விந்தணு தானம் மூலம் தந்தையின்றி பிறக்கும் குழந்தை எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை -ஆய்வு!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

திருமண வாழ்க்கையில் ஈடுப்பாடு இன்றி இருக்கும் பெண்கள் சிலர் திருமணம் இல்லாமல் விந்தணுக்களை தானம் செய்பவர்கள் மூலம் தாயாகின்றனர். இவ்வாறு விந்தணு தானத்தின் மூலம் தாயாகும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பற்றி முழுமையாக இந்த பகுதியில் காணலாம்.

இன்னும் 30 வருடங்களில் குழந்தை பெற உடலுறவு தேவையில்லை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநிலை மாறுபடுவதில்லை

மனநிலை மாறுபடுவதில்லை

விந்தணு தானத்தின் மூலம் அம்மாவால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைகளை, தாய் மற்றும் தந்தையால் வளர்க்கப்படும் குழந்தைகளோடு ஒப்பிடும் போது எந்த வித்தியாசமும் தென்படவில்லை என ஆராச்சிகள் தெரிவிக்கின்றன.

பொருளாதரம்

பொருளாதரம்

ஒரு குடும்பத்தில் ஆண் தான் பெரும்பாலும் நிதிச்சுமையை சுமக்க வேண்டியுள்ளது. இருப்பினும் ஆண்துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களாலும் கூட எந்த வித நிதி நெருக்கடியும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடிகிறதாம்.

விந்துதானம்

விந்துதானம்

நிறைய பெண்கள் தற்போது ஆண் துணை இல்லாமல் தாயாக முன்வருகின்றனர். இவ்வாறு ஆண்களால் தானம் செய்யப்படும் விந்தணுக்களின் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 4,675 பெண்கள் தாயாகி உள்ளனர்.

முந்தைய ஆய்வு

முந்தைய ஆய்வு

ஆண் துணை இன்றி தாயாகும் பெண்களால் குழந்தைகளை பொருளாதார நெருக்கடி இன்றி வளர்க்க முடியாது என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போதைய ஆய்வுகள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்க்கும் குழந்தைக்கு இணையாக தாய் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள் இருக்க முடியும் என தெரிவிக்கின்றன.

மனநல ஆலோசனை

மனநல ஆலோசனை

ஒரு பெண் தனியாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த பெண் அவருக்கு மனநல ஆலோசனை கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த மனநல ஆலோசனை பெற்று, சில விஷயங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே அவரால் ஒரு குழந்தையை எந்த வித மன வருத்தமும் இன்றி சிறப்பாக வளர்க்க முடியும்.

விவாகரத்தான பெற்றோர்கள்

விவாகரத்தான பெற்றோர்கள்

பெற்றோர்களின் சண்டைகள் மற்றும் விவாகரத்து ஒரு குழந்தையின் மனதை காட்டாயம் பாதிக்கும். ஆனால் இது போன்று ஆண் துணையின்றி விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் மனநிலை தந்தையில்லாமல் வளர்வதால் பாதிக்காது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வில் அறியப்பட்ட உண்மை

ஆய்வில் அறியப்பட்ட உண்மை

விந்தணு தானத்தின் மூலம் தந்தை இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் சமூக பழக்கங்களில் எந்தவித மாற்றமும் உண்டாவது இல்லை. அவர்கள் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்ற குழந்தைகளை போலவே பழகுகின்றனர்.

பெற்றோர்கள் இருவராலும் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித வேறுபாடுகளும் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Children Raised by Single Mothers Do Not Suffer Like Divorced Parents

Children Raised by Single Mothers Do Not Suffer Like Divorced Parents
Story first published: Thursday, July 6, 2017, 11:20 [IST]