பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு கார் பரிசாக கொடுத்து அதிர்ச்சியளித்த மாமியார்!

Posted By:
Subscribe to Boldsky

கள்ளிப்பால் கொடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஏற்கனவே போன நூற்றாண்டு பாட்டிகள் கள்ளிப்பால் கொடுத்ததால் தான், இன்று திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பல ஆண்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

Mother in law presented Car as a gift for Daughter in law

பெண் குழந்தை என்றால் ஏளனமா என்ன? உலகிற்கு விவசாயம் எவ்வளவு அவசியமோ, அப்படி தான் ஒரு குடும்பத்திற்கு பெண் குழந்தை. இதோ, பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு மாமியார் அளித்த மாபெரும் பரிசு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஷ்பு!

குஷ்பு!

குஷ்பு என்ற தன மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியின் காரணமாக மாமியார் அவருக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

விருத்தி!

விருத்தி!

ஒரு குடும்பம் வம்ச விருத்தி அடைய வேண்டும் என்றால் பெண் தேவை. ஆனால், அவள் மூலமாக ஒரு பெண் குழந்தை என்றால் வேண்டாம். இது தான் 20 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் எழுதப்படாத விதிவிலக்கு.

கருகலைப்பு!

கருகலைப்பு!

கருவில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து தம்பதியினர் இடம் சொல்லக் கூடாது என சட்டம் வந்ததற்கு காரணமே பெண் சிசு கொலை, கருகலைப்பு நிகழ்வுகளால் தான்.

பாரம்!

பாரம்!

பெண் குழந்தை என்றால் குடும்பத்திற்கு ஒரு பாரம் போன்று தான் சித்தரித்து வந்தனர். இந்த தலைமுறையில், ஆண்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என முன்னேறி நிற்கின்றனர் பெண்கள்.

குப்பைத்தொட்டியில் வீசுதல்...

குப்பைத்தொட்டியில் வீசுதல்...

மாமியார் திட்டுவார், வீட்டை விட்டு விரட்டுவார் என்ற அச்சத்தால் கிராம புறங்களில் வாழும் எத்தனையோ பெண்கள், தான் ஆசையாக பெற்றெடுத்த குழந்தையை பெண் என்பதால் வீசியுள்ளனர் என்பதை நம்மால் எளிதாக மறக்க மடியாது, மறுக்க முடியாது.

புரட்சி மாமியார்!

புரட்சி மாமியார்!

சமீபத்தில் பிரேமா தேவி எனும் மாமியார், குஷ்பு எனும் தன் மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தன் மருமகளுக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்து அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

ஆண் / பெண்!

ஆண் / பெண்!

ஆண் குடும்பத்தை காக்க பிறந்தவன் என்றால், பெண் குடும்பத்தை உருவாக்க பிறந்தவள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அதற்கென பெண் குழந்தை பெற்றால் பரிசு கொடுக்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம்.

பெண் குழந்தையே பெரிய பரிசு தான். அந்த பரிசை உதாசீனப்படுத்த வேண்டாம். முக்கியமாக அந்த பரிசை கொடுத்த நபரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mother in law presented Car as a gift for Daughter in law

Mother in law presented Car as a gift for Daughter in law
Story first published: Wednesday, November 9, 2016, 14:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter