உடற்கட்டு அழகை காட்டிலும் தாய்மையே பெரிது - பிரபல மாடல் அழகி பெருமிதம்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சரியாக சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்.. இதில் உடல்நலக்கோளாறுகளும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும். குழந்தை பிறப்பதால் , உடல் எடையும் அதிகரிக்கும். என்ன தான் கஷ்டம் இருந்தாலும் தான் பெற்ற குழந்தையை பார்க்கும் போது அந்த துன்பங்கள் எல்லாம் காணமல் போகும்.

வீட்டில் இருக்கும் பெண்களே உடல் எடையை பற்றி கவலைப்படும் போது பிரபலங்கள் கவலைப்படாமல் இருப்பார்களா? ஆனால் உடல் அழகு உண்மையான அழகு இல்லை குழந்தை தான் உண்மையான அழகு என்கிறார் கிறிஸ்டின் மெக்கின்னஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
14 வயதில்..

14 வயதில்..

கிறிஸ்டின் மெக்கின்னஸை 14 வயதில் அவரது தாய் முதல்முறையாக உணவு உண்ணுதல் குறைப்பாட்டிற்காக மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அது கருவுறுதலை பாதிக்கும் என சற்றும் நினைக்கவில்லை. என்ன தான் இருந்தாலும் எதிர்காலத்தில் தனக்கென ஒரு குழந்தை மற்றும் குடும்பம் வேண்டும் என அவர் நினைத்தார்.

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ்

சிறுவயதில் உண்டாகிய பிரச்சனை ஒரு புறம் இருக்க அவருக்கு பிசிஓஎஸ் பிரச்சனையும் இருந்தது தெரிந்தது. இது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இரட்டை குழந்தை

இரட்டை குழந்தை

இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அவர் தனது 24 வயதில் கர்ப்பமடைந்தார். அதுவும் அவருக்கு உண்டானது இரட்டை குழந்தைகள்.

உணவின் மீது பிரியம்

உணவின் மீது பிரியம்

கர்ப்பம் அடைந்த பிறகு அவருக்கு உணவு உண்பதில் அதிக பிரியம் உண்டானது. நன்றாக சாப்பிட்டாராம். அவரின் பக்கம் அனைவரது வாழ்த்துக்களும் வியப்புகளும் திரும்பின. இந்த வாழ்த்துகளை கேட்பது அவருக்கு எளிதான விஷயமாக இல்லை. ஏனெனில் அவர் பல பிரச்சனைகளை கடந்து கர்ப்பமானவர்.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

முதல் ஆறு மாதம் வரை அவர் தனது வீங்கிய வயிற்றை பார்த்து பார்த்து சந்தோஷம் கொண்டு இருந்தார். அந்த ஆறு மாதத்திற்கு பிறகு அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். அவரது உடலில் உண்டாகிய மாற்றங்களை அவர் உணர உணர ஆரம்பித்தார். அவரது உடல் எடை இருமடங்கானது. இரட்டை குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும்.

தாய்மை தான் அழகு

தாய்மை தான் அழகு

அவர் தனது கர்ப்ப காலத்தை திரும்பி பார்க்கும் போது, தனது இரண்டை குழந்தைகளை இறைவன் கொடுத்த தனது வாழ்நாள் அன்பளிப்பாக நினைக்கிறார். இந்த இரட்டை குழந்தைகளை தன் கையில் காணும் போது உடல் அழகு எல்லாம் பெரியது இல்லை குழந்தைகளுக்கு தாய் என்ற உணர்வு தான் பெரியது. தாய்மை என் மீது எனக்கே அதிக மரியாதையை கொடுத்துள்ளது. அதிக பொறுப்பை கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் எடை குறைய அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் நடப்பதை தவிர ஆரம்பத்தில் எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை என்றும், பிறகு ஒரு மணி நேரம் ஜிம்மிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தாயானார்

மீண்டும் தாயானார்

இப்போது இரட்டை சந்தோஷத்துடன் அவருக்கு மேலும் ஒரு சந்தோஷமும் சேர்ந்துள்ளது. ஆமாம் மீண்டும் அவர் தாயாகியுள்ளார். தாய்மை தான் பெண்ணுக்கு அழகு என்பதை இவர் மிகவும் அழகாக விவரித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Becoming mother taught Me To Respect And Appreciate My Body

this content about Christine McGuinness 's parenting experience