகள்

கறைகள்

குழந்தைகள் துணியை எளிதில் கறைப்படிய வைத்துவிடுவார்கள். இந்த கரைகளை காயும் வரை விட்டு விடாமல் உடனடியாக போக்கிவிடுங்கள். இல்லை என்றால் கறைகள் துணியை விட்டு போவது கடினம்.

டிடர்ஜெண்டுகள்

டிடர்ஜெண்டுகள்

டிடர்ஜெண்டுகளை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். சில டிடர்ஜெண்டுகள் குழந்தைகளது ஆடைகளை துவைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். இவற்றை பயன்படுத்துவதால் குழந்தைகளின் சருமத்தை பாதிக்காது.

துவைக்கும் போது...

துவைக்கும் போது...

குழந்தைகளின் ஆடைகளை துவைக்கும் போது உட்புறமாக திருப்பி போட்டு துவைக்க வேண்டும். இதனால் ஆடைகளில் உள்ள டிசைன்கள் பாதுகாப்பாக இருக்கும்.

காயவைத்தல்

காயவைத்தல்

ஆடைகளை காய வைக்கும் முன்னர், ஆடைகளில் உள்ள லேபிளில் வெயில் காய வைக்க கூடாது என்று இருந்தால், வெயிலில் காய வைக்க வேண்டாம். மிதமான வெயில் உள்ள இடங்களில் ஆடைகளை காயப்போடுவதினால், ஆடைகளில் உள்ள பாக்டீரியாக்கள் ஒழிந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to wash baby cloths

how to wash baby cloths
Story first published: Tuesday, August 22, 2017, 11:58 [IST]
Subscribe Newsletter